(598)

(598)

மேற்றோன்றிப் பூக்காள் மேலுல கங்களின் மீதுபோய்

மேற்றோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்

மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர் போலச் சுடாதுஎம்மை

மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துகொள் கிற்றிரே

பதவுரை

மேல் தோன்றி பூக்காள்

உயரப் பூத்திருக்கிற காந்தள் பூக்களே!
மேல் உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி

மேலுள்ள உலகங்களெல்லாவற்றையுங் கடந்து அவற்றுக்கு மேற்பட்டு விளங்குகின்ற ‘தன்னுடைச்சோதி‘ என்கிற பரமபதத்தில் எழுந்தருளி இருக்கிற
வேதம் முதல்வர்

வேதப்ரதிபாத்யனான பரம புருஷனுடைய
வலம்கையின் மேல் தோன்றும்

வலத்திருக்கையிலே விளங்காநின்ற
ஆழியின் வெம் சுடர் போல்

திருவாழியாழ்வானுடைய வெவ்வியதேஜஸ்ஸு போல
சுடாது

தஹியாமல்
எம்மை

என்னை
மாற்றோலைப்பட்டவர் கூட்டத்து

இந்த பிரக்ருதிமண்டலத்தை விட்டு நீங்கினவர்களுடைய திரளில்
வைத்துக்கொள்கின்றிரே

கொண்டு சேர்க்கவல்லீர்களோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ், கோடல்பூக்கள் பண்ணின ஹிம்ஸையைப் பொறுக்கமாட்டாமல் அவற்றில்நின்றும் கண்ணைமீட்டு மேலொருபக்கத்திலே வைத்தாள், அங்கே மேல் தோன்றிப்பூக்கள் மலர்நதுதோன்றின. அவை எம்பெருமானுடைய சிரிப்பைக் கோட்சொல்லிக்கொண்டு நலியவே, அவற்றைநோக்கிக் கூறுகின்றாள். தோன்றிப்பூ என்றாலும், காந்தட்பூ என்றாலும், கோடல்பூ என்றாலும் புஷ்பஜாதி ஒன்றேயாம், மேல்தோன்றிப்பூ என்றமையால் கீழ்ப்பாட்டிற்சொன்ன கோடல்பூக்கள் கீழேபடர் கின்றனவையென்றும், இவை மேலே படர்கின்றவையென்றும் அவாந்தரபேதம் அறியத்தக்கது, நிலஸம்பங்கி, கொடிஸம்பங்கி என்கிறாப்போலே.

“த்ருஷ்டி விஷம்போலே கோடல்பூக்கள் பாதகமாகப் புக்கவாறே அவற்றுக்கு இறாய்த்துக் கண்ணை மேலேவைத்தாள், அங்கே மேல்தோன்றிப்பூக்களாய் கிடந்தது, அவற்றைநோக்கி ‘மேல்தோன்றிப்பூக்கள்! என்கிறாள், அதுக்குத்தப்பினாரையும் அழிக்கக்கடவோமென்று அதுக்கு ஒருபேரும் பெற்று நீங்கள் மேலே புக்குநிற்பதே!“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகாண்க.

மேலுலகங்களின்மீது போய் மேல்தோன்றஞ்சோதி என்றது – பரமபதமாகிற சோதிமிக்க இடத்தையாம். அவ்விடத்திலே எழுந்தருளியிருக்கின்ற வேத வேத்யனான பரமபுருஷனுடைய வலத்திருக்கையின்மேல் விளங்குகின்ற திருவாழியாழ்வானுடைய வெவ்வியசுடர் ஆச்ரிதஸத்ருக்களை தஹிப்பதுபோல என்னை நீங்கள் தஹிக்கவேண்டாவென்று வேண்டிக்கொள்ளுகிறாள். இதனால் மேல்தோன்றிப்பூக்களின் தாபம் அஸஹயமாயிருத்தல் சொல்லிற்றாயிற்று.

