(30)

(30)

வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து

தந்தக் களிறுபோல் தானே விளையாடும்

நந்தன் மதலைக்கு நன்று மழகிய

உந்தி இருந்தவா காணீரே ஒளியிழை யீர்வந்து காணீரே.

பதவுரை

வந்த

–

(தன்னோடு விளையாட) வந்த
மதலை குழாத்தை

–

சிறுபிள்ளைகளின் கூட்டத்தில்
வலி செய்து

–

தன்வல்லமையைக் காட்டிக் கொண்டு
தந்தம் களிறுபோல்

–

கொம்பு முளைத்த யானைக்குட்டிபோல்
தானே

–

தானே முக்கியனாய் நின்று
விளையாடும்

–

விளையாடுமவனாய்
நந்தன்

–

நந்தகோபர்க்கு
மதலைக்கு

–

(விதேயனான) பிள்ளையாகிய கண்ணனுடைய
நன்றும் அழகிய

–

மிகவுமழகிதான
உந்தி இருந்த ஆ

–

நாபி இருக்கிறபடியை

காணீர்!

ஒளி

–

ஒளியால்விஞ்சின
இழையீர்

–

ஆபரணங்களணிந்த பெண்காள்!

வந்து காணீர்!!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கண்ணபிரான் தான் சிறு குழந்தையாயிருந்தாலும் தன்னோடு விளையாடுவதற்குக் கூட்டமாய் வரும் பாலகர்களையெல்லாம் தனது வல்லமையால் அடக்கி, அவர்களெல்லாம் ஒருபக்கமும், தான் மாத்திரம் ஒருபக்கமுமாக நின்று இப்படிதானே பிராதானனாய் நின்று விளையாடுவன்; அப்போதுதான் கொம்பு முளைக்கப்பெற்ற யானைக்குட்டியை த்ருஷ்டாந்தமாகச் சொல்லத்தகுந்திருப்பன்; இப்படிப்பட்டவனுடைய உந்தியைப் பாருங்களென்கிறாள்.

English Translation

Bright-jeweled Ladies, come here and see the perfectly beautiful navel of his child born to Nandagopa; like an elephant he plays with himself, ignoring the teams of children who have come to play.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top