(979)
கானிடையுருவைச்சுடுசரம்துரந்து கண்டுமுங்கொடுந்தொழிலுரவோன்,
ஊனுடையகலத்தடுகணைகுளிப்ப உயிர்க்கவர்ந்துகந்தவெம்மொருவன்,
தேனுடைக்கமலத்தயனொடுதேவர் சென்றுசென்றிறைஞ்சிட, பெருகு
வானிடைமுதுநீர்க்கங்கையிங்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
பதவுரை
|
கானிடை |
– |
காட்டிலே |
|
உருவை |
– |
(மாரீசனாகிய) மாயா மிருகததை |
|
முன் கண்டு |
– |
கண்ணெதிரில் பார்த்து |
|
(அதன் பின்னே சென்று) |
||
|
சுடு சரம் துரந்து |
– |
(அதன் மேல்) தீக்ஷ்ணமான பாணத்தைப் பிரயோகித்தவனும் |
|
கொடு தொழில் உரவோன் |
– |
கொடுமையான தொழிலை யுடையனாய் பலசாலியான வாலியினுடைய |
|
ஊன் உடை அகலத்து |
– |
மாம்ஸமான மார்விலே |
|
அடு கணை குளிப்ப |
– |
தீக்ஷ்ணமான பாணத்தை அழுத்தி |
|
உயிர் கவர்ந்து |
– |
(அவனது பிராணனை அபஹரித்து |
|
உகந்த |
– |
மகிழ்ந்தவனுமான |
|
எம் ஒருவன் |
– |
விலக்ஷணனான அஸ்மத்ஸ்வாமி (எவ்விடத்திலுள்ளா னென்றால்) |
|
தேன் உடை கமலத்து அயனொடு |
– |
தேனையுடைய(திருநாபிக்) கமலத்தில் பிறந்த பிரமனோடு கூட |
|
தேவர் |
– |
மற்றுமுள்ள தேவர்களும் |
|
சென்று சென்று |
– |
பலகால் வந்து |
|
இறைஞ்சிட |
– |
வணங்கப் பெற்றதும் |
|
பெருகு வானிடை முது நீர் கங்கையின் கரைமேல் |
– |
பெருகுகின்ற புராதனமாக ஆகாசகங்கைக் கரைமீது உள்ளதுமான |
|
வதரி ஆச்சிராமத்து |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலே |
|
உள்ளான் |
– |
எழுந்தருளியிருக்கிறான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
கானிடையுருவைச்சுடுசரம்துரந்து கண்டு முன்கொடுந்தொழிலுரவோன் *
ஊனுடையகலத் தடுகணை குளிப்ப உயிர்கவர்ந்துகந்தவெம்மொருவன் *
தேனுடைக்கமலத்தயனொடுதேவர் சென்றுசென்றிறைஞ்சிட * பெருகு
வானிடைமுதுநீர்க்கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே
***- (கானிடையுருவை.) பெருமாளையும் பிராட்டியையும் பிரிப்பதற்கு மாயமான் வடிவுகொண்டு வந்த மாரீசனை ஒழித்தபடியையும், ஆச்ரிதனான ஸுக்ரீவனுக்கு விரோதியான வாலியை ஒழித்தபடியையும் முன்னடிகளில் அருளிச் செய்கிறார்.
