(787)

(787)

ஆடகத்த பூண்முலைய சோதையாய்ச்சி பிள்ளையாய்

சாடுதைத்தோர் புள்ளதாவி கள்ளதாய பேய்மகள்

வீடவைத்த வெய்யகொங்கை ஐயபால முதுசெய்து

ஆடகக்கை மாதர்வா யமுதமுண்ட தென்கொலோ.

பதவுரை

ஆடகந்தபூண் முலை

ஸ்வர்ணமயமான ஆபரணங்களையணிந்த ஸ்தமங்களையுடையளான
அசோதை ஆய்ச்சி பிள்ளை ஆய்

யசோதையென்னும் கோபிகைக்கு புத்திரனாய்ப் பிறந்தருளி
சாடு உதைத்து

சகடாசுரனைத் திருவடிகளால் உதைத் தொழித்து
ஓர் புள்ளது அவி கள்ள தாயபேய் மகள்

சிறு குழந்தைகளை அனுங்கப் பண்ணுவதொரு பறவையின் வடிவுகொண்டு வந்தருத்ரிம மாதாவாகிய பூதனையானவள்
வீட

நீ உயிர்விட்டு மாளும்படி
வைத்த

உன் திருப்வளத்திலே வைத்த
வெய்ய  கொங்கை

(விஷம் தீற்றின) கொடிய முலையிலுள்ள
ஐய பால்

ஸூக்ஷ்மமான பாலை
அமுதுசெய்து

உறிஞ்சியுண்டு
ஆடகம் கை மாதர்

பொன்வளைகள் அணிந்த கைகளையுடைய ஸ்த்ரீகளினுடைய
வாய் அமுதம் உண்டது

அதரத்திலுள் அமுதத்தைப் பருகினது
என்கொல்

என்ன வித்தகம்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆடக்கை மாதர்வா யமுதமுண்டது என்கொல்?  = “உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தமில்மருவி உன்னோடுதங்கள் கருத்தாயின செய்துவருங் கன்னியரும் மகிழ” என்றபடி திருவாய்ப்பாடியிலுள்ள கன்னிகைகள் இவனை யிடுப்பில் எடுத்துக்கொண்டு தங்கள் தங்கள் மனைகளிலே கொண்டுபோக, யௌவந தசையைப் பரிக்ரஹிந்து வித்தகனாய்க்கலந்து  அவர்களது வாயமுகத்தை உண்பன்; அதனைச் சொல்லுகிறார். ஆடகக்கை மாதர் என்றது- பொன்வளைகளாலே அலங்கரிக்கப்பட்ட கையையுடைய பெண்கள் என்றபடி. (ஆடகம் என்ற காரணச்சொல் காரியத்திற்கு இலக்கணையால் வாசகமாயிற்று.) கண்ணபிரான் பிடிக்கும் கையென்றும், கண்ணபிரான் அணைக்குங் கையென்றும் அலங்கரிப்பவர்களாம். வாயமுதமுண்டது என்கொல்! = பூதபக்கல் உண்ட விஷத்திற்கு இவ்வமுதம் பரிஹாரமோ? என்றவாறு (ஙகூ)

English Translation

You became the child of golden-breasted cowherd-lady, O! You broke a cart and caught the flighty ogress Putana the foe; you set your lips on both her breasts and sucked her life. O Wonder-Lord you took a kiss, a sweetheart of the bangled dames.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top