(399)

(399)

வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி

இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை

தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி

கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.

பதவுரை

தட வரை

(மந்தரம் முதலிய) பெரிய மலைகளானரவை
அதிர

சலிக்கம்படியாகவும்
காணி

பூமியானது
விண்டு இடிய

பிளவுபட்டு இடிந்து விழும்படியாகவும்
கலைப்பற்றி

(மரங்களினுடைய) தலை யாவுஞ் செல்லக் கிளம்பி
கரை

கரையிலுள்ள
மரம்

மரங்களை
சாடி

மோதி முறித்தும்
வைகுந்தம்

ஸ்ரீவைகுண்டமும்
துவரை

ஸ்ரீத்வாரகையும்
அயோத்தி

திருலயோத்யையும்
இடம் உடை

இடமுடையத்தான் (விசாலமான)
கடல்

(ஒன்றாலுங் கலங்காத) கடலுங்கூட
கலங்க

கலக்கும்படி
கடுத்து

வேகங்கொண்டு
இழி

இழியா நின்றுள்ள
கங்கை

கங்கா தீரத்திலுள்ள

கண்டம் என்னும் படி நகர்;

வட திசை

வடக்கிலுள்ள
மதுரை

ஸ்ரீ மதுரையும்
சாளக்கிராமம்

ஸ்ரீ ஸாளக்ராமமும்
வைகுந்தம்

ஸ்ரீவைகுண்டமும்
துவரை

ஸ்ரீத்வாரகையும்
அயோத்தி

திருவயோத்தையும்
இடம் உடை

இடமுடைத்தான (விசாலமான)
வதரி

ஸ்ரீ பதரிகரச்ரம்முமாகிற இவற்றை
இடவகை உடைய

வாஸஸ்தானமாக வுடையனான

எம் புருடோத்தமன் இருக்கை-

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பகீரத சக்கரவர்த்தி தனது தபோபலத்தினால் கங்கையை இறக்கிக்கொண்டு வருகிறபோது வந்திழிகிற வேகத்தைச் சொல்லுவன பின்னடிகள். கடுத்து=கடுமை-வேகம். .. … (கூ)

English Translation

The good city of Khandam stands on the banks of the Ganga which flows so violently that the mountains rumble, the earth splits and crumbles, the trees along the course get sunk and uprooted, and the ocean turns. It is the abode of our Lord Purushottama who also owns the Northern resorts of Mathura, Saligrama, Vaikunta, Dvaraka, Ayodhya and Badari.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top