இராமபிரானும் ஹீதாபிராட்டியும் பஞ்சவடியில் எழுந்தருளியிருக்கும் போது சூர்ப்பணகையின் கெட்ட நடத்தை காரணமாக ஜநஸ்தாநத்திலுள்ள அரக்கர்களை யெல்லாம் இராமன் வேரறுக்க நேர்ந்தகாலத்து அங்கு இராமபாணத்துக்குத் தப்பிப் பிழைத்து ஒளித்து ஓடிப்போன அகம்பநன் இலங்கைக்குச் சென்று ஜனஸ்தான மடங்கலும் பாழ்பட்ட செய்தியையும் இராமன் ஒருவராலும் வெல்லமுடியாதவ னென்பதையும் சொல்லி ‘ஸீதையை அபஹரித்துக் கொண்டு வந்தால் அந்த வருத்தத்தினால் இராமன் முடிந்து விடக்கூடும்’’ என்றான். இராவணன் அவனது சொற்படியே ‘ஸீதையைக் கொள்ளை கொள்ள உபாயமென்?’ என்று யோசித்து அங்கு நின்றும் புறப்பட்டு மாரீசனிருக்கு மிடத்திற்கு வந்து “நீ எனக்கு ஓருதவி செய்ய வேணும்” என்று சொல்லிக் தன் நினைவை வெளியிட, அது கேட்ட மாரீசன் “அப்பா இராவணா! அந்த மஹாநு பாவனுடன் உனக்குத்வேஷம் உதவாது; இந்த இராமன் சிறு பிள்ளையாயிருக்கும்பொழுதே விச்வாமித்ரயாகத்தில் அவருடைய பாணத்துக்கு இலக்காகி நான் பட்டபாடு இன்னும் மறக்கமுடியவில்லை; அத்திருநாமம் செவிப்படும் போதே என் உடல் நடுங்குகின்றது; இப்பேச்சை விட்டுவிடு; இதை நெஞ்சிலும் நினையாதே’ என்று ஒழுங்காக உபதேசிக்க, அதைக் கேட்டு இராவணன் இலங்கைக்குப் போய்விட்டான். பிறகு சூர்ப்பணகை சென்று தான் மூக்கறுப் புண்டபடியையும், தாசரதிகளுடைய ஸௌந்தர்ய பராக்ரமாதி குணங்கள் எல்லை யற்றிருக்கிறபடியையும் வீதையின் இருப்பையுஞ் சொல்லி; “இராகவனை நீ எவ்விதத்திலாவது பங்கஞ்செய்யாவிடில் நீ ஆண்பிள்ளையே யல்ல” என்று கூறி இரா வணனை நிந்தித்துக்கீழே விழுந்து புரண்டு அழ, இராவணன் மறுபடியும் மாரீசனிடஞ் சென்று நயபயங்களினால் அவனைத் தன் சொல்வழிப்படுத்திக்கொண்டு அம் மாரீசனும் தானுமாய்ப் புறப்பட்டு வந்து தான் ஓரிடத்தில் ஒளிக்திருந்தான். மாரீசன் தனது மாயாசக்தியினால் பொன் மானின் வடிவு எடுத்துக்கொண்டு வீதையின் பார்வையில் மேயத் தொடங்கினான். அப்பொன்மானை ஸீதை கண்டு அதைப் பிடித்துத் தரவேணுமென்று ஒரே பிடிவாதமாக இராமனிடம் சொன்னாள். அதற்கு இணங்கிய இராகவன் இளையோனைப் பிராட்டிக்குக் காவலாக வைத்துவிட்டுத் தான் வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு மானின் பின்னே போக அந்தமான் கொஞ்சங்கொஞ்சமாக ஒதுங்கி ஒதுங்கிப் போய் அக்காட்டில் நெடுந்தூரம் இராகவனை இழுத்துக்கொண்டு போய்விட்டது. அப்பொழுது இராகவன் “இவன் யாரோ அரக்கன்” என்று தெளிந்து அம்புகளை அவன் மீது எறிந்தார். அதனால் அடியுண்ட மாரீசன் மானுருவைவிட்டு நிஜரூபத்துடன் கீழே விழுந்து “ஹா லக்ஷ்மணா! ஹா ஸீதே! கெட்டேன்” என்று இராகவனைப்போல் கூச்சலிட்டுக்கொண்டு மரணமடைந்தான் என்ற வரலாறு இங்கு அறியத்தக்கது.
