(85)

(85)

ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தங் கோவினை

நாட்கமழ் பூம்பொழில் வில்லிபுத் தூர்ப்பட்டன்

வேட்கையி னால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்

வேட்கையி னால்சொல்லு வார்வினை போமே.

பதவுரை

ஆள்கொள்ள

(அனைவரையும்) அடிமை கொள்வதற்காக
தோன்றிய

திருவவதரித்த
ஆயர்தம் கோவினை

இடையர்களுக்குத் தலைவனான கண்ணனிடத்தில்
வேட்கையினால்

ஆசையினால்
நாள்

எந்நாளிலும்
கமழ்

மணம் வீசுகின்ற
பூ

புஷ்பங்கள் வீசுகின்ற
பொழில்

சோலைகளையுடைய
வில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த
பட்டன்

பெரியாழ்வார்
சொன்ன

அருளிச்செய்த
சப்பாணி ஈர் ஐந்தும்

சப்பாணி கொட்டுதலைக் கூறிய பத்துப் பாசுரங்களையும்
வேட்கையினால்

இஷ்டத்தோடு
சொல்லுவார்

ஓதுகிறவர்களுடைய
வினை

பாபங்கள்
போம்

அழிந்துபோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – இவ்விருள் தருமா ஞாலத்திலுள்ள சேதனர்களைத் திருத்தியடிமை கொள்வதற்காகத் திருவவதரித்த கண்ணபிரானை நோக்கிச் சப்பாணி கொட்டுமாறு சொன்ன இப்பாசுரங்கள் பத்தையும் அன்புடன் ஓதவல்லவர்கள் தீதிலராவர்.  மூன்றாமடியில் ‘வேட்கையால்’ என்று ஓதுவார்கள்.

அடிவரவு – மணி பொன் பன் துயிலா புட்டி தாரித்து பரந்து குரக்கினம் அளந்துஅடைந்து ஆட்கொள்ளத் தொடர்.

English Translation

This decad of Chappani is by Pattarbiran of Villiputtur surrounded by fragrance-wafting gardens, sung with love for the Lord who appeared as the king of the cowherd clan to redeem the world.  Those who sing it with love will be freed of despair.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top