(18)

(18)

கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்

பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்

ஐய நாவழித் தாளுக்குஅங் காந்திட

வைய மெழும்கண் டாள்பிள்ளை வாயுளே.

பதவுரை

கையும்

திருக்கைகளையும்
காலும்

திருவடிகளையும்
நிமிர்த்து

(நீட்டி) நிமிர்த்து
கடாரம்

கடாரத்தில் (காய்ச்சின)
நீர்

திருமஞ்சனத் தீர்த்தத்திலே
பசு சிறு மஞ்சளால்

குறுங்கண்ணான பசு மஞ்சளால்
பைய

திருமேனிக்குப் பாங்காக
ஆட்டி

ஸ்நாநம் செய்வித்து
ஐய

மெல்லிதான
நா

நாக்கை
வழித் தாளுக்கு

வழித்தவளான யசோதைக்காக
அங்காந்திட

(கண்ணன்) வாயைத்திறக்க, (யசோதையானவன்)
பிள்ளை

கண்ணபிரானுடைய
வாயுள்

வாயினுள்ளே
வையம் ஏழும்

உலகங்களையெல்லாம்
கண்டாள்

ஸாக்ஷத்கரித்தாள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – யசோதைப்பிராட்டி ஒருநாள் ஸ்ரீக்ருஷ்ணசிசுவைக் குளிப்பாட்டும்போது வழக்கப்படியே குழந்தையின் கையையும் காலையும் நீட்டி நிமிர்த்துப் பசுமஞ்சளைப் பூசி, நல்ல வாஸநாத்ரவ்யங்களைச் சேர்த்துக் காய்ச்சின  தீர்த்தத்தைக் கொண்டு குளிப்பாட்டி, முடிவில் மஞ்சள் தேய்வைக் கொண்டு நாக்கு வழிக்குமளவில் அந்தக் குழந்தை வாயைத் திறக்க, அந்த வாயிலே ஸகல லோகங்களையுங் கண்டாள்.  அர்ஜுநனுக்கு திவ்யசக்ஷுஸ்ஸைக் கொடுத்துத் தன்னுடைய விச்வரூபத்தைக் காட்டினாப்போலே யசோதைக்கும் தன்னுடைய ஸ்வந்தரமான இச்சையினாலே இப்படி காட்டியருளினனென்க.

English Translation

She washed her child in a bathtub gently stretching his arms and legs.  Then she opened his mouth and clean the tongue with a piece of tender turmeric, and saw the seven worlds in his gaping mouth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top