(30)
வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறுபோல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்று மழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளியிழை யீர்வந்து காணீரே.
பதவுரை
| வந்த |
– |
(தன்னோடு விளையாட) வந்த |
| மதலை குழாத்தை |
– |
சிறுபிள்ளைகளின் கூட்டத்தில் |
| வலி செய்து |
– |
தன்வல்லமையைக் காட்டிக் கொண்டு |
| தந்தம் களிறுபோல் |
– |
கொம்பு முளைத்த யானைக்குட்டிபோல் |
| தானே |
– |
தானே முக்கியனாய் நின்று |
| விளையாடும் |
– |
விளையாடுமவனாய் |
| நந்தன் |
– |
நந்தகோபர்க்கு |
| மதலைக்கு |
– |
(விதேயனான) பிள்ளையாகிய கண்ணனுடைய |
| நன்றும் அழகிய |
– |
மிகவுமழகிதான |
| உந்தி இருந்த ஆ |
– |
நாபி இருக்கிறபடியை |
|
காணீர்! |
||
| ஒளி |
– |
ஒளியால்விஞ்சின |
| இழையீர் |
– |
ஆபரணங்களணிந்த பெண்காள்! |
|
வந்து காணீர்!! |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – கண்ணபிரான் தான் சிறு குழந்தையாயிருந்தாலும் தன்னோடு விளையாடுவதற்குக் கூட்டமாய் வரும் பாலகர்களையெல்லாம் தனது வல்லமையால் அடக்கி, அவர்களெல்லாம் ஒருபக்கமும், தான் மாத்திரம் ஒருபக்கமுமாக நின்று இப்படிதானே பிராதானனாய் நின்று விளையாடுவன்; அப்போதுதான் கொம்பு முளைக்கப்பெற்ற யானைக்குட்டியை த்ருஷ்டாந்தமாகச் சொல்லத்தகுந்திருப்பன்; இப்படிப்பட்டவனுடைய உந்தியைப் பாருங்களென்கிறாள்.
English Translation
Bright-jeweled Ladies, come here and see the perfectly beautiful navel of his child born to Nandagopa; like an elephant he plays with himself, ignoring the teams of children who have come to play.
