(855)

(855)

கடுங்கவந்தன் வக்கரன்க ரன்முரன்சி ரம்மவை

இடந்துகூறு செய்தபல்ப டைத்தடக்கை மாயனே

கிடந்திருந்து நின்றியங்கு போதும்நின்ன பொற்கழல்

தொடர்ந்துவிள்வி லாததோர்தொ டர்ச்சிநல்க வேண்டுமே.

பதவுரை

கடு

–

க்ரூரனான
கவந்தன்

–

கபந்ததென்ன
வக்கரன்

–

தந்தவக்த்ரனென்ன
கரன்

–

கரனென்ன
முரன்  சிறை அவை

–

முரனென்ன (இவர்களுடைய தலைகளை
இடந்து கூறு செய்த

–

சிந்நபிந்நமாக்கினவனும்
பல்படை தடகை

–

பலவகைப்பட்ட ஆயுதங்களைப் பெரிய திருக்கைகளிலே உடையனுமான
மாயனே

–

பெருமானே!
கிடந்து இருந்து நின்று இயங்குபோதும்

–

படுக்கை இருக்கை நிற்கை திரிகை முதலிய ஸர்வாவஸ்தைகளிலும்
நின்ன

–

தேவரீருடைய
பொன்கழல்

–

அழகிய திருவடிகளையே
தொடர்ந்து வீள்வு இலாதது ஓர் தொடர்ச்சி

–

இடைவிடாது அதுவர்த்தித் திருக்கையாகிற ஒரு தொடர்பை
நலக் வேண்டும்

–

தந்தருளவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸர்வாவஸ்தைகளிலும் எம்பெருமானுடைய திருவடிகளிலேயே நிரந்தர சிந்தனை நடைபெறவேணுமென்று பிரார்த்திக்கிறார்.

(கிடந்திருந்து இத்யாதி.) ****** என்ற ச்லோகம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது. படுத்துக்கொண்டிருக்கும் போதும் உட்கார்ந்திருக்கும்போதும் நிற்கும்போதும் திரியும் போதும் ஆக எல்லா வவஸ்தைகளிலும் தேவரீருடைய பாதாரவிந்த சிந்தனையே மேன்மேலும் கடந்து வருமாறு அருள் புரியவேணு மென்று பிரார்த்தித்தாராயிற்று.

English Translation

O Wonder-Lord with mighty arms that bear weapons in many forms! You killed and rolled the heads of all Kabanda, Vakradant, Mura. Your golden lotus feet I see in standing, sitting, sleeping pose. Pray make my thoughts to flow without a break on thee and thee alone!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top