(396)
தலைப்பெய்து குமுறிச் சலம்பொதி மேகம் சலசல பொழிந்திடக் கண்டு
மலைப்பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால்புரு டோத்தமன் வாழ்வு
அலைப்புடைத் திரைவாய் அருந்தவ முனிவர் அவபிர தம்குடைந் தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.
பதவுரை
| அரு தவம் முனிவர் |
– |
அரிய தவங்களைப் புரிந்த மஹர்ஷிகள் |
| அலைப்பு உடை |
– |
அலைத்தலையுடைய (கரையெறியா நின்றுள்ள) |
| திரைவாய் |
– |
அலையிலே |
| அவபிரதம் குடைந்து ஆட |
– |
அவப்ருதஸ்நாசம் பண்ண, (பிறகு பெருங்காறாய்) |
| கலப்பைகள் கொழிக்கும் |
– |
(யாகபூமியிலுண்டான) கலப்பை முதலிய உபகரணங்களெல்லாவற்றையும் எடுத்துத் தள்ளிக்கொண்டு போகா நிற்கிற |
|
கங்கையின் கரை மேல் |
||
|
கண்டம் என்னும் கடி நகர் ; |
||
| சலம் |
– |
(கடலிலுள்ள) ஜலத்தை |
| பெதி |
– |
பொதிந்துகொண்டிரா நின்ற |
| மேகம் |
– |
மேகங்களானவை |
| தலைப்பெய்து |
– |
திருவாய்ப்பாடியில் வந்து கிட்டி |
| குமுறி |
– |
கர்ஜனைபண்ணி |
| சலசல பொழிந்திட |
– |
சள சள வென்று மழை பொழிய |
| கண்டு |
– |
(அதைக்) கண்டு |
| மலை |
– |
கோவர்த்தன மலையாகிற |
| பெருகுடையான் |
– |
பெரிய குடையாலே |
| மறுத்தவன் |
– |
(அம்மழையைத்) தடுத்தருளினவனும் |
| மதுஐர |
– |
திரு வடமதுரையில் |
| மால் |
– |
விருப்பமுடையவனுமான |
| புருடோத்தமன் |
– |
ஸ்ரீபுருஷோத்தமப்பெருமான் |
| வாழ்வு |
– |
எழுந்தருளியிருக்குமிடம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- முன்னடிகளில் கூறிய கோவர்த்தநோத்தரண வரலாறு கீழ்ப்பலவிடங்களில் விரித்துரைக்கப்பட்டது. சலசல – ஒலிக்குறிப்பு. மறைத்தவன் என்றும் பாடமுண்டென்பர்.
பின்னடிகளின் கருத்து; – தபஸ்விகளான மஹர்ஷிகள் பகவத்ஸமாராதந ரூபங்களான யாகங்களைக் குறையற அனுட்டித்து, அத்திமதிநத்தில் அவப்ருத ஸ்தாகஞ்செய்ய, அநந்தரம் பெருக்காறாப்பெருக்கி யாகபூமிலுள்ள கலப்பை முதலிய உபகரணங்கள ளெல்லாவற்றையும் எடுத்துத்தள்ளிக்கொண்டு போகாநிற்குமதான கங்கைக்கரையிலுள்ள கண்டமென்னும் நடிகர் என்பதாம். அவபிரதம்- வேள்வியின் முடிவிற் செய்யவேண்டிய ஸ்நாகம்; …………………… என்ற வடசொல் விகாரம்
English Translation
The good city of Khandam stands on the banks of the Ganga in whose powerful surge; great sages take their ritual bath after a fire-sacrifice and bring back driftwood for making sacrificial ladles. It is the abode of our dear Purushottama, Lord of Mathura, who held a mountain as an umbrella against the laden clouds when they poured incessantly with thunder.
