(976)
புலன்கள்நையமெய்யில் மூத்துப் போந்திருந்துள்ளமெள்கி,
கலங்கவைக்கள்போத வுந்திக் கண்டபிதற்றாமுன்,
அலங்கலாயதண்டு ழாய்கொண்டு ஆயிரநாமம்சொல்லி,
வலங்கொள்தொண்டர்ப்பாடி யாடும் வதரிவணங்குதுமே.
பதவுரை
|
மெய்யில் |
– |
சரீரத்தில் |
|
புலன்கள் நெய்ய |
– |
செவி வாய் கண் முதலிய இந்திரியங்களெல்லாம் சிதிலமாம்படி |
|
மூத்து |
– |
கிழத்தன மடைந்து |
|
போந்து இருந்து |
– |
(நால்வரிருக்குமிடத்தில் தலை காட்டக்கூசி ஏகாந்த ஸ்தலத்திலே) போயிருந்து |
|
உள்ளம் எள்கி கலங்க |
– |
நெஞ்சு விகாரப்பட்டுக் கலங்க |
|
ஐக்கள் போத உந்தி |
– |
கோழைகளை அதிகமாக உமிழ்ந்து கொண்டு |
|
கண்ட |
– |
நெஞ்சில் தோன்றின வற்றை யெல்லாம் |
|
பிதற்றா முன் |
– |
பிதற்றுவதற்கு முன்னே,- |
|
வலம் கொள் தொண்டர் |
– |
சிறந்த பக்தர்கள் |
|
அலங்கல் ஆய தண் துழாய் கொண்டு |
– |
மாலையாகத் தொடுக்கப்பட்ட குளிர்ந்த திருத்துழாயைக் கையிற் கொண்டு |
|
ஆயிரம் நாமம் சொல்லி |
– |
ஸஹஸ்ரநாமங்களை அநுஸகத்தித்துப் |
|
பாடி ஆடும் |
– |
பாடுதலும் ஆடதலும் செய்யப்பெற்ற, |
|
வதரி வணங்குதும் |
– |
ஸ்ரீபதரியை வணங்குவோம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
புலன்கள்கைய மெய்யில் முத்துப் போந்திருந் துள்ளமெள்கி*
கலங்கவைக்கள் போதவுந்திக் கண்ட பிதற்றாமுன் *
அலங்கலாய தண்ழோய்கொண் டாயிரநாமம் சொல்லி *
வலங்கொள்தொண்டர் பாடியாடும் வதரி வணங்குதுமே.
***-[புலன்கள் நைய.) கருமேந்திரியங்களென்றும் ஜ்ஞானேந்திரியங்க ளென்றும் இந்திரியங்கள் இருவகைப்படும். வாய் கை கால் குதம் குறி என்பன கருமேந்திரியங்கள்; நாக்கு மூக்கு கண் காது உடல் என்பன ஞானேந்திரியங்கள். இவை யெல்லாம் சிதிலமாவது கிழத்தனத்தில். கண் தெரியாதபடியும் காது கேளாதபடியும் அடியெடுத்து வைக்க முடியாதபடியும் கிழத்தனம் அதி கரித்து ஒரு மூலையிலே கிடந்து கண்டபடி பிதற்ற நேருங்காலத்தில் வதரியை ஸ்மரிக்கத்தான் யோக்யதை ஏது? அப்போதைக் கிப்போதே வதரிவணங்குதல் நன்று .
“கண்ட பிதற்றாமுன் ” என்றவிடத்து கண்ட = பலவின்பால் வினையாலணையும் பெயர்; இரண்டாம் வேற்றுமைத் தொகை: கண்ட வார்த்தைகளையும் என்றபடி.
வலங்கொள் தொண்டர் = బలమ్ (பலம்) என்ற வடசொல் வலமெனத் திரிந்ததாகக் கொண்டால் ‘ வலங்கொள் ‘ என்றது ‘ப்ரபலர்களான ‘ என்றபடி: பகவானை அநுபவிப்பதில் கைதேர்ந்தவர்களான என்கை. வலங்கொள்ளுதல் என்று பிரதக்ஷிணஞ் செய்தலைச் சொல்லிற்றாகவுமாம். … … (க)
English Translation
Senses feebled, body overtaken by stiffness, spirit flagging, throat obstructed by phlegm, speech incoherent, ‘ere that happens, –Devotees of the Lord, circumambulate him with cool Tulasi wreath, chant his thousand names, then sing and dance in ecstasy, — Worship Him in Vadari.
