(19)
வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே.
பதவுரை
| வாயுள் |
– |
(பிள்ளையின்) வாயினுள்ளே |
| வையகம் |
– |
உலகங்களை |
| கண்ட |
– |
ஸாக்ஷாத்கரித்த |
| நல் மடவார் |
– |
வைல்க்ஷண்யத்தையும் மடப்பத்தையுமுடைய |
| மாதர் |
– |
ஸ்த்ரீகளானவர்கள், (‘‘இவன்) |
| ஆயர் புத்திரன் அல்லன் |
– |
இடைப்பிள்ளை யல்லன் |
| அரு தெய்வம் |
– |
பெறுதற்கரிய தெய்வம், |
| பாய சீர் உடை |
– |
பரம்பின புகழையுடையனும் |
| பண்பு உடை |
– |
குணங்களை யுடையனுமான |
| பாலகன் |
– |
(இந்த) சிறுப்பிள்ளையானவன் |
| மாயன் |
– |
ஆச்சர்யசக்தியுக்தன்’’ |
| என்று |
– |
என்று (ஒருவர்க்கொருவர்) சொல்லிக்கொண்டு |
| மகிழ்ந்தனர் |
– |
ஆநந்தித்தார்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – கண்ணனுடைய வாயில் ஸகல லோகங்களையுங்கண்ட யசோதையானவள் ஆநந்தத்தாலே மற்றுமுள்ள பெண்டுகளையும் அழைத்துக்காட்ட, கண்ணபிரான் அவர்களுக்கும் அருள்கூர்ந்து அப்படியே காட்டிக்கொடுக்க, அப்பெண்களெல்லாரும் யசோதையைப் போலவே கண்ணன் வாயில் ஸகல லோகங்களையுங் கண்டு ஆச்சரியப்பட்டு, ‘இவன் ஸாமாந்யனான இடைப்பிள்ளையல்லன்; ஸாக்ஷாத் பரமபுருஷனே இப்படிவந்து அவதரித்தானாக வேணும்’ என்று கொண்டாடிக் கூறினார்கள்.
English Translation
When the other good ladies saw the Universe in his mouth, they exclaimed with glee, “this is no ordinary cowherd-child, but the blessed Lord himself, endowed with all the auspicious qualities”.
