(416)

(416)

ஆமையாய்க் கங்கையாய் ஆழ்கடலாய் அவனியாய் அருவ ரைகளாய் நான்முகனாய்

நான்மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த் தானு மானான்

சேமமுடை நாரதனார் சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான் கோயில்

பூமருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ்குழறும் புனல ரங்கமே.

பதவுரை

(ஸ்ரீநாரத் மஹர்ஷிக்குத் தன்னுடைய ஸர்வாதிகத்ததுவத்தை விளங்கச் செய்வதற்காக)

ஆமை ஆய்

(முதலில் கங்காஜலத்துக்குள்) ஆமையாயும்
கங்கை ஆய்

(பின்பு அந்த ஆமைமுதலிய ஜந்துக்களுக்கு இருப்பிடமான) கங்கையாயும்
ஆழ் கடல் ஆய்

(பின்பு அக்கங்கை முதலிய நதிகளுக்குப் புகலிடமான) ஆழ்ந்து கடலாயும்
அவனி ஆய்

(பின்பு அக்கடலுக்கு இருப்பிடமான) பூமியாயும்
அவனி அய்

(பின்பு) அப்பூமிக்கு ஆதாரமான) பெரியமலைகளாயும்
அரு வரைகள் ஆய்

(பின்பு) அப்பூமிக்கு ஆதாரமான) பெரியமலைகளாயும்
நான்முகன் ஆய்

(பின்பு அம்மலைகளுக்கு ஸ்ருஷ்டிகர்த்தாவான) சதுர்முகனாயும்
நால்மறை ஆய்

(பின்பு அச்சதுர்முகனுக்குத் தாரகமான) நான்கு வேதங்களாயும்
வேள்வி ஆய்

(பின்பு வேதாந்தங்களுக்குப் பராபணமான) யாகங்களாகவும்
தக்கணை ஆய்

(பின்பு அந்த யாகங்களுக்கு விர்யத்தைக் கொடுக்க வல்ல) தக்ஷிணையாகவும்
தானும் ஆனான்

(அந்த தக்ஷிணை முகமாக அனைவர்க்கும் அவரவர்கள் விரும்பின பலத்தைக் கொடுக்கவல்ல அஸாதாரண விக்ரஹ விசிஷ்டனான) தானகவும்,
சேமம் உடை

