(766)

(766)

அங்கமாறும் வேதநான்கு மாகிநின்ற வற்றுளே

தங்குகின்ற தன்மையாய்த டங்கடல்ப ணத்தலை

செங்கண்நாக ணைக்கிடந்த செல்வமல்கு சீரினாய்

சங்கவண்ண மன்னமேனி சார்ங்கபாணி யல்லையே.

பதவுரை

அங்கம் ஆறும்

சீக்ஷை முதலிய ஆறு அங்கங்களென்ன
வேதம் நாக்கும்

(அங்கியான) நான்கு வேதங்களென்ன (இவற்றுக்கு)
ஆதி நின்று

ப்ரவர்த்தகனாய் வேதங்களினுள்ளே
தங்குகின்ற தன்மையாய்

ஸுப்ரதிஷ்டிதமாயுள்ள ஸ்வரு பஸ்வாபங்களையுடையவனே!
ட கடல்

மஹா ஸமுத்திரத்திலே
பணம் தலை செம் கண் நாக அணை

படங்களின் தலையிலே சிவந்த கண்களை யுடையனான தீருவனந்தாழ்வானாகிற அணையிலே
கிடந்த

கண்வளர்ந்தருளுகிற
மல்குசெல்வம் சீரினாய்

நிறைந்த செல்வத்தையும் குணங்களையுடையவனே!
சஙக் வண்ணம் அன்னமேனி

சங்கினுடைய வர்ணம் போன்ற திருமேனியையுடையனாய் (கிருதயுகத்தில் திருவவதரித்து)
சாரங்கபாணி அல்லையே

(த்ரேதாயுகத்தில் இக்ஷ்வாகு குலத்திலே) கையும் வில்லுமாய் வந்து பிறந்தவன் நீயேயன்றோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வேதங்கட்கும் அவற்றின் அங்கங்கட்குமே விஷயமாகவல்ல ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய நீ ஆச்ரிதர்களை அநுக்ரஹிக்கைக்காகத் திருப்பாற்கடலிலேயே திருக்கண் வளர்ந்தருளி, அதுதானும் பரதசை யென்னும்படி அங்கு நின்னும் புறப்பட்டு ஆச்ரிதர் உகந்த ரூபத்தையே உனக்கு ரூபமாகக் கொண்டு வந்தவதரித்தாய் என்கிறார்.

அங்கம் ஆறும் = சீக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என வேதாங்கள் ஆறு. அச்சுக்கள், ஹல்லுக்கள் என்னும் அக்ஷரங்களை உச்சரிக்க வேண்டிய முறைகளும், அவை ஒன்றோடொன்று சேர வேண்டும் முறைகளும் சீக்ஷையில் சொல்லப்படும்; ப்ரக்ருதி ப்ரத்யயங்களின் பாகுபாடும், அவற்றின் அர்த்தவிவேகமும் வியாகரணத்திலும் நிருக்தியிலும் நிர்ணயிக்கப்படும்; காயத்ரீ, த்ரிஷ்டுப், ஜகதீ இத்யாதி ***-சந்தங்களில் கூறப்படும்; வேதோக்கர்மங்களைக் காலமறிந்து அநுஷ்டிக்க வேண்டுகையாலே அக்காலங்களை யறிவிக்கும் ஜ்யோதிஷம்: ஆச்வலாயநர், ஆபஸ்தம்பர் முதலிய மஹர்ஷிகளால் செய்யப்படட் கல்பங்களில் வைதிககருமங்களை அநுஷ்டிக்க வேண்டிய முறைமைகள் விளக்கப்படும். இப்படிப்பட்ட ஆறு அங்கங்களோடு கூடிய வேதங்கள் நான்கு. ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன. ஆக இந்த ஸாங்கவேதங்களாலும் எம்பெருமானுடைய ஸ்வரூபஸ்பாவங்களே ப்ரதிபாதிக்கப்படுகின்றமை ஒன்றரையடிகளாற் கூறப்பட்டதாயிற்று.

English Translation

The truth in all the Vedas-four, the truth in all the six Angas! O, Truth hidden, you chose to live in ocean-deep in Yoga-sleep. The hooded snake with ruby eyes is couch for you, O Lord of wealth! Your frame is white as conch at first, when Sarnga bow is held by you.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top