(970)
உறிகள்போல்மெய்ந்நரம் பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி,
நெறியைநோக்கிக்கண் சுழன்று நின்றுநடுங்காமுன்,
அறிதியாகில்நெஞ்சம் அன்பா யாயிரநாமஞ்சொல்லி,
வெறிகொள்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே.
பதவுரை
| மெய் நரம்பு |
– |
சரீரத்திலுள்ள நரம்புகள் |
| உறிகள் போல் எழுந்து |
– |
உறிகளைப் போலே மேலே கிளம்பித் தோன்றும்படியாக |
| ஊன் தளர்ந்து |
– |
மாம்ஸம் கட்டுக்குலைந்து |
| உள்ளம் எள்கி |
– |
நெஞ்சும் சிதிலமாகி |
| நெறியை நோக்கி கண் சுழன்று |
– |
நடந்து செல்லவேண்டிய வழியை நோக்கினவாறே கண்கள் சுழலமிட்டு |
| நின்று |
– |
போகமாட்டாதே ஸ்தம்பித்து நின்று |
| நடுங்கா முன் |
– |
நடுங்கும்படியான காலம் வருவதற்கு முன்னே, |
| நெஞ்சம் |
– |
ஓ மனமே! |
| அறிதி ஆகில் |
– |
நீ விவேகியாகில் |
| அன்பு ஆய் |
– |
பக்தி பூண்டு |
| ஆயிரம் நாமம் சொல்லி |
– |
(எம் பெருமானது) திருநாமங்களை யெல்லாம் சொல்லிக் கொண்டு, |
| வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதும் |
– |
பரிமளம் மிக்க வண்டுகள் இசைபாடப்பெற்ற ஸ்ரீபதரியை வணங்குவோம் வா. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
உறிகள்போல்மெய்ந் நரம்பெழுந்து ஊன்தளர்ந் துள்ள மெள்கி *
நெறியைநோக்கிக் கண்சுழன்று நின்று நடுங்காமுன் *
அறிதியாகில் நெஞ்சமன்பாய் ஆயிரநாமம் சொல்லி *
வெறிகொள்வண்டு பண்கள்பாடும் வதரி வணங்குதுமே.
*** –(உறிகள்போல்.) சரீரத்தில் நரம்புகளானவை இளமைப்பருவத் தில் மறைந்து கிடக்கும்; முதுமையில் சரீரம் பசையற உலர்ந்தபடியாலே அந்த நரம்புகள் உறிகள் போலே நீண்ட கொத்துக் கொத்தாகக் கிளம்பி விளங் கும் அதற்குத் தகுதியாக மாம்ஸம் க்ஷணமாகி மனமும் நலிவுபடும். இப்படிப்பட்ட நிலைமையிலும் ஓரிடத்தில் வெறுமனே கிடக்கமாட்டாதே தாம்பும் தடியுமாகப் புறப்பட்டு எங்கேயாவது போகத் தொடங்குவர்கள். நெடிய வழி யைப் பார்த்தவாறே கண்சுழலும்; பின்பு அடி பேர்ந் திடமாட்டாதே நடுங்கி நிற்பர்கள்; நெஞ்சமே! கிழத்தனத்தில் இங்கனே படும்பாடுகள் தெரிந்ததா உனக்கு; அப்போது பகவந்நாமங்களில் ஒன்றிரண்டையாகிலும் சொல் லத்தான் முடியுமோ? ஒரு திவ்ய தேசத்திற்குச் செல்லத்தான் முடியுமோ? ஒன்றும் முடியாது. நெஞ்சால் நினைக்கவுமரிது; வாயாற் சொல்லவுமரிது; காலால் நடக்கவுமரிது. ஆகையால் போகப்போகப் பார்த்துக் கொள்வோ மென்று ஆறியிராமல், சரீரம் கொஞ்சம் த்ருடமாயிருக்கு மிக்காலத்திலேயே பக்தியுடன் பகவானுடைய திருநாமங்களையெல்லாம் அநுஸந்தித்துக்கொண்டு பரம போக்யமான வதரியை வணங்குதல் நன்றுகாண் என்றாராயிற்று … (ங)
English Translation
Veins of the body swelling like thick rope, energy sapping, heart faltering, eyes rolling to see the path; ‘ere that happens, know what is right, O heart!, — Where fragrant bees sing in Panns and chant the thousand names, — Worship Him in Vadari.
