(604)

(604)

மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்ற

மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற

அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்

தழுவநின்றுஎன்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே

பதவுரை

மழையே மழையே!

ஓ மேகமே!
புறம்

மேற்புறத்திலே
ஊற்றும்

என்னை அணைந்து அந்தஸ் ஸாரமான ஆத்மாவை உருக்கியழிப்பவராய்.
நல் வேங்கடத்துள் நின்ற அழகப்பிரானார் தம்மை

விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நிற்குமவரான அழகியபெருமாளை
மண் பூசி

மண்ணைப்பூசிவிட்டு
உள்ளாய் நின்ற மெழுகு ஊற்றினால் போல்

உள்ளே யிருக்கும் மெழுகை உருக்கிவெளியில் தள்ளுமாபோலே
என் நெஞ்சந்து அகப்பட தழுவநின்று

என்நெஞ்சிலே ஸேவை ஸாதிக்கிறபடியே நான் அணைக்கும்படி பண்ணி
என்னை

என்னை
ததைத்துக் கொண்டு

அவரோடே நெருக்கி வைத்து (பிறகு)
ஊற்றவும் வல்லையே

வர்ஷிக்கவல்லையோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- விண்ணீலமேலாப்பிலேகண்ட மேகங்கள் வர்ஷித்த பிறகு விகாஸத்தோடும் விலாஸத்தோடும்கூடிக் கிளர்ந்த பதார்த்தங்களை நோக்கி வார்த்தை சொல்லிக்கொண்டு வந்து ஆண்டாள் இப்போது பழையபடியே மேகங்களைவிளித்துக் கூறுகின்றாள் – ; மேகங்களானவை சிலபதார்த்தங்களை உத்தீபங்களாகக் கிளப்பி அவற்றின் வழியாலே நலிந்தது போதாமல் பின்னையும்விடாதேநின்று வர்ஷித்து ஸாக்ஷாத்தாகவும் நலியத் தொடங்கினபடியாலே அவற்றை நோக்கிக் கூறுகின்றன்ளென்க. மழைபொழிதலும் விரஹிகளுக்கு உத்தீபகமிறே.

இப்பாட்டில் அந்தபரம்பரையாக மூன்று எழுத்துப்பிழைகள் நெடுநாளாகவே நேர்ந்திருக்கின்றன. முதலடியின் முடிவில் “உள்ளாய்நின்று“ எனவும் இரண்டாமடியின்முடிவில் “வேங்கடத்துள்நின்று“ எனவும் ஈற்றடியின் முதலில் “தழுவிநின்று“ எனவும் பெரும்பாலும் பண்டிதபாமா விபாகமற அளைவராலும் ஓதப்பட்டுவருகின்றது. மூலப்பதிப்புகள் எல்லாவற்றிலும் இப்பிழைகள் உள்ளன. அடைவே, “உள்ளாய்நின்ற“ எனவும், “வேங்கடத்துள் நின்ற“ எனவும்; “தழுவநின்று“ எனவும் திருத்திக்கொள்க. கோயில் பத்தராவிஸ்வாமி இப்பிழைகளைக் குறிப்பாக எடுத்துக்காட்டினர்.

மழையேயென்று ஒருகாற்சொல்லாமல் இருகாற்சொல்லிவிளித்தது – மேகங்கள் எத்தனைதூரஞசென்றாலும் அவற்றின்செவியிலே இந்த்க் கூக்குரல் உறைப்பதற்காகவென்ப.

(மண்புறம்பூசி இத்யாதி) வெண்கலப்பதாத்திரம் முதலியன நிருமிப்பவர்கள், முதலில், பாத்திரத்தின் வடிவத்துக்கு ஒப்ப மண்ணைக்கட்டி அதன்மேல் சுற்றிலும் மெழுகைவளைத்து, பின்னையும் அம்மெழுகின்மேலே மண்ணைப் பூசி, மர்மமாக ஓரிடத்திலே த்வாரமாக்கி, உள்ளிருக்கும்மெழுகை வெதுப்பி அவ்வழியாலே வெளியே ஊற்றுவர்கள். அவ்வாறாக ஊற்றுகின்றார் வேங்கடத்துள் நின்ற அழகப்பிரானார் என்கிறவிதனால் தேறுங்கருத்து யாதெனில், மேலேமண்ணை இணைத்து உள்ளிருக்கும் மெழுகைத் தள்ளிவிடுவதுபோல, அப்பெருமானும் உடம்பின்மேலே அணைந்து உள்ளிருக்கும் ஸந்து உருகிக்கழிந்துபோம்படி செய்யவல்லவன் என்றதாகிறது. – “உடம்பிலே அணைந்து அகவாய் குடிபோம்படி பண்ணுமவராய்ந்து“ என்றருளிச்செய்தார் பெரியவாச்சான் பிள்ளையும்.

ஊற்றும் என்ற விஸேஷணம் அழகப்பிரானாரிடத்து அந்வயிக்கும். என்னை இப்பாடுபத்துகைக்கு அப்பெருமானிடத்துள்ள முக்கியஸாமக்ரி அழகுதான் என்றகருத்துத் தோன்ற அழகப்பிரானார் தம்மை என்கிறாள். (என்னெஞ்சத்தகப்பட இத்யாதி.) அப்பெருமான் என்நெஞ்சில் ப்ரகாஸிக்கிறாப் போலிருக்கிறானத்தனைபொழிய, அவனைநான் அணைக்கவிரும்பிக் கையை நீட்டப் புகுந்தால் அகப்படுவதில்லை. இப்படிநான் நோவுபடவொண்ணாமல் அப்பெருமான் எனது நெஞ்சில் ப்ரதிபாஸிக்கும்படியே அவனை நான் அணைக்கும்படி பண்ணிவைத்து (அதாவது, உஷையையும் அநிருத்தனையும் கூடவிலங்கிட்டு வைத்தாப்போலே அவனையும் என்னையும் ஒருவ்யக்தியாக நெருக்கி) ஓமேகமே! பிறகு நீ வர்ஷிப்பாயாகில் அப்போதன்றோ உன்னுடைய வர்ஷம் ஆநந்தகரமாயிருக்கு மென்கிறாளென்க. விஸ்லேஷகாலத்தில் வேண்டாத வர்ஷந்தானே ஸம்ஸ்லேஷஸமயத்தில் உத்தேஸ்யமாயிருக்குமிறே.

இப்பாட்டையும் மேற்பாட்டையும் திருமலை நம்பி அநுஸந்திக்கும்போதெல்லாம் நெடும்போது கண்ணுங் கண்ணநீருமாயிருந்து உருகிப்போவராம்; அதுபற்றி இவ்விரண்டுபாட்டையும் நம்பூருவாசாரியர்கள் மிகவும் ஆதரித்துப் போருவர்களாம்.

English Translation

The Beautiful Lord has emptied me, –like a metal caster casing his model with clay, and melting out the wax inside. O Dark rain-clod, passing over Venkatam! Would you pour over me and cast his image in my heart forever?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top