(986)
கொண்டல்மாருதங்கள்குலவரைதொகுநீர்க் குரைகடலுலகுடனனைத்தும்,
உண்டமாவயிற்றோனொண் சுடரேய்ந்த உம்பருமூழியுமானான்,
அண்டமூடறுத்தன்றந்தரத்திழிந்து அங்கவனியாளலமர, பெருகு
மண்டுமாமணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
பதவுரை
|
கொண்டல் |
– |
மேகங்களையும் |
|
மாருதங்கள் |
– |
வாயுஸமூஹத்தையும் |
|
குலம் வரை |
– |
குலபர்வதங்களையும் |
|
தொகு நீர் குரை கடல் |
– |
நீர் நிறைந்து கோஷம் செய்கிற கடல்களையும் |
|
உலகு அனைத்தும் |
– |
மற்றுமெல்லா வுலகங்களையும் |
|
உடன் உண்ட மா வயிற்றோன் |
– |
ஏககாலத்தில் அமுதுசெய்த பெரிய திருவயிறுடையனும், |
|
ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான் |
– |
சந்திரஸூர்யர்கள் பொருந்தியிருக்கிற மேலுலகத்திற்கும் காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனுமான எம்பெருமான் (எங்குளன் எனில்) |
|
அன்று |
– |
பகீரதன் கங்கையை அவதரிப்பித்த அப்போது |
|
அண்டம் ஊடு அறுத்து |
– |
ப்ரஹ்மலோகத்தை இடைவெளி யாக்கிக்கொண்டு |
|
அந்தரத்து இழிந்து |
– |
ஆகாசத்தில் வந்திழிந்து |
|
அங்கு |
– |
அங்கு நின்றும் |
|
அவனியாள் அலமர பெருகும் |
– |
பூமி நடுங்கும்படியாக (பூமியிலே) ப்ரவஹித்ததும் |
|
மண்டு மா மணி நீர் |
– |
நெருங்கி நிறைந்து தெளிந்த ஜலத்தை யுடையதுமான |
|
கங்கையின் கரை மேல் |
– |
கங்கையின் கரைமேலுள்ள |
|
வதரியாச்சிராமத்து உள்ளான் |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலுள்ளான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
கொண்டல்மாரு தங்கள் குலவரைதொகுநீர்க் குரைகடலுலகுடனனைத்தும்* உண்டமாவயிற்றோனொண்சுடரேய்ந்த உம்பருமுழியுமானான் * அண்டமூடறுத்தன்றந்தரத்திழிந்து அங்கவனியாளலமர * பெருகும் மண்டுமாமணிநீர்க்கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
***(கொண்டல்மாருதங்கள்.) ஸகல பதார்த்தங்களையும் பிரளயங் கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும் உபயவிபூதி நாதனு மான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான்.
“ஒண்சுடரேய்ந்த உம்பருமூழியுமானான்” என்றது உபயவிபூதி நாதத்வத்தைச் சொன்னபடி. எங்கனே யென்னில்; உம்பரும் ஆனான் என்பதனால் மேலுலகத்திற்கு நிர்வாஹகனாயிருக்குந் தன்மை சொல்லிற்று. ‘ஊழியுமானான்’ என்பதனால், “****’’ ந காலஸ் தத்ர வை ப்ரபு: ” என்னப் பட்ட விண்ணுலகுக்குப் பிரதிகோடியாய், காலம் நடமாடக் கடவதான இவ்வுலகுக்கு நிர்வாஹகனாயிருக்குந் தன்மை சொல்லிற்று. (ஊழி–காலம்.)
(அண்டமுடறுத்து இத்தியாதி.) அண்டமென்று ப்ரஹ்மலோகத்தைச் சொல்லுகிறது; அதை ஊடறுத்து-நடுவே வழிபண்ணிக்கொண்டு, அந்தரத்து இழிந்து அதற்குக் கீழ்ப்பட்ட அந்தரிக்ஷலோகத்திலே வந்திழிந்து, அங்கு அவனியாள் அலமரப் பெருகும் – அங்கு நின்றும், பூமிப்பிராட்டி பொறுக்க மாட்டாமல் தடுமாறும்படி (பூமியிலே வந்து) பெருகுகின்றதாம். அப்படிப்பட்ட கங்கையின் கரைமேலுள்ளது வதரியாச்சிரமம். மாருதம், அண்டம், அவநி-வடசொற்கள். ….. ….. …… (க)
English Translation
The clouds, the winds, the mountain, ranges, the mighty ocean, the Earth, and all else, — He swallowed into his huge stomach. He bears the sky with the radiant orbs, and the ages of Time. Then in the yore, the river Ganga came ripping through the space from the sky and fell on the trembling Earth, with gushing waters. On the banks of the Ganga, He resides in Vadari-Ashrama.
