(729)

(729)

கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்

தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை

கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன

பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே.

பதவுரை

என் காகுத்தன் தன் அடிமேல்

–

என் ஸ்வாமியான இராமபிரான் விஷயமாக
தாலேலோ என்று உரைத்த

–

(கௌஸல்யை) தாலாட்டிச் சொன்ன பாசுரங்களை (உட்கொண்டு)
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன்

–

கொலைத்தொழில் புரிகின்ற வேலாயுதத்தைச் செலுத்த வல்லவரும் குடையையுடையவருமான குலசேகராழ்வார்
கன்னி நல் மா மதிள் புடை சூழ் கணபுரத்து

–

சாச்வதமான சிறந்த அழகிய மதிள்கள் நாற்புறமும் சூழப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே
சொன்ன

–

அருளிச்செய்த
பன்னிய நூல் தமிழ் மாலை பத்தும்

–

பரம்பியதாய் ஸலக்ஷணமாய்த் தமிழ்ப் பாமாலை ஆகிய இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்

–

அதிகரிக்க வல்லவர்கள்
பாங்கு ஆய பத்தர்கள்

–

அமைந்த பக்திமான்களாகப் பெறுவர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பாங்காய பக்தர்கள் = கௌஸல்யை திருத்தாயாராயிருந்து அநுபவித்தாற்போலவும், இவ்வாழ்வார் பக்தராயிருந்து அநுபவித்தாற்போலவும் பகவதநுபவத்தைப் பெறுவார்களென்க.

English Translation

This decad of Tamil songs by sharp spear-wielding King Kulasekara in the literary genre of Talattu was sung for the Kakutstha Lord Srirama, resident of high stone-walled Kannapuram. Those who master it will be good devotees of the Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top