(920)
மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள் வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும்
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள் இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவ ரேறே மாமுனி வேள்வியைக் காத்துஅவ பிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே.
பதவுரை
மேடு இன மேதிகள் |
– |
உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை |
தளை விடும் |
– |
(மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற |
ஆயர்கள் |
– |
இடையர் (ஊதுகிற) |
வேய்ங்குழல் ஒசையும் |
– |
புல்லாங்குழலின் நாதமும் |
விடை |
– |
எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள) |
மணி |
– |
மணிகளினுடைய |
குரலும் |
– |
ஓசையும் (ஆகிய) |
ஈட்டிய |
– |
இவ்விரண்டும் கூடின த்வநியானது |
திசை பரந்தன |
– |
திக்குக்களெங்கும் பரவி விட்டது; |
வயலுள் |
– |
கழனிகளிலுள்ள |
சுரும்பு இனம் |
– |
வண்டுகளின் திரள் |
இரிந்தன |
– |
ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின; |
இலங்கையர் குலத்தை |
– |
ராக்ஷஸவர்க்கத்தை |
வாட்டிய |
– |
உருவழித்த |
வரி இலை |
– |
அழகிய சார்ங்கத்தையுடைய |
வானவர் ஏறெ |
– |
தேவாதிதேவனே! |
மாமுனி |
– |
விச்வாமித்ர மஹர்ஷியினுடைய |
வேள்வியை |
– |
யாகத்தை |
காத்து |
– |
நிரைவேற்றுவித்து |
அவபிரதம் ஆட்டிய |
– |
அவப்ருதஸ்நாதம் செய்வித்தருளின |
அடு திறள் |
– |
(விரோதிகளை) ஒழிக்கவல்ல மிடுக்கையுடையனாய் |
அயோத்தி எம் அரசே |
– |
அயோத்தியாபுரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே! |
அரங்கத்தமா! பள்ளி எழுந்தருளாயே-. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இளங்கன்றாயிருக்கச் செய்தேயும் ஓங்கியிருப்பனவான எருமைக்கன்றுகளை மேய்ச்சலுக்காகக் கட்டவிழ்த்து விடுகிற இடையர் ஊதுகிற புல்லாங்குழலோசையும், சேக்களின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகளின் ஒலியும் இவ்விரண்டும் விரவிய த்வநியானது எத்திசையும் பரவிவிட்டது. சோலைக்குள் மாத்திர மன்றியே வெளிநிலமான வயலில் தடாகங்களிலுண்டான தாமரை முதலியவற்றில் வண்டுகளானவை ஆராவாரஞ்செய்து கொண்டு சிதறின; தேவர்களின் காரியமும் முனிவர்களின் காரியமுஞ்செய்தற்குப் படாதனபட்ட பெருமானே! இன்று எங்கள் காரியமும் சிறிது செய்வதற்கு பள்ளியுணர்ந்த ருளவேணு மென்கிறது.
[இரிந்தன சுரும்பினம்.] பொழுதுவிடிந்து பூக்கள் அலர்ந்தபிறகு வண்டுகள் வந்து படிந்து தேனைப் பருகிவிட்டு ஆர்த்துக் கொண்டு கிளம்பிவிட்டன- என்றும், நேற்று மாலைப்பொழுதில் மது பானத்திற்காகத் தாமரை மலரினுள் புகுந்தவாறே ஸூரியன் அஸ்தமிக்க, மலர் மூடிக்கொள்ள, இரவெல்லாம் அதனுள்ளே கிடந்து வருந்தின வண்டுகள் இப்பொழுது விடிந்தாவாறே பூக்கள் மலர, ஆரவாரஞ்செய்து கொண்டு கிளம்பி ஓடிப் போயின என்றும் கருத்துரைக்கலாம். இரிதல்- சாய்தல், ஓடுதல்.
“வேள்வியுங் காத்து” என்பது சிலர்பாடம். அவபிரதம்-அவப்ருதமென்னும் வடசொல் திரிபு; யஞ்ஞபாகாதிகளின் முடிவில் செய்யும் ஸ்நாநம் அயோத்தி – அயோத்யா …. ….. ….. …. (கூ)
English Translation
The sounds of the cowherd’s flute and the bells of the cattle blend and spread everywhere. In the fields the bitable bees- are swarming. O Lord of celestials who destroyed the Lanka clan, with a bow and stood guard over the seers’ sacrifices! O Lord, Ayodya’s coronated king! O Lora of Arangam, my Liege, pray wake up.