கானிடை உருவை= தண்டகாரண்யத்தில் வந்த மானை என்றபடி. உரு என்று மானுக்குப் பெயர். கொடுந்தொழிலுரவோன் என்று வாலியை நினைக்கிறது. இராமன், தன் விஷயத்தில் யாதொரு அபராதமும் செய்தறியாத வாலியைக் கொன்றது பிசகு என்று சொல்லுமவர்கட்கும் ஸமாதாநம் சொல்லுகிறவர் போல் கொடுந்தொழில் என்று வாலிக்கு அடைமொழி கொடுக்கிறார். வாலி இராமன் விஷயத்தில் தீங்கு ஒன்றும் செய்யாவிடினும் கொடியவர்களைத் தண்டித்தல் கொற்றவனுடைய கடமையாதலால் கண்டித்தனனென்க. எவ்வகைப் பெருந்தீங்கு செய்திருந்தாலும் சரணமடைந்தால் அவர்களைப் பாதுகாக்க வேண்டியதென்கிற சிறந்த தருமத்கை ஸுக்ரீவன் விஷயத்தில் வாலி கைவிட்டதனாலும், பிரான் மனைவியைக் காதலித்துக்கவர்தல், தம்பியினிடம் பகைபாராட்டுதல், வலியழிந்து புறங்கொடுத்து ஓடுகின்றவனைத் துரத்தித் துரத்திக்கொல்லத் தொடங்குதல் முதலிய தீச்செயல்கள் வாலியிடம் இருந்ததனாலும்–சரணாகதரக்ஷணத்தையே விரதமாகக் கொண்டவனும் ஏகபத்நீ விரதமுடையவனும் தம்பியைத் தன்னுயிர் போலக் கொள்பவனும், வலியிழந்த பகைவனை ( இன்று போய் நாளைவா’ என்று அன்போடு சொல்லி விடுத்தருளும் மஹாவீரனுமான சக்ரவர்த்தித் திருமகன் வாலியை அழிக்கலானான் என்று காட்டுகிறார் கொடுந் தொழிலுரவோன் என்பதனால்.
உரவோன் = உரம் என்று வலிவுக்குப் பெயர்; பலசாலிகளில் மிகப் பிரசித்தனாதலால் உரவோன்’ என்ற சொல்லைக்கொண்டே வாலியைக் குறிப்பிடுகிறார். உத்தர ஸ்ரீராமாயணத்தில் முப்பத்தொன்பதாவது ஸர்க்கத்தில் வாலியினது வலியின் பெருமை விசித்திரமாக விவரிக்கப்பட்டுள்ளது. அதனை இங்கே சுருக்கி யுரைப்போம் ;
பலசாலிகளைப் பலாத்காரமாகச் சண்டைக்கழைத்து வெற்றிபெறவேணு மென விரும்பி பூமிமுழுமையும் திரியத்தொடங்கின இராவணன் கிஷ்கிந்தை யிற்சென்று வாலியைத் தன்னுடன் போர் புரிய விளித்தனன் ; அப்போது அங்கு வாலியில்லாமையால் அங்கிருந்த ஒரு வாநரன் வந்து, ‘அமர்புரிய ஆவல்கொண்ட அரக்கர் தலைவரே! உமக்கு எதிர்நிற்கவல்ல வாலி இப்பொழுது இங்கில்லை; நான்கு ஸமுத்ரமுஞ் சென்று ஸந்தியோபாஸநஞ் செய்து இன்னு மொரு முஹூர்த்தத்திற்குள் இவ்விடம் திரும்பிவருவார்; அதுவரை இங்கே காத்திரும். அவர் வந்தவுடனே உமக்கு மரணம் வித்தம்; அதற்குள்ளேயே மரணமடைய விரும்பி விரைகுவீராகில் உடனே தென் கடலுக்குச் செல்லுக; அங்கு நிலத்திலெழுந்த நெருப்புப்போலே வாலி வீற்றிருக்கக் காண்பீர்” என்று கூறினன். அதனைச் செவியுற்ற இராவணன் உடனே விமானமேறித் தென்கடலை நோக்கிச்சென்று