(747)

(747)

குரைகடலை யடலம்பால் மறுக வெய்து குலைகட்டி மறுகரையை யதனா லேரி

எரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன் இன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து

திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால் அரசாக வெண்ணேன்மற் றரசு தானே

பதவுரை

குரை கடலை

கோஷிக்கின்ற கடலை
அடல் அம்பால்

தீக்ஷ்ணமான அம்பைக் கொண்டு
மறுக எய்து

கலங்கும்படி எய்யத் தொடங்கி
குலை கட்டி

(அதில்) அணைகட்டி
அதனால்

அந்த அணைவழியாக
மறு கரையை ஏறி

(கடல் கடந்து) அக்கரை சேர்ந்து
எரி நெடு வேல் அரக்கரொடும்

(சத்துருக்களை) எரிக்கின்ற நீண்ட வேற்படையையுடைய இராக்கதர்களும்
இலங்கை வேந்தன்

இலங்கைக்கு அரசனான இராவணனும் ஆகிய அனைவர்களுடைய
இன் உயிர் கொண்டு

இனிய உயிரைக் கவர்ந்து (கொன்று)
அவன் தம்பிக்கு

அவ்விராவணனது தம்பியான விபீஷணனுக்கு
அரசும் இந்து

ராஜ்யத்தைக் கொடுத்து
திருமகளோடு

லக்ஷ்மியின் அவதாரமான பிராட்டியுடனே
இனிது அமர்ந்த

இனிமையாகச் சேர்ந்த
செல்வன் தன்னை

எல்லாவகைச் செல்வங்களுமுடையவனும்

தில்லை நகர் திருச் சித்ரகூடம் தன்னுள்

அரசு அமர்ந்தான்

தனது மேன்மை தோன்ற எழுந்தருளியிருப்பவனுமான
அடி சூடும்

இராமபிரானது திருவடிகளைத் தலைமேற் கொள்ளுதலாகிற
அரசை அல்லால்

அரசாட்சியைப் பெற விரும்புவேனேயன்றி
மற்று அரசு

அதற்கு மாறாக ஸ்வாதந்திரியம் பாராட்டுகிற அரசாட்சியை
அரசு ஆக எண்ணேன்

ஒரு பொருளாக மதிக்க மாட்டேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்படி ஸாது பரித்ராணமும் துஷ்ட சிக்ஷணமும் செய்தருளி உலகத்தை உய்வித்தருளிய இராமபிரானது திருவடிகளைச் சிரோபூஷணமாகக் கொள்வதே தமக்குப் பெருத்த ஸாம்ராஜ்யமென்பதை இப்பாட்டால் வெளியிட்டார்.

English Translation

My sweet Lord Rama shot an arrow that parted the sea. He built a bridge and made it to the other shore and took the lives of the terrible demons and their king Ravana, then gave the kingdom to his younger brother Vibhishana and reunited with his consort Sita. He resides in Tillainagar Tiruchitrakutam. Other than the sovereign rule of his sacred feet, I do not recognize any kingdom.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top