(ப்ரஹ்மபாவணையில் நிஷ்ட்டையாகிற) க்ஷேமத்தையுடைய
நாரதனார்

ஸ்ரீநாரத பகவான்
சென்று சென்று

பலகாலும் எழுந்தருளி
துதித்து

ஸ்தோத்திரம் பண்ணி
இறைஞ்சி

வணங்கும்படி
கிடந்தான்

பள்ளிகொண்டருள் பவனாகவும் இராநின்ற எம்பெருமானுடைய
கோயில்

கோயிலாவது
புள் இனங்கள்

(அன்னம் முதலிய) பறவைக்கூட்டங்கள்
பூ (நீர்ப்பூ முதலிய) பூக்களில்
மருவி பொருந்தியிருந்து
புள் அரையன் தங்கள் சாதிக்குத் தலைவனான பெரிய திருவடியினுடைய
புகழ் கீர்த்தியை
குழறும் அநக்ஷரரஸமாகப் பேசாநிற்கப் பெற்றதும்
புனல் நீர்வளத்தையுடையதுமான
அரங்கம் திருவரங்க நகராம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- துரியோதநாதியருடைய யாகத்தில் வந்த அரசர்களைவரும் ஸ்ரீத்வாரகையின் மஹிமையையும் , அங்கு ஸ்ரீகிருஷ்ணன் எழுந்தருளியிருக்கிற மதிப்பையுமெல்லாம் துரியோதநாதிகளின் முகமாகக் கேட்டுத் தாங்கள் கண்ணபிரானோடு உறவு பண்ணிக்கொள்ள விரும்பி, அத்துரியோதநாதியருடனும் பாண்டவர்களுடனும் ஸபரிலாராய்ப் புறப்பட்டு ரைலதகபர்வதத்திற்குப் போந்து, தாங்கள க்ருஷ்ணஸேவார்த்தமாக வந்திருக்கிறபடியைக் கண்ணபிரானுக்குத் தெரிவிக்க, அதையறிந்த கண்ணனும், ‘இவர்கள் பரிவாரங்களுடன் திரண்டு வருகைக்கக் காரணம் யாதோ’ என்று சிந்தித்து, ஸ்ரீபலராமனையும் ஸாத்யகியையும் முன்னிட்டுக்கொண்டு சேனைகளுடனும் ஆயுதங்களுடனும் அவர்களிருப்பிடத்திற் கெழுந்தருளிய எல்லாரையும் குசலங்கேட்டு, அவரவர்களுடைய வயஸ்ஸுக்கும் வலிவுக்கும் அறிவுக்கும் பெருமைக்கும் தக்கவாறு ஆஸநமிடுவித்துத் தானும் தனக்கேற்றதொரு  சீரியசிங்காசனத்தில் எழுந்தருளியிருளியிராநிற்கச்செய்தே, ஸ்ரீநாரத மஹர்ஷி வந்து வணங்கி ஸ்ரீகிருஷ்ண பகவானை நோக்கி “ஸர்வ தேவதர்களிற் காட்டிலும் நீர் ஆச்சரியகாரும் தந்ய (***- )ன் – க்ருதார்த்தன்). ருமாகாநின்றீர் ; இங்ஙனிருப்பார் இவ்வுலகில் வேறு யாருமில்லை” என்று விண்ணப்பஞ்செய்ய, கண்ணபிரான் அதைக்கேட்டுப் புன்முறுவல் செய்து, “முனிவனே! தக்ஷிணைகளோடுகூட நான் ஆச்சரியனாகவும் ***-  னாகவும் சொல்லப்பட்டவன்” என்றருளிச்செய்ய, அதனைக்கேட்ட முனிவன் மிகவும் மணமகிழ்ந்து. “பிரானே! தேவர் அருளிச்செய்த வாக்கியத்தினால் அடியேன் மிகவும் மகிழ்வுற்றேன்; இனி வந்தவழியே விடைகொள்ளுகிறேன்” என்று விண்ணப்பஞ்செய்து போக நினைத்தவளவில், அங்குள்ள அரசர்கள் பொருளைத் தாங்கள் அறியாமையாலே ஸ்ரீகிருஷ்ணனுடைய திருமுகமண்டலத்தை நோக்கி நாரதமுனிவன் தேவரைக்குறித்துச் சொன்ன வாக்கியமும், அதற்கு உத்தரமாகத் தேவர் அருளிச்செய்த வாக்கியமுமாகிற இந்த மஹாரஹஸ்ய எங்களுக்க இன்னதென்ற விளங்கவில்லை, இதனை விரித்துரைக்க வேணும்’ என்று பிரார்த்திக்க, கண்ணபிரானும் அம்முனிவன்றன்னையே கூறுமாறு நியமித்தருள, அம்முனிவன் அவ்வரசர்களை நோக்கி இவ்வண்ணம் கூறத்தொடங்கினான்;-

