(406)

(406)

பெருவரங்க ளவைபற்றிப் பிழகுடைய இராவணனை

உருவரங்கப் பொருதழித்துஇவ் வுலகினைக்கண் பெறுத்தானூர்

குருவரும்பக் கோங்கலரக் குயில்கூவும் குளிர்பொழில்சூழ்

திருவரங்க மென்பதுவே என்திருமால் சேர்விடமே.

பதவுரை

குரவு

–

குரவ மரங்களானவை
அரும்ப

–

அரும்புவிடா நிற்க
கோங்கு

–

கோங்கு மரங்களானவை
அலரா

–

அலரா நிற்க.
குயில்

–

குளில்களானவை
கூவும்

–

(களித்துக்) கூவும்படியான
குளிர்பொழில் சூழ்

–

குளிர்ந்த சோலைகளாலே சூழப்பெற்ற
திரு அரங்கம் என்பது

–

திருவரங்கமென்னும் திருப்பதியானது;
பெரு

–

பெருமை பொருந்திய

வரங்கன் அவை வரங்களை

பற்றி

–

பலமாகக் கொண்டு
பிழக்கு உடைய

–

(தேவர் முனிவர் முதலாயினோரிடத்துப்) பிழை செய்கையையே இயல்பாகவுடைய
இராவணனை

–

இராவணனுடைய
உரு

–

உடலானது
அங்க

–

சிந்நபிந்நமாம்படி
பொருது அழித்து

–

போர் செய்து (அவனைத்) தொலைத்த
இ உலகினை

–

இந்த லோகத்தை
கண் பெறுத்தான்

–

காத்தருளினவனும்
என்

–

எனக்குத் தலைவனும்
திருமால்

–

ச்ரிய: பதியுமான எம்பெருமான்
சேர்வு இடம்

–

சேருமிடாகிய
ஊர்

–

திருப்பதியாம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற வரங்களினால் தனக்கு எவ்வகையாலும் அழிவு நேராதென்று துணிந்து, நெஞ்சினால் நினைக்கவும் வாயினால் மொழியவு மொண்ணாத பற்பல பிழைகளைச் செய்து உலகத்தையெல்லாம் படவடித்துக்கிடந்து கூப்பிடும்படி பண்ணித் திரிந்த இராவணனைக்கொன்று உலகத்தையெல்லாம் வாழ்வித்தருளின எம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம்- நித்யவஸந்தமான சோலைகளையுடைய திருவரங்கமென்பதாம். வரம்- தற்சமவடசொல். பிழக்கு- பிழை.

English Translation

Cool groves where Kurava trees sprout buds, Kongu trees spill flowers and cuckoos call all day surround. Tiru-Arangam, the abode of my Lord Tirumal, the guardian of the world. He destroyed the demon king Ravana who performed evil acts with the boons he had received.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top