எம்மை மாற்றோலைப்பட்டவர் கூட்டத்து வைத்துக்கோள்கிற்றிரே – கைவல்யமோக்ஷாநுபவம் பண்ணுகிறவர்களுடைய கோஷ்டியிலாவது என்னைக் கொண்டுபோய் வைப்பீர்களாவென இரக்கிறாளென்று திருமலைநம்பி அருளிச்செய்வராம். இவள் விஸலேஷத்தாலே மிகவும் நொந்துபோனபடியாலே ‘நமக்கு பகவதநுபம் கிடைக்காமற்போனாலும் போகிறது, இந்த ஸீரம் கழிந்தால் போதும், அதுவே பரமஸுகம், என்று நினைத்து இங்ஙனே கூறுகின்றாள்போலும். “மாற்றோலைப்பட்டவர்“ என்றால் கைவல்யமோக்ஷநிஷ்டர்களை எப்படிச் சொல்லுமென்னில், பகவதநுபவத்துக்கு மாறானவர்கள் என்று ஓலைப்பட்டவர்கள் – கேவலர் எனக்கொள்க. (ஓலைப்பட்டவர்கள் – ஓலையில் எழுதப்பட்டவர்கள்)

கேவலர்கள் தனித்தனியாக ஆத்மாநுபவம் பண்ணும்மவர்களேயன்றி, ஒரு கூட்டமாக இருந்து அநுபவம் பண்ணமாட்டாதவர்களாகையாலும், இங்கு “கூட்டத்து“ என்று அளிச்செய்திருப்பதாலும் அந்த அர்த்தம் அவ்வளவு ஸ்வரஸமல்லவென்று எம்பார் வேறுவகையாக அருளிச்செய்வராம் – மாற்றோலைப்பட்டவர்கூட்டமாவது அடியார்கள் குழாங்களாம், என்னை நித்யமுக்தர்களின் திரளின்நடுவே கொண்டுபோய் வைப்பீர்களாவென்கிறாள் என்று அருளிச்செய்வராம். இப்போது, மாற்றோலைப்பட்டவர் என்கிறது – ஸம்ஸாரத்திலிருந்து ஓலைமாற்றப்பட்டவர் என்றபடி.

அன்றியே, “மாற்றோலைப்பட்டு – அவர்கூட்டத்து“ என்றும் பிரித்து உரைப்பர் சில ஆசிரியர். யமன் தனது தூதர்களை நோக்கி ‘இன்னானைப் பிடித்து என்னிடம் கொண்டுவொருங்கள்‘ என்றுசொல்லி ஓலைச்சாசனம் எழுதித்தந்தனுப்பினால், சில ஸமயங்களில் அத்தூதர்கள் மாறுபாடாக வேறோருவனைப் பிடித்துக் கொண்டுபோய்விடுவதுண்டு, அப்படியே இப்போது இவ்வாண்டாளை ஹிம்ஸக்கும்படியாக இப்புஷ்பங்கள் எம்பெருமானால் நியமித்தனுப்பப்பட்டிருப்பதாலும் அந்த நியமநத்தை மாறாடி இவளைக்கொண்டுபோய் அவ்வெம்பெருமானுடைய கோஷ்டியிலே நிறுத்திவிடக் கூடுமென்கிற எண்ணத்தினால், ஓ! மேல்தோன்றிப் பூக்களே! என்னை ஹிம்ஸிக்கவேணுமென்கிற பகவாதாஜ்ஞையைமாறாடி அவ்வெம்பெருமானுடைய கோஷ்டியிலே என்னைக்கொண்டுபோய் நிறுத்துங்கள் என்கிறாளென்க. இப்பக்ஷத்தில் மாற்றோலைப்பட்டு – ஓலைமாற்றப்பட்டு – அவருடைய ஆஜ்ஞையைமாறாடி என்கை. இன்னும் பலபடியாகவும் பொருள்கொள்கள இடமுண்டு.

English Translation

O Kantal flowers blossoming on the high hedge! Rather than take me high above to the realm of the self-illumined Vedic Lord, and scorch me with the intense rays of his radiant discus, will you not leave me in the company of the head?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top