(3931)

(3931)

ஆழியா னாழி யமரர்க்கும் அப்பாலான் ஊழியா

னூழி படைத்தான் நிரைமேய்த்தான்

பாழியந் தோளால் வரையெடுத்தான் பாதங்கள்

வாழியென் நெஞ்சே! மறவாது வாழ்கண்டாய்.

 

பதவுரை

ஆழியான்

சக்ரபாணியாய்

ஆழி அமரர்க்கும் அப்பாலான்

கம்பீரர்களான நித்யஸூரிகளுக்கும் நிலமல்லாத மேன்மையையுடையனாய்

(அப்பசுக்களுக்கு ஆபத்து வந்தபோது)

பாழிஅம் தோளால் வரை எடுத்தான்

மிடுக்குடைய அழகிய திருத்தோளாலே மலயை யெடுத்துக் காத்தவனான பெருமானுடைய

ஊழியான்

ப்ரளயகாலத்தில் தானொரு வனெயுளனாய்

பாதங்கள்

திருவடிகளை

ஊழிபடைத்தான்

காலம் முதலிய சகல பதார்த்தங்களையும் ஸங்கல்பித்தவனாய்

என் நெஞ்சே மற வாது வாழ் கண்டாய்

என் மனமே! ஒரு போதும் மறவாமல் நித்யாநுபவம் பண்ணி வாழ்வாயாக.

நிரைமேய்த்தான்     பசுக்களை ரஷித்தவனாய்

வாழி இவ்வாழ்ச்சி நித்யமாயிடுக

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

**** – கீழ்ப்பாட்டில் “பணி நெஞ்சே! நாளும்” என்றவாறே உகந்திருந்தது நெஞ்சு; அதனைக் கொண்டாடி அவனை இடைவிடாதே அநுபவியென்கிறார்.

 

English Translation

The Discus-Lord is beyond the ken of gods, He is the fimless Lord and creator, he grazed cows.  On his broad shoulders he lifted a mountain, Praise his feet without fail, O Good heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top