(746)
மனமருவு வைதேகி பிரிய லுற்றுத் தளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி
வனமருவு கவியரசன் காதல் கொண்டு வாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான்
சினமடங்க மாருதியால் சுடுவித் தானைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
இனிதமர்ந்த அம்மானை இராமன் றன்னை ஏத்துவா ரிணையடியே யேத்தி னேனே.
பதவுரை
| தனம் மருவு |
– |
(தான் விரும்புஞ்) செல்வமாகப் பொருந்திய |
| வைதேகி பிரியல் உற்று |
– |
பிராட்டி பிரியப்பெற்று |
| தளர்வு எய்தி |
– |
(அதனால்) வருத்தமடைந்து |
| சடாயுவை |
– |
ஜடாயுவென்னும் கழுகரசை |
| வைகுந்தத்து ஏற்றி |
– |
பரமபதத்திற் செலுத்தி |
| வனம் மருவு |
– |
(வாலிக்கு அஞ்சிக்) காட்டில் மறைந்து வசிக்கிற |
| கவி அரசன் |
– |
வாநரராஜனான சுக்ரீவனுடன் |
| காதல் கொண்டு |
– |
ஸ்நேஹஞ் செய்துகொண்டு |
| வாலியை கொன்று |
– |
(அவனது விருப்பத்தின்படி அவன் தமையனான) வாலியை வதைத்து |
| இலங்கை நகர் |
– |
இலங்காபுரியை |
| அரக்கர் கோமான் சினம் அடங்க |
– |
(அதற்குத் தலைவனாகிய) ராக்ஷஸராஜானான ராவணனுடைய செருக்கு ஒழியும்படி |
| மாருதியால் சுடுவித்தானை |
– |
அனுமானைக் கொண்டு எரிப்பித்தவனும் |
|
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள் |
||
| இனிது அமர்ந்த |
– |
இனிமையாய் எழுந்தருளியிருக்கிற |
| அம்மானை |
– |
ஸர்வேச்வரனுமான |
| இராமன் தன்னை |
– |
இராமபிரானை |
| ஏத்துவார் |
– |
துதிக்கின்ற அடியார்களுடைய |
| இணை அடியே |
– |
உபயபாதத்தையே |
| எத்தினேன் |
– |
துதிக்குந் தன்மையேன் (யான்.) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “தனமருவு வைதேகி” என்றவிடத்து தனம் என்பதை ?????? மென்ற வடசொல்லின் விகாரமாகக் கொண்டு வேறுவகையாகவும் பொருள் கூறலாமாயினும் விஷொஸ்ரீ என்றபடி பெருமாளுக்கு மென்ற வடசொல் விகாரம்.
English Translation
My sweet Lord Rama then became separated from his fond Vaidehi and swooned. He sent Jatayu to heaven and made friends with the forest dwelling monkey-king Sugriva and killed Vali. He countered Ravana’s anger by having Hanuman burn the Lanka City. He resides in Tillainagar Tiruchitrakutam. I offer praise to those who praise him.
