(852)

(852)

இரந்துரைப்ப துண்டுவாழி ஏமநீர்தி றத்தமா

வரர்தரும்தி ருக்குறிப்பில் வைத்ததாகில் மன்னுசீர்

பரந்தசிந்தை யொன்றிநின்று நின்னபாத பங்கயம்

நிரந்தரம்நி னைப்பதாக நீநினைக்க வேண்டுமே.

பதவுரை

ஏமம் நீர் நிறத்து

மஹாஜலமான கடல்போன்ற நிறத்தையுடைய
அம்மா !

ஸ்வாமி!
இரந்து உரைப்பது உண்டு

(தேவரீரை) யாசித்துச் சொல்லும் வார்த்தையொன்றுண்டு
வாழி

பல்லாண்டு பல்லாண்டு;
மன்னு சீர்வரம் தரும் திருக்குறிப்பில்

(சேதநர்க்குச் ) சிறந்த வரங்களையருள்வதே இயல்வான (தேவரீருடைய) திருவுள்ளத்தில்
வைத்தது ஆகில்

அடியேனுக்கு ஏதாவது வரங்கொடுக்க நினைவுண்டாகில் (இந்த வரம் கொடுக்க வேணும்.)
பரந்த

கண்ட விடங்களில் அலைந்து திரிகிற
சிந்தை

எனது நெஞ்சானது
ஒன்றி நின்று

(தேவர் விஷயத்திலேயே) ஸ்திரமாயிருந்துகொண்டு
நின்ன

தேவரீருடைய
பாதபங்கயம்

திருவடித்தாமரைகளை
நிரந்தரம்

இடைவிடாமல்
நினைப்பது ஆக

தியானித்திருக்கும்படியாக
நீ நினைக்க வேண்டும்

தேவரீர் திருவுள்ள மிரங்க வேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில், பக்தியைத் தந்தருள வேணுமென்று பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், ‘உமக்கு நான் பக்தியைக் கொடுப்பதாவதென்ன? விஷயாந்தரங்களில் நின்றும் மீட்கப்பட்ட இந்திரியங்களைக்கொண்டு நம்மை நிரந்தரமாக நினைத்தால் அதுவே பரமபக்தியாகத் தலைக்கட்டுகிறது; காரியம் உம் கையிலே கிடக்க என்னை நிர்பந்திப்பானேன்?’ என்ன; பிரானே! அப்படி நிரந்தர சிந்தனை பண்ணுவது என் முயற்சியினாலேயே தலைக்கட்டி விடுமோ? தேவரீர் ஸங்கல்பியாதவளவில் அதுதானும் நடைபெறுமோ? ஆகையாலே அடியேன் தேவரீரையே நிந்தரம் நினைப்பேனாம்படி திருவுள்ளம்பற்றி யருளவேணுமென்கிறார்.

முதலடியின் முடிவில், அமா என்றது அம்மா! என்றபடி: தொகுத்தல், ஸ்வாமிந்!  என்கை. ‘இரந்துரைப்பதுண்டு” என்றவாறே எம்பெருமான் முகங்காட்டவில்லை; ‘இவ்வாழ்வார்க்கு காரியமொன்றுமில்லை; திருப்பித்திரும்பி ‘அருளாய், இரங்கு’ என்று பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்; இவர்க்கு நாம் முகங்கொடுக்கலாகாது’ என்று நினைத்து பாராமுகனாயிருந்தான்; அங்ஙனிருந்ததுகண்டு, வாழி என்று கம்பீரமான மிடற்றோசையோடே பேசினார்; அந்த மங்களசாஸன சப்தம் செவிப்பட்டவாறே எம்பெருமான் பரவசனாய் ஆழ்வாரை நோக்கினான்; நோக்குதலும் அபரிச்சிந்நமான கடல்போலே ச்ரமஹரமான திவ்ய விக்ரஹத்தை ஸேவித்து ‘ஏமநீர் நிறத்து அம்மா!” என்று பெருமிடறு செய்து கூப்பிடுகிறார் என்று விவரித்துக் கொள்க.

English Translation

Hail to you, O Lord of hue like ocean-deep, pray hears me speak! If you intend to grant a boon, then here is what I seek of thee: My thoughts are scattered all around, pray gather them and make them one. Direct them to thy lotus feet, eternally adorable.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top