(46)

(46)

என்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு

சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு,

இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி

தந்துஉவ னாய்நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!

பதவுரை

எம்தம் பிரானார்

–

எமக்கு ஸ்வாமியாய்
எழில்

–

அழகிய
திருமார்வார்க்கு

–

திருமார்பை யுடையாய்
சந்தம் அழகிய

–

நிறத்தாலழகிய
தாமரை தாளர்க்கு

–

தாமரைபோன்ற திருவடிகளை யுடையரான தேவர்க்கு
இந்திரன் தானும்

–

தேவேந்த்ரனானவன்
எழில் உடை

–

அழகையுடைய
கிண்கிணி

–

கிணிகிணியை
தந்து

–

கொணர்ந்து ஸமர்ப்பித்து
உவனாய் நின்றான்

–

அதோயிரா நின்றான்

தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ. . .

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – இந்திரன் அரைச்சதங்கையைக் கொண்டுவந்து ஸமர்ப்பித்து அதோ நிற்கின்றான்காண் என்று சொல்லித் தாலாட்டுகிறாள்.  முன்னிரண்டடிகளும் படர்க்கையாயிருந்தாலும் முன்னிலைப் படர்க்கையெனக் கொள்க.  எழில் திருமார்வனும் தாமரைத்தாளனுமான உனக்கு என்றபடி.  ‘கிண்கிண்’ என்று ஒலிப்பதுபற்றிச் சதங்கைக்குக் கிண்கிணி என்று காரணப் பெயராயிற்று.  உவன் – நடுவிலிருப்பதைக் காட்டுஞ் சுட்டெழுத்தான ‘உ’ என்பதனடியாய் பிறந்த ஆண்பாற் பெயர்; அதிக தூரத்திலும் அதிக ஸமீபத்திலுமில்லாமல் நடுத்தரமாய் இருப்பவனென்று பொருள்.

English Translation

For my master of radiant chest and beautiful lotus feet, Indra gave these ankle-bells, and stands betwixt, Talelo.  O, Lotus-eyed Lord, Talelo.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top