(844)

(844)

சுரும்பரங்கு தண்டுழாய்து தைந்தலர்ந்த பாதமே

விரும்பிநின்றி றைஞ்சுவேற்கி ரங்கரங்க வாணனே

கரும்பிருந்த கட்டியேக டல்கிடந்த கண்ணனே

இரும்பரங்க வெஞ்சரம்து ரந்தவில்லி ராமனே.

பதவுரை

கரும்பு இருந்த கட்டியே

–

கருப்பங் கட்டிபோலே பரம போக்யனாயிருந்தவனே!
கடல் கிடந்த கண்ணனே

–

திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளும் ஸுலபனே!
இரும்பு

–

இரும்புபோல் வலிய ராக்ஷஸசரீரங்கள்
அரங்க

–

அழியும்படி
வெம்சரம்

–

தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த

–

பிரயோகித்த
வில்

–

ஸ்ரீசார்ங்கவில்லையுடையவனே!
இராமனே

–

இராமபிரானே!
அரங்கம் வாணனே

–

கோயிலில் வாழ்பவனே
கரும்பு

–

வண்டுகளானவை
அரங்கு

–

படிந்திருக்கபெற்ற
தண் துழாய்

–

குளிர்ந்த திருத்துழாய்
துதைத்து

–

நெருங்கி
அலர்ந்த

–

விசுஸித்திருக்கப்பெற்ற
பாதமே

–

(உனது) திருவடிகளையே
விரும்பி நின்று

–

ஸ்வயம்ப்ரயோஜகமாக ஆசைப்பட்டு
இறைஞ்சு வேற்கு

–

தொழுகின்ற அடியேன் பக்கல்
இரங்கு

–

க்ருபைபண்ணியருள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “அஞ்சலென்னவேண்டுமே” என்று அபயப்ரதாநமாத்ரத்தை வேண்டினாயினும் அவ்வளவினால் த்ருப்திபெறக் கூடியவரல்லரே; பெரியபெருமாள் திருவடிகளிலே நித்யாநுபவம் அபேக்ஷிதமாயிருக்குமே; அவ்வநுபவம் வாய்க்குமாறு கிருபை செய்தருளவேணுமென்கிறார் இதில். “நான்காமடியில், இரும்பு போல் வலியநெஞ்சினரான அரக்காக என்ன வேண்டு மிடத்து இரும்பு என்று அபேதமாகச் சொன்னது ரூபகாதிரயோக்தியாம். அரங்குதல்- (இங்கு) அழிதல்.

English Translation

O Lord with lovely lotus-feet and fragrant nectar-Tulasi wreath, O Sweetness of the cane-sugar, dear-to-eyes in ocean-deep! O The mighty bow-wielder who fired a rain of speeding darts! O Lord of Rangam-oor, I pray you heed the call of devotees.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top