அங்கு அந்தி தொழுதலில் ஏகாக்ரமாக நின்ற வாலியைக்கண்ணுற்று விமானத்தினின்றுமிறங்கி அப்படியே வாலியைப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்றெண்ணி அடி ஓசைப்படாது விரைவாக நடந்து சென்ற னன். இதனைக் கீழ்க்கண்ணாற் கண்ட வாலி சலியாது அங்கனமே நிற்க இராவணன் மெல்ல அருகில் வந்தவுடனே தன்னைப் பிடிக்கக் கைநீட்டிய அவனைத் தான் முன்னே பற்றிப் பிடித்தெடுத்துக் கக்ஷத்திலிடுக்கிக்கொண்டு அப்படியே ஆகாயத்தில் எழும்பி அதிக வேகமாகச் சென்று மற்ற மூன்று கடல்களிலும் வைதிகச்சடங்குகளைச் செய்துமுடித்து இராவணனைச் சுமந்தவாறே புறப்பட் டுக் கிஷ்கிந்தாபுரி சேர்ந்து ஒரு தோப்பில் இறங்கினதும் இராவணனைக் கக்ஷத் தினின்றும் கீழேவிடுத்து நகைத்து’ ஓகோ! தாங்கள் எங்கிருந்து இப்பொழுது வருவது?’ என வினவினான். வாலியினது செய்கையால் மிக்க வியப்புற்ற ராவணன் மிகவுமிளைப்புற்றுக் கண்களை வெருள வெருள விழித்து நோக்கி ‘உனது வலியே வலி ; உனது வீரியமே வீரியம்’ என்று பலவாறு புகழ்ந்து பேசி அவனோடு ஸ்நேஹஞ் செய்து கொண்டான். இப்படிப்பட்ட பெருவீரனை வாலியை உரவோன் என்றல் மிகப் பொருந்துமன்றே. அவனுடைய மாம்ஸ ப்ரசுரமான மார்விலே கொயைம்பு அழுந்தும்படி பண்ணி அவ்வழியாலே அவ னுயிரை நீக்கி (ஆச்ரிதனான ஸுக்ரீவனுடைய விரோதியைப் போக்கப்பெற்றோம்’ என்று மன மகிழ்ச்சி கொண்ட மஹா நபாவன் எழுந்தருளியிருக்கு மிடம் ஸ்ரீபதரிகாச்ரமம். தாமரையிற் பிறந்த நான் முகன் முதலிய தேவர்கள் ‘நான் முன்னே, நான் முன்னே’ என்று ஸ்பர்த்தித்து அவகாஹிக்கப் பெற்றதும் மேன்மேலனப் பெருகிவருகின்ற தீர்த்தத்தையுடையதுமான கங்கையாற்றின் கரையிலுள்ள தாம் அந்த ஆச்ரமம். பெருகுவானிடை முதுநீர் கங்கையின் கரைமேல் வதரியாச்சிரமத்து-தேனுடைக்கமலத் தயனொடு தேவர் சென்று சென்றிறைஞ்சிட உள்ளான்” என்று அந்வயிப்பதும் பொருந்தும். அயன் = அஜன் ; அ- திருமாலிடத்தினின்று, ஜன்-தோன்றினவன். முதுநீர்= புதிதாகச் சுரந்த நீர் அல்ல ; “***”_ (இமம் மே கங்கே யமுநே ஸரஸ்வதி) என்று உபநிஷத்திலே சொல்லப்பட்டுள்ளமை யால் வேதம் போலவே நித்யமான நதி என்க. … … … (௨)
English Translation
Seeing the magic deer in the forest, my master shot an arrow, then also pierced the chest of mighty Vali and took his life. The lotus-seated Brahma and all the gods in hordes gather and worship Him on the banks of the celestial Ganga, at Vadari-Ashrama.
