(430)

(430)

நான்ஏதும் உன்மாய மொன்ற றியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த

ஊனே புகேயென்று மோதும் போதுஅங் கேதும்நான் உன்னை நினைக்க மாட்டேன்

வானேய் வானவர் தங்க ளீசா மதுரைப் பிறந்த மாமாய னேஎன்

ஆனாய்நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.

பதவுரை

வான் ஏய்

பரமபதத்திற்பொருந்தியிரா நின்ற
வானவர் தங்கள்

நித்ய முக்தர்களுக்கு
ஈசா

தலைவனே!
மதுரை

திருவடத்துரையில்
பிறந்த

அவதரித்த
மா மாயனே

மிக்க ஆச்சரிய சக்தியையுடையவனே!
என் ஆனாய்

(பாகனுக்கு வசப்பட்டொழுகுகின்ற) யானைபோல் எனக்கு வசப்பட்டிருப்பவனே!

அரங்கத்து அரவு அணைப்பள்ளியானே!

நான்

அடியேன்
உன் மாயம்

உன் மாயைகளில்
ஏது ஒன்றும்

யாதொன்றையும்
அறியேன்

அறியமாட்டேன்;
நமன தமர்

யமகிங்கரர்கள்
பற்றி

(என்னைப்) பிடித்து
நலிந்திட்டு

(இந்தச் சரீரத்தோடே) பண்ணவேண்டிய ஹிம்ஸைகளையெல்லாம் பண்ணிவிட்டு, (பின்பு,)
இந்த ஊன் புகு என்று

‘இந்த யாதநாசரீரத்தினுள்ளே பிரவேசி’ என்று
மோதும்போது

அடிக்கும்போது
அங்கு

அவ்விடத்தில்

உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்;

நீ என்னை காக்க வேண்டும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அங்கேதும் நானுன்னை நினைக்கமாட்டேன்” என்றும் பாடமுண்டு “நானே துமுன்மாய மொன்றறியேன்” என்றவிடத்தில், (கீழ் இரண்டாம் பாட்டில்) ‘போமிடத்துன் திறத்தெத்தனையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயைவல்லை” என்றதை நினைக்க. இந்த ஊன்- விட்ட சரீரததிற்காட்டில் பிரவேசிக்கிற சரீரத்தின் கொடுமையைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த என். நரகத்தில் அதி தீவ்ரமான வேதனைகளை அநுபவிப்பதற்காக யமகிங்கரர்களினால் பூட்டப்படும் சரீரத்திற்கு ‘யாத்நாசரீரம்” என்று பெயர் அறிக. ஊனே. புகே ஏ இரண்டும் இசைநிறை என்னலாம். ….    …..   ……(அ)

English Translation

O Lord of Srirangam reclining on a serpent bed! I can scarce fathom any of your mysteries. When Yama’s agents seize and torture me, and force me into a chamber, I will not be able to think of you. O Lord of celestials. O Wonder-child of Mathura, my darling elephant protect me, you must.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top