(941)

(941)

நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்

நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்

செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்

கன்ப னாய்அடி யேஞ்சதிர்த் தேனின்றே.

பதவுரை

அடியேன்

–

(இன்று ‘அடியேன்’ என்று சொல்லும்படி திருந்தின) நான்
முன் எலாம்

–

(ஆழ்வாருடைய விஷயீகாரம் பெறுவதற்கு) முன்பெல்லாம்
பிறர்

–

அயலாருடைய
நல்பொருள் தன்னையும்

–

நல்ல பொருள்களை
நம்பினேன்

–

ஆசைப்பட்டுக் கிடந்தேன்;
(பிறர்) மடவாரையும்

–

பிறருடைய ஸ்த்ரீகளையும்
நம்பினேன்

–

விரும்பிப்போந்தேன்;
இன்று

–

இப்போதோவென்றால்
செம் பொன் மாடம்

–

செவ்விய பொன்னாற் சமைந்த மாடங்களையுடைய
திரு குருகூர் நம்பிக்கு

–

திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்கு
அன்பன் ஆய்

–

பக்தனாகப்பெற்று
சதிர்த்தேன்

–

சதிரையுடையேனானேன் (சமத்தனாய்விட்டேன்.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸத்துக்கள் உம்மைக் கைவிடும்படி உம்பக்கல் என்ன புன்மையிருந்ததென்ன; அநாதிகாலமாகப் பரத்ரவ்யாபஹாரமும் பரதாரபரிக்ரஹமும் பண்ணிப்போந்தேன் என்று முன்னிரண்டடிகளாற் கூறியபின்னர், ‘இப்போது எப்படியிருக்கிறீர்?’ என்று கேட்க, இப்போது ஆழ்வாருடைய அருளுக்கு இலக்காகப்பெற்றுச் சதிரனாய்விட்டேன் என்கிறார் பின்னிரண்டிகளால்.

முதலடிக்கு- அயலாருடைய பொருள்களைக் களவுசெய்தேன் என்று ஸாமாந்யமாகப் பொருளாயினும் நன்பொருள் என்ற ஸ்வாரஸ்யத்தால் இங்கு ஆத்மாபஹாரம் பொருளாகக்கடவது.  ஈச்வரனுக்கு மேஷபூதமான விலக்ஷண ஆத்மவஸ்துவை யென்னுடையதாக அபிமாநித்திருக்கையாகிற ஆத்மாபஹாரக்களவைச் செய்துபோந்தேன் என்கை.   “***“-யோந்யதாஸந்தமாத்மாநம ந்யதா ப்ரதிபத்யதே! கிம்தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாபஹாரிணா’ என்றதை இங்கு அநுஸந்திக்க.

“***“-உத்தம: புருஷஸ்த்வந்ய?” என்கிற ப்ரமாணச்சாயையாலே எம்பெருமானைப் பிறர் என்கிறது.  இப்படி ஆத்மாபஹாரம் பண்ணினே னாகையால் அதற்குப் பலமான விஷய ப்ராவண்யப் படுகுழியிலே விழுந்தேனென்கிறார் இரண்டாமடியில்; பகவத் பாகவதவிஷயத்திலே வைக்கவேண்டிய மஹாவிஸ்வாஸத்தை மின்னிடை மடவார் திறத்திலே வைத்தேனென்கிறார்.

நம்பிள்ளை ஈடு:- “ரத்நாபஹாரம்பண்ண அஞ்சாதவன் விறகும் வைக்கோலும் களவுகாண அஞ்சுமோ? ஈஸ்வரன் ‘என்னுடையது’ என்று அபிமாநித்திருந்த (ஆத்ம) வஸ்துவை அபஹரித்தவன், ஸாமாந்யர் ‘என்னது” என்று அபிமாநித்திருக்கும் வஸ்துவை அபஹரிக்கச் சொல்லவேணுமோ?”

நம்புதல்-விரும்புதல்; “நம்பும் மேவும் நசையாகும்மே.”

இப்படியிருந்த நீர் ஆழ்வாரைக்கிட்டினபடி எங்ஙனே? என்று கேட்க; மடவார்களை ஆராதிப்பதற்காகப் பொருள்தேடிக் கொள்ளையடிப்பதற்கு இடம் பார்த்துத் திரியாநிற்கையில் அச்செம்பொன் மாடத்தைக் களவுகாணப் போனேன்; அங்கே வைத்தமாநிதியைக்கண்டு அகப்பட்டேனென்கிறார்; இவர்க்கு வைத்தமாநிதி ஆழ்வாரேயாம்.

சதிர்த்தேன்-க்ருதக்ருத்யனானேன் என்றபடி. சதுர என்ற வடசொல் சதிர் எனத்திரிந்து அது அடியாகப்பிறந்த வினைமுற்று இது.

English Translation

The days I envied others’ pelf, and sought the love of lund dames! Now I have the Lord himself, who’s king of Kurugur city famed.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top