நான் ஒருகால் கங்கைக்கரையில் த்ரிஷவண ஸ்நாநாதிகளைப் பண்ணி வர்த்திய நிற்கச் செய்தே, ஒருநாள் இரவு கழிந்து சூரியனுதித்த வளவில், கூப்பீடு வழியளவு அகலமும் அதில் இரட்டி நீளமுமாய் நீரினுள்ளே நனைந்து உடம்பு முழுதும் பாசிபற்றிக் கண்ணுக்கு இனிதாயிருப்பதொரு ஆமையைக் கண்டு “இப்படி நீரினுள்ளே ஒன்றையும் சிந்தியாமல் சங்கையற்றுத் திரியாநின்ற நீ அற்புதமான சரீரத்தையுடையனாகா நின்றாய், தந்யனாகா நின்றாய் என்று யான் அறுதியிட்டிருக்கின்றேன்” என்ற நான் சொல்ல; அதனைக் கேட்ட அந்த ஆமை என்னைப்பார்த்து, ஒரு மநுஷ்யன் சொல்வதுபோல, “வாரீர் முனிவரே! என்னிடத்தில் ஆச்சரியமேது? நான் எங்ஙனமே தந்யனாகா நின்றேன்? என்னைப் போன்ற பதினாயிரம் ஸத்வங்கள் ஸஞ்சரிக்கப் பெற்ற கங்காநதியன்றோ அங்ஙனாவது” என்றுசொல்ல; பிறகு நான் அக்கங்கையைக் குறித்து அங்ஙனேசொல்ல; அதுகேட்ட அக்கங்கையானது ஒரு வடிவு கொண்டு நின்ற ஆமையைப்போலவே சொல்லி-, “என்னைப்போற் பல்லாயீரம் நதிகள் சென்று சேர்தற்கிடமான கடலன்றோ ஆச்சரியமும் தந்யமுமாவது” என்றுசொல்ல: பிறகுநான் அக்கடலை நோக்கி அங்ஙனே சொல்ல; அக்கடல் என்னைப் பார்த்து, “நீ சொன்னவையிரண்டும் எனக்கில்லை; யாதொரு பூமியின் மேல் நான் வாஸம்பண்ணா நிற்கிறேனோ அப்பூமிகன்றோ அவையிரண்டு முள்ளது” என்ன; பிறகுநான் பூமியை நோக்கிப் புகழ்ந்துகொண்டு “ஆச்சரியபூதையாகாநின்றாய், தந்தையாகாநின்றாய்” என்று சொல்ல; அதுகேட்ட “பூமி யான் அங்ஙனுள்ளவளல்லள், எனக்கு ஆதாரமாயிருக்கின்ற பர்வதங்களன்ளேறா அப்படிப்பட்டவை” என்ன; பிறகு நான் அப்பர்வதங்களைக்கிட்டி அங்ஙனேசொல்ல; அவை என்னைப்பார்த்து “அப்படிப்பட்டவை நாம் அல்லோம், பிரஜாபதியான பிரமனன்றோ இவையிரண்டையுமுடையான்” என்ன, பிறகுநான் பிரமனைச் சென்றுகிட்ட அடைவுபட அநுவர்த்தித்துப் புகழ்ந்து கொண்டு பிரமனே! ஆச்சரியனாகாநின்றாய், தந்யனாகாநின்றாய், உன்னையொப்பார் ஆலயாருமில்லை“ என்ன, அதைக்கேட்ட பிரமன் என்னைப்பார்த்து “இங்ஙனே நீ என்னைப் புகழ்வதென்? ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்னும் பெயரை யுடையனவும் தத்துவங்களை உணர்த்துவனவும், உலகங்களையும் என்னையும் தரியாநின்றனவுமான வேதங்களன்றோ அப்படிப்பட்டவை“ என்ன, நான் வேதங்களைக்கிட்டி, “நீங்களன்றோ ஆச்சரியபூதரும் தந்யரும்“ என்ன, அந்தவேதங்கள் என்னைப்பார்த்து “நாங்கள் யஜ்ஞார்த்தமாகப் படைக்கப்பட்டவர்களாதலால் எமக்குப் பராயணங்களான (பராயணம் – சிறந்த கதி) அந்த யஜ்ஞங்களன்றோ அப்படிப்பட்டவை” என்ன; பின்பு நான் அந்த யஜ்ஞங்களைப் பார்த்துப்புகழ்ந்து உலகத்தில் உங்களிற்காட்டில் ஆச்சரியங்களுமில்லை, தந்யங்களுமில்லை” என்ன ; அந்த யஜ்ஞங்கள் என்னைப் பார்த்து ஆச்சரியப்தமும் தந்யசப்தமும் எங்கள் பக்கலில் இல்லை; விஷணுவிடத்தில் அவை உள்ளன; அவ்விஷ்ணுவே எங்களுக்குச் சிறந்த கதி; தீயில் ஹோமம் பண்ணப்பட்டு எம்மால்  ஸ்வீகரிக்கப்படும் நெய்யை அவ்விஷ்ணுதானே கொடுக்கிறார்” என்ன; அதனைக்கேட்ட யான் பூமியில் வந்து உங்கள் திரளின் நடுவே யெழுந்தருளியிருக்கிற ஸ்ரீகிருஷ்ணபகவானைக் கண்டு ஸேவித்து “நீர் ஆச்சரியருமாக நின்றீர், தந்யருமாகாநின்றீர்” என்று நான் விண்ணப்பஞ் செய்ததற்கு உத்ரமாக, – “தக்ஷிணைகளோடேகூட நான் ஆச்சரியனாகவும் தந்யனாகவுஞ் சொல்லப்பட்டவன்; என்று கண்ணபிரானருளிச் செய்தவார்த்தை என்னை மகிழ்வித்தது;

