(395)

(395)

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுட ராழியும் சங்கும்

மழுவொடு வாளும் படைக்கல முடைய மால்புரு டோத்தமன் வாழ்வு

எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழு தளவினில் எல்லாம்

கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.

பதவுரை

எழுமையும்

ஏழு ஜந்மங்களிலும்
கூடி ஈண்டிட

சேர்ந்து திரண்ட
பாவம் எல்லாம்

பாவங்களை யெல்லாம்
இறைப்பொழுது அளவினில்

க்ஷணகாலத்துக்குள்ளே
கழுவிடும்

போக்கிவிடும்படியான
பெருமை

பெருமையையுடைய கங்கையின்  கரைமேல்;

கண்டம் என்னும் கடி நகர்;

உழுவது ஓர் படையும்

உழுவதற்கு உரிய கருவியாகிய கலப்பையும்
உலக்கையும்

உலக்கையையும்
வில்லும்

ஸ்ரீசார்ங்கத்தையும்
ஒண் சுடர்

அழகிய தேஜஸ்ஸையுடைய
ஆழியும்

திருவாழியையும்
சங்கும்
ஸ்ரீபாஞ்சஜக்யத்தையும்
மழுவொடு

கோடாலியையும்
வாளும்

கந்தக வாளையும்
படைக்கலம் உடைய

ஆயுதமாகவுடையவனம்
மால்

ஸர்வேச்வரனுமான
புருடோத்தமன்

புருஷோத்தமப் பெருமான்
வாழ்வு

எழுந்தருளியிருக்குமிடம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கலப்பையும் உலக்கையும்- பலராமாவதாரத்திலும், மழு- பரசுராமாவதாரத்திலும் கொள்ளப்பட்ட ஆயுதங்களென்க. படைக்கலமுடைய= படைகலம், உடைய என்று பிரித்து, (இவற்றை) ஆயுதமாகவும் ஆபரணாமகவுமுடைய என்று முரைக்கலாம்.

அநேக ஜந்மஸஞ்சிதமான  பாவங்களைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் கழித்து விடும்படியான பெருமையையுடையது கங்கையென்பது பின்னடி.  கழுவிடும்- கழுவியிடும் …. … (சி)

English Translation

The good city of Khandam stands on the banks of the Ganga which has the power to wash away in a trice the Karmas collected over seven lives. It is the abode of the adorable Purushottama who bears the plough, the mace, the bow, the radiant discus, the conch, the axe and the dagger as his weapons.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top