(398)

(398)

திரைபொரு கடல்சூழ் திண்மதிள் துவரை வேந்துதன் மைத்துனன் மார்க்காய்

அரசினை யவிய அரசினை யருளும் அரிபுரு டோத்தம னமர்வு

நிரைநிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு

கரைபுரை வேள்விப் புகைகமழ் கங்கை கண்டமென் னும்கடி நகரே.

பதவுரை

நெடியன

நீண்டவையாயிராநின்றுள்ள
யூபம்

(பசுக்கள் கட்டுகிற) யூபஸ்தம்பங்களானவை
நிரை நிரை ஆக

திரள் திரளாக
நிரந்தரம்

இடை விடாமல்
ஒழுங்கு விட்டு

நெடுக ஓடாநிற்பதும்
இரண்டு கரை ப>ரை

இருபக்கத்துக் கரைகளும் தம்மிலே ஒத்து
வேள்வி புகை கமழ்

யாககுண்டத்திலுண்டாகும் புகைகளால் பரிமளியா நிற்பதுமான
கங்கை

கங்கைக் கரையில்

கண்டம் என்னும் கடி நகர்;

திரை பொரு

அலையெறியாநின்றுள்ள
கடல் சூழ்

கடலால் சூழப்பெற்ற
திண் மதிள்

திண்மையா மதிள்களையுடைய
துவரை

த்வாரகைக்கு
வேந்து

தலைவனும்
தன்

தன்னுடைய
மைத்துனன் மார்க்கு

மைத்துனன்மார்களான பாண்டவர்களுக்கு
ஆய்

பக்ஷபாதியாய்நின்று
அரசனை அவிய

துரியோதநாதி ராஜாக்களை அழியச் செய்து
அரசினை

ராஜ்யத்தை
அருளும்

(அப்பாண்டவர்கட்குக்) கொடுத்தருளினவனும்
அரி

(ஸகல பாபங்களையும்) போக்குமவனுமான
புருடோத்தமன்

புருஷோத்தமப் பெருமாள்
அமர்வு

பொருறந்தி யெழுந்தருளியிருக்குமிடம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முன்னடிகளிற் குறித்த வரலாற கீழ் “மெச்சூது  சங்கமிடத்தான்” என்ற பாட்டின் உரையிற் காணத்தக்கது. அரி -ஹரி. கங்கையிற் பற்பல யூபஸ்தம்பங்கள் இடைவிடாது நெடுக அடித்துக்கொண்டு ஓடுமென்பது மூன்றாமடி. பூபம் – யாகப்பசுவைக் கட்டுந்தறி; வடசொல். நிரந்தரம்- வடசொல், இரண்டு கரைபொரு – இரண்டு கரைகளும் ஒருபடிப்பட; இரண்டு கரைகளிலும் என்றாவது.    …    …     (அ)

English Translation

The good city of Khandam stands on the banks of the Ganga which is framed by closely-knit rows of cow pegs on either side, with the fragrant smoke of the fire-alter filling the air. It is the abode of our Lord Purushottama, the king of fortressed Dvaraka in the Western sea, who destroyed the king Duryodhana and gave the kingdom to his brothers-in-law the Pandavas.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top