(3930)

(3930)

பணிநெஞ்சே! நாளும் பரம பரம்பரனை

பிணியொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும்

மணிநின்ற சோதி மதுசூதன் என்னம்மான்

அணிநின்ற செம்பொன் அடலாழி யானே.

 

பதவுரை

மணிநின்ற சோதி

நீலரத்னத்தை யொத்த தேஜஸ்ஸை யுடையனாய்

பிறவி கெடுத்து ஆளும்

நம்பிறவித் துன்பத்தைப் போக்கி அடிமை கொண்டருள்பவன்

மதுசூதன்

விரோதி நிரஸந சீலனாய்

என் அம்மான்

அஸ்மத் ஸ்வாமியாய்

அணி நின்ற செம்பொன் அடல் ஆழியான்

தானே ஆபரணமாகப் போரும்படியாய்ச் சிவந்த பொன்போலே ஸ்ப்ருஹணீயனாய் மிடுக்கையுடையனான திருவாழியாழ்வானைக் கையிலேந்தினவனான பெருமான்

பிணி ஒன்றும் சாரா

ஸம்ஸாரக்லேசமொன்றும் தட்டாது

பரமபரம்பரணை நெஞ்சே நாளும் பணி

(ஆன பின்பு)  அப்பரமபுருஷனை நெஞ்சமே! நித்யமும் வணங்கி யநுபவி

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

**** – நம் விரோதிகளைப் போக்கி அடிமைகொள்ளுமவனான அப்பெருமானை இடைவீடின்றியநுவிக்குமாறு திருவுள்ளத்தை நோக்கியருளிச் செய்கிறார்.  நெஞ்சே!  பரமபரம்பரனை நாளும்பணி – நெஞ்சே! நல்ல வாய்ப்பாயிருந்தது,  நாள்தோறுமநுபவிக்கப் பார்;  இந்திரன் முதலானார்க்கு மேற்பட்டவர்களான (பிரமன் முதலானார்க்கும் மேற்பட்டவர்களான)  நித்யஸூரிகளுக்குத் தலைவனை நாளுமநுபவிக்கப்பார்.  பிணியென்றும் சாரா – துக்கங்களொன்றும் நம்மை வந்து கிட்டாது.  பிறவி கெடுத்து ஆளும் – அந்த துக்கங்களுக்கு அடியான ஜன்மத்தை அடிவேரோடே போக்கி நம்மை நித்திய கைங்காரியம் கொள்ளுபவன் மணி நின்ற சோதி – துக்கங்களையும் துக்கஹேதுவான ஜன்மத்தையும் போக்குகின்றிலன் என்றே வைத்துக்கொள்வோம்; அப்படியானாலும் விடவொண்ணாத வடிவழகு படைத்தவன்.  நீலமணியினொளியை வடிவாக வகுத்தாற்போலே யிருக்கிற வடிவையுடையவன்.  மதுசூதன் – மதுகைடபர்களைக் கொன்றானென்பது மாத்திரம் இங்கு விவஷிதமன்று  கீழ்ச்சொன்ன வடிவழகை யநுபவிப்பார்க்கு வரும் விரோதிகளை மதுகைடபர்களைப் போக்கினாப் போலே தள்ளிக் கொடுக்குமவன் என்று விவஷிதம்.

அணி நின்ற செம்பொனடலாழியானே – கையுந்திருவாழியுமான அழகை நமக்கு அநுபவிக்கக் கொடுப்பானென்று கருத்து.  ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை நெஞ்சே! நாளும் பணி என்றாராயிற்று.

 

English Translation

O Heart! Worship the greatest good. Diseases will not come close and birth too will cease.  The Lord of gem-hue radiance bears a golden discus. He is Madhusudana, the Lord who rules us

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top