(429)

(429)

செஞ்சொல் மறைப்பொரு ளாகி நின்ற தேவர்கள் நாயக னேஎம் மானே

எஞ்ச லிலென்னு டையின் னமுதே ஏழுல குமுடை யாய்என் னப்பா

வஞ்ச வுருவின் நமன்த மர்கள் வலிந்து நலிந்துஎன்னைப் பற்றும் போது

அஞ்சலை மென்றுஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.

பதவுரை

செம் சொல்

ருஜுவான சொற்களையுடைய
மறை

வேதத்துக்கு
பொருள் ஆகி நின்ற

அர்த்தமாயிருப்பவனும்
தேவர்கள்

நித்திய ஸூரிகளுக்கு
நாயகனே

தலைவனுமானவனே!
எம்மானே

எம்பெருமானே!
எஞ்சல் இல்

குறைவற்ற
இன்

பரம போக்யமான
உன்னுடை அமுதே

எனக்கு (ரஸ்யமான) அம்ருதம் போன்றவனே!
ஏழு உலகும் உடையாய்

உலகங்களுக்கெல்லாம் ஸ்வாமியானவனே!
என் அப்பா

எனக்கு உபகாரகனானவனே!

அரங்கத்து அடி அணைப் பள்ளியானே!;

வஞ்சம்

வஞ்சனை பொருந்திய
உருவின்

ரூபத்தையுடைவரான
நமன் தமர்கள்

யமகிங்கார்கள்
என்னை

அடியேனை
வலிந்து

பலாத்கரித்து
நஸித்து

ஹிம்ஸித்துக்கொண்டு
பற்றும்போது

பிடிக்கும்போது

அஞ்சல் என்று  ‘அஞ்ச வேண்டா’ என்று என்னை காக்க வேண்டும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (செஞ்சொல் மறைப்பொருளாகி நின்ற.)  *** *** என்ன காண்க. அமுதத்திற்கு எஞ்சலில்லாமையாவது- ‘அப்பொழுதைக்கப் பொழுதென்னாராவமுதமே” என்றபடி அநுபவிக்க அநுபவிக்க குறைவின்றிப் பணைக்கை, வஞ்சவுருவின் நமன்றமர்கள் தங்கள் வரவு ஒருவற்குத் தெரியாதபடி ரூபத்தை மறைத்துக்கொண்டு வரும் யமபடர்கள் என்றபடி, வஞ்சம்- *** அஞ்சல்- அஞ்சு என்ற வினைப்பகுதியாப் பிறந்த எதிர்மறை பொருமை யேவல்ல; அம்- சாரியை.

English Translation

O Lord of Srirangam reclining on a serpent bed! O Lord of gods, my liege! O substance of the Vedas, my undefiled ambrosial delight! Lord of the seven worlds, my Father! When Yama’s agents in terrible forms and hordes seize and torture me, protect me, you must, and say “Fear not!”

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top