(422)

(422)

கைந்நாகத் திடர்கடிந்த கனலாழிப் படையுடையான் கருதும் கோயில்

தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம் திருப்ப தியின்மேல்

மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்ததமி ழுரைக்க வல்லார்

எஞ்ஞான்றும் எம்பெருமா னிணையடிக்கீழ் இணைபிரியா திருப்பர் தாமே.

பதவுரை

கை நாகத்து இடர் கடிந்த

பெரிய துதிக்கையையுடைய கஜேந்திராழ்வா னுடைய துன்பத்தைப் போக்கின
கனல் ஆழி

ஜ்வலியா நின்றுள்ள திருவாழியாழ்வனை
படை உடையான்

ஆயுதமாகவுடைய எம்பெருமான்
கருதும் கோயில்

விரும்பி எழுந்தருளியிருக்கப்பெற்ற கோயிலாய்
தென் நாடும் வட நாடும் தொழ நின்ற

தென்னாட்டிலுள்ளாரும் வடநாட்டிலுள்ளாரும் ஸேவிக்கும்படி அமைந்த
திரு அரங்கம் திருப்பதியின்மேல்

திருவரங்கமென்னும் திருப்பதி விஷயமாக
மெய் நாவன் மெய் அடியான் விட்டு சித்தன்

மெய்யே சொல்லா நின்ற நாவையுடையரும் பிரயோஜனத்தை விரும்பாது அடிமை செய்பவருமான பெரியாழ்வார்
விரித்த தமிழ்

அருளிச்செய்த இத்தமிழ்ப் பாசுரங்களை
உரைக்க வல்லார்

ஓதவல்லவர்கள்
எம்பெருமான் இணை அடி கீழ்

எனக்குச் சேஷியான பரமபத நாதனுடைய ஒன்றோடொன்றொத்த திருவடிகளின் கீழ்
எஞ்ஞான்றும் இணைபிரியாது இருப்பர்

எந்நாளும் (நித்யமுக்தர்களின் திரளாகிற) துணையைப் பிரியாமல் (அவர்களோடு கூடி) வாழ்ந்திருக்கப்பெறுவர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருமொழிகற்பார் நலமந்த மில்லாதோர் நாடுபுக்கு

அடியார்கள் குழாங்களை யுடன் கூடி வாழப்பெறுபவர் என்று பலங்கூறியவாறு.

மெய்ந்நாவன்-  “பொய்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன்” என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்தது போல; இத்தால் இவரருளிச் செய்யும் பகவத்வைபவம், திருப்பதி வைபவம் முதலியவற்றில் இறையும் பொய்கலசாமை போதருமென்க. மெய்யடியான்  அடிமை செய்துவிட்டு ‘தேஹி’ என்று மடியேற்குமவரல்ல ரென்கை.

கை+ நாகம்;  கைந்நாகம். மெய்+நாவன். மெய்நாவன்

தாம் எ. அசைச்சொற்கள்

English Translation

This decad by truthful devotee Vishnuchitta sings of the pilgrimage centre of Tiru-Arangam, worshipped by the north and the south, where the discus-wielding-Lord, saviour-of-the-distressed-elephant resides. Those who master it will forever be inseparably united to the lotus feet of the Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top