(799)
குன்றில்நின்று வானிருந்து நீள்கடல்கி டந்துமண்
ஒன்றுசென்ற தொன்றையுண்ட தொன்றிடந்து
பன்றியாய் நன்றுசென்ற நாளவற்றுள் நல்லுயிர்ப டைத்தவர்க்கு
அன்றுதேவ மைத்தளித்த ஆதிதேவ னல்லயே
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
| குன்றில் நின்று |
– |
திருவேங்கடமலையில் நின்றும் |
| வான் இருந்து |
– |
பரமபதத்தில் வீற்றிருந்தும் |
| நீள் கடல் கிடந்து |
– |
பெரிதான திருப்பாற்கடலிலே திருக்கண்வளர்ந்தருளியும் |
| மண் ஒன்று சென்று |
– |
இப்பூமண்டலத்தை ஒருகால் (த்ரிவிக்ரமனாய்) வியாபித்தும் |
| ஒன்று அதை உண்டு |
– |
மற்றொருகால் அப்பூமியை விழுங்கியும் |
| ஒன்று அது பன்றி ஆய் இடந்து |
– |
மற்றொருகால் அப்பூமியை வராஹருபியாய் இடந்தும் |
| கன்று சென்ற நாள் அவற்றுள் |
– |
கன்றாய் சென்ற நாட்களிலே |
| நல் உயிர் படைத்து |
– |
நல்ல உயிரான மனிதர்களை ஸ்ருஷ்டித்தும் |
| அன்று |
– |
அப்போது |
| அவர்க்கு |
– |
அந்த மனிதர்கட்கு |
| தேவு |
– |
(தங்கள் தங்கள் குணங்களுக்குத் தக்கபடி ஆச்ரயிக்கத்தக்க) தேவதைகளை |
| அமைத்து |
– |
ஏற்படுத்தியும் (இப்படிகளாலே) |
| அளித்த |
– |
நன்மை செய்தருளின |
| ஆதிதேவன் இல்லையே |
– |
பரமபுருஷன் நீயேகாண். |
| பாட்டு |
– |
மன்னுமாமலர் |
English Translation
You stand on hill, you sit in sky, you sleep in sea and walk the Earth, O Lord who came as boar in time and lifted Dame Earth like a clod! O Lord who swallowed all the earth and brings them all out once again, O Lord who made the Maker too and watches over all the gods!
