(854)

(854)

திருக்கலந்து சேருமார்ப தேவதேவ தேவனே

இருக்கலந்த வேதநீதி யாகிநின்ற நின்மலா

கருக்கலந்த காளமேக மேனியாய நின்பெயர்

உருக்கலந்தொ ழிவிலாது ரைக்குமாறு ரைசெயே.

பதவுரை

திரு கலந்து சேரும்

–

பெரிய பிராட்டியார்  நித்யஸம்ச்லேஷம் பண்ணி வாழப்பெற்ற
மார்பு

–

திருமார்பையுடையனே!
தேவர் தேவர் தேவனே

–

ப்ரஹ்மாதிகளிற் காட்டிலும் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் தலைவனே!
இருக்கு கலந்த வேதம் நீதி ஆகி நின்ற

–

(பலவகைப்பட்ட) ருக்குக்கன் சேர்ந்திருக்கிற வேதங்களால் பிரதி பாதிக்கப்படுகையை ஸ்வபாவமாகவுடையனான
நின் மலா

–

பரிசுத்தனே
கரு கலந்த

–

பொன்னோடு  சேர்ந்த
காளமேகம் மேனி

–

காளமேகம்போன்ற திருமேனியையுடைய
ஆய

–

கண்ணபிரானே!
நின் பெயர்

–

உன் திருநாமஙக்ளை
ஒழிவு இலாது

–

நிரந்தரமாக
உரு கலந்து  உரைக்கும் ஆறு

–

திவ்யமங்களவிக்ரஹத்தோடு சேர்ந்து அநுஸந்திக்கும் வகையை
உரைசெய்

–

அருளிச் செய்யவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வார் தம்முடைய சரீரபந்தத்தை அறுத்து தந்தருள வேணுமென்று எம் பெருமானைப் பிரார்த்தித்தாலும் அவன் இப்போதே அது செய்யமாட்டானே; இந்த சரீரத்தோடே இவரைச் சிறிது காலம் வைத்து அநுபவிக்க விருப்பமுடையவனாதலால் ‘வேர்சூடுவார் மண்பற்றை உகுக்குமாபோலே’ இந்த ப்ராக்ருத சரீரத்தையே மிகவும் விரும்பியிருப்பவனிறே; அதனால், ‘ஆழ்வீர்! நீர் பிரார்த்திக்கிறபடி சரீரபந்தத்தை இப்போதே அறுத்துத் தர முடியாது; அதற்கு ஒரு காலவிசேஷம் உண்டு; பொறுத்திரும்’ என்ன; அப்படியாகில் தேவரீருடைய மேன்மைக்கும் நீர்மைக்கும் வடிவழகுக்கும் வாசகமான திருநாமங்களையாவது அடியேன் இடைவிடாது அநுஸந்தித்துக் கொண்டிருக்கும்படி அருள்புரிய வேணுமென்று பிரார்த்திக்கிறார். இருக்கு+கலந்த = இருக்கலந்த; “சங்கு – கதை, சங்கதை” போல. மூன்றாமடியில், ஆய! என்பது ‘ஆயன்’ என்பதன் விளி. ஹிரண்யவர்ணையான பிராட்டி சேர்ந்த கரிய திருமேனிக்குக் கருக்கலந்த காளமேகத்தை ஒப்புச் சொல்லிற்று ஒக்கும். கரு- பொன்; மின்னலைச் சொல்லிற்றாகக் கொள்க. கரு என்று சர்ப்பத்தைச் சொல்லிற்றாகவுமாய்; நீர்நிறைந்த காளமேகமென்றபடி. உருக்கலந்து = திருநாம ஸங்கீர்த்தகம் பண்ணும்போது திவ்யமங்கள விக்ரஹாநுபவம் நடைபெறவேண்டுமென்ற ஆசை விளங்கும்.

English Translation

O Lord with Lady-Sri on chest, O Lord of gods, O god of gods! O Lord of spotless hue that is bespoken of in Vedas four! O Lord with hue the dark of cloud and aura of the golden sky! Pray make me prate your name and form without an end for all my life.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top