(969)

(969)

முதுகுபற்றிக்கைத்த லத்தால்  முன்னொருகோலூன்றி,

விதிர்விதிர்த்துக்கண் சுழன்று மேற்கிளைகொண்டிருமி,

இதுவென்னப்பர் மூத்தவா றென்று இளையவரேசாமுன்,

மதுவுண்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே.

பதவுரை

கை தலத்தால்

ஒரு கையாலே
முதுகு பற்றி

முதுகைப் பிடித்துக்கொண்டும்
முன் ஒரு கோல் ஊன்றி

(மற்றொருகையாலே) முன்னே ஒரு கொம்பை ஊன்றிக் கொண்டும்
விதிர்விதிர்த்து

(உடல்) நடுங்கியும்
கண் சுழன்று

(லொக்குலொக்கென்ற) பெரிய த்வநியைக்கொண்டு இருமியும்

(ஆக இப்படிப்பட்ட ஜூகுப்ஸைகளைக் கண்டு)

இளையவர்

இளம்பெண்கள் (மோவாய்த் கட்டையில் கையை வைத்துக்கொண்டு)
அப்பர் மூத்த ஆறு இது என் என்று ஏசா முன்

“இந்தப் பெரியவர் கிழத்தன மடைந்த விது என்ன விசித்திரம்!” என்று சொல்லிப் பரிஹஸிப்பதற்கு முன்னே,
மது உண் வண்டு

பூவில் தேனைப் பருகுகின்ற வண்டுகள்
பண்கள் பாடும்

இசை பாடப்பெற்ற
வதரி

ஸ்ரீபதரியை
வணங்குதும்

வணங்குவோம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

 

முதுகுபற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோலூன்றி *

விதிர்விதிர்த்துக் கண்சுழன்று மேற்கிளைகொண் டிருமி *

இதுவென்னப்பர் முத்தவாறென் றிளையவ ரேசாமுன் *

மதுவுண்வண்டு பண்கள்பாடும் வதரி வணங்குதுமே.

***-[முதுகுபற்றி.) கிழத்தனத்தில் நாலடி நடந்தாலும் பலஹீனத் தால் முதுகு நோகும்; ஒருகையாலே முதுகைப்பிடித்துக்கொள்ள வேண்டிய தாகும் ; முன் பக்கமாக வளைந்து விழாமைக்காக ஒரு தடியை ஊன்றிக்கொள்ள வேண்டியதாகும்; இப்படி இரண்டு பக்கமும் கப்புக்கால் கொடுத்து நடக்கச் செய்தேயும் உடம்பு நடுங்கியும் கண்கள் சுழலமிட்டும் பெரிய த்வனியுண்டாம்படி இருமல் செய்தும் வெகு ஆயாஸம் தோற்ற நடக்க நேருமாகையாலே அந்த கோரமான நிலைமையைக்காணும் மாதர்களெல்லாரும் மோவாய்க்கட்டையில் கையை வைத்துக்கொண்டு ( ஸ்வாமிகளே! நன்றாச்சுது ; இப்படியும் ஒரு கிழத் தனம் வருவதுண்டோ ? உலகில் எல்லாரும் மூப்பதுண்டு; இப்படி மூப்பவர்களை எங்குங்கண்டறியோம் ; இஃது என்ன விசித்திரமான மூப்பு!” என்று சொல்லி ஏளனஞ் செய்வர்கள் ; அப்படிப்பட்ட பரிதாபநிலைமையிலே வதரியை நெஞ் சாலும் நினைக்க ப்ராப்தி இராது; ஆகையாலே, அப்படிப்பட்ட கிழத்தனம் வருதற்கு முந்தியே கரணகளே பரங்கள் பூர்ணசக்தியோடு இருக்கும் கிளரொளி யிளமையில்தானே பரமபோக்யமான வதரியை வணங்குதல் நன்று என்றாரா யிற்று தேனைப்பருகின வண்டுகள் களிப்புக்குப் போக்குவீடாக எல்லாப் பண்

களையும் பாடப்பெற்ற வதரியென்றது- “எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே” என்னும்படியான எம்பெருமானைப் பூர்ணமாக அநுபவித்து அவ் வநுபவத்தாலுண்டாகிய ஆநந்தத்திற்குப் போக்குவீடாக “—” – ஏதத் ஸாம காயந்நாஸ்தே. ஹாவு ஹாவு ஹாவு” (தைத்திரீய உபநிஷத்து) என்றபடி ஸாமகாநம் பண்ணிக்களிக்கிற முமுக்ஷக்கள் வாழப் பெற்ற வதரி என்றபடி.

விதிர்விதிர்த்தல் –நடுங்குதல். மேற்கிளைகொண்டிருமி = மேலான கிளை என்று பெரிய த்வனியைச் சொல்லுகிறது; கிழவர்கள் லொக்கு லொக்கென்று இருமும்போது உரத்த ஒலி உண்டாதல் காண்க. ….. ….. …… (உ)

English Translation

Holding a bent back with one hand, leaning on a staff with the other, perspiring profusely, rolling the eyes, coughing loud and shrill; ‘ere young women call “O, this is our Father, old man”, in derision, — bumble bees drink and sing in Panns, — Worship Him in Vadari.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top