எங்ஙனே யென்னில்; – எல்லா யஜ்ஞங்களுக்கும் தக்ஷியையோடே கூடியிருந்துள்ள ஸர்வேச்வரன் கதியாகையாலே, “தக்ஷிணையோடுகூட நான் ஆச்சரியனாக நின்றேன், தந்யனாகாநின்றேன்” என்று கண்ணபிரான் அருளிச்செய்த இவ்வாக்கியத்தினால் என்னுடைய ப்ரச்நம் நிறைவேறிற்று என்று சொல்லி, முதலில் ஆமையினிடத்துச் சொல்லப்பட்டு, அநந்தாம் பரம்பரையாக இவ்வளவும் வந்த “ஆச்சரியனாகாநின்றாய், தந்யனாகாநின்றாய்” என்ற வாக்கியம் தக்ஷிணையோடு கூடின இக்கண்ணபிரானைக் குறித்து என்னால் பிரதி பாதிக்கப்பட்டது; இந்த ரஹஸ்யார்த்தத்தை உங்கட்கு நான் சொல்லித் தலைக்கட்டினேன், இனி நான் வந்தவழியே போகிறேன் என்று, ஸ்ரீஹரிவம்சவிஷ்ணுபர்வத்தில் நூற்றுபப்தினோராவது அத்தியாயத்தில் சொல்லப்பட்டதை இப்பாட்டிற் சுருங்க அருளிச்செய்யப்பட்ட தென்க.

(ஆமையாய் இத்யாதி) நாரதமாமுனிவனுக்கத் தன்னுடைய வீறுடமையை விளக்குதற் பொருட்டுக் கங்கைநீரினுள் பெரிய வடிவுபடைத்ததாரு ஆமையாயும், அதுபோன்ற பலவற்றுக்கு வாழ்விடமான கங்கையாம், அதுபோன்ற பல நதிகளுக்குப் புகலிடமான ஆழ்கடலாயும், அது தனக்கான இருப்பிடமான பூமிபாயும்-, அது தனக்குத் தாரகங்களான பெரியமலைகளையும், அவற்றுக்கு உத்பாதகனான பிரமனாயும், அவன்றனக்குப் பரமநதியான சதுரிவேதமாயும் அவற்றுக்குப் பராயணமான யாகங்களையும், அவற்றுக்கு  வீரியந்தரவல்ல பெருமையையுடைய தக்ஷினையாயும், அத்தகைய  முகமாக அனைவர்க்கும் அவரவர் வேண்டியவாறு எல்லாப் பலன்களையும் கொடுக்கும் வீறுடையனாய் அஸாதாரண விக்ரஹவிஷ்ட்னானவன் எம்பெருமான் முன்னோடிகளின் கருத்து.

நாரதனுக்குச் சேமமுடைமையாவது கர்மபாவனையில் விருப்பமுற்றிருத்தலைத் தவிர்ந்து ப்ரஹ்யபானையில் நிஷ்ட்டை பெற்றிருக்கை. (சென்று சென்று) –  இப்படி ஆமை முதலிய ஒவ்வொரு வஸ்துவினிடத்தும் தனித்தனியே சென்ற என்றும் பொருள்கூறத்தகும்; அடிக்கடி எம்பெருமான் பக்கலில் விடை கொண்டு இங்ஙனே துதித்திறைஞ்சுவன் நாரதன் எனக்கருதுதல் சிறக்கும்; “இன்பத்தும்புருவும் நாரதன மிறைஞ்சியேத்த” என்றும், “தும்புருநாரதர் புகுந்தனர்” என்றும் இத்திருவரங்கமாநகரில் நாரதமுனிவன் பலகால் வந்து வணங்குமாறு சொல்லிற்றிறே.

“நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ” என்று கூறப்படுகின்ற மூவகைப்பூக்களிலும் அவ்வற்றுக்கு உரிய பறவைகள் களித்திருந்து தம்குலத்துக்கு அரசனாகிய கருத்மானது புகழைப்பாடுமிடமும், நீர்வளத்தை யுடையதுமான திருவரங்கமென்பது, ஈற்றடி ஒவ்வொரு சாதியரும் தமது சாதித்தலைவன் புகழைப்பாட விரும்புதல் இயல்பே; “அடங்கச் சென்றிலங்கையை யீடழித்த அனுமன் புகழ்பாடித்தங் குட்டன்களைக், குடங்கைக்கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்” என்றதுங்காண்க.

English Translation

When the sage Narada, taking a holy dip in the Ganga, worshipped a tortoise as wonderful and praiseworthy, the tortoise pointed to the river as being greater than itself. The river pointed to the ocean, the ocean to the Earth, the Earth to the mountain, the mountain to the four-faced Brahma, Brahma to the four Vedas, to the fire-Yajnas, and the Yajnas to the Lord, worshipped with offerings-made-with-love Dakshina. He lies reclining in the temple of Tiru-Arangam, where swans throng the lotus-filled waters and praise the bird-king Garuda in cooing tones.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top