(3868)

(3868)

வண்ணம்மணிமாட நன்னாவாயுள்ளானை

திண்ணம்மதிள் தென்குருகூர்ச்சடகோபன்

பண்ணார்தமிழ் ஆயிரத்திப்பத்தும்வல்லார்

மண்ணாண்டு மணங்கமழ்வர்மல்லிகையே.

 

பதவுரை

வண்ணம் மணி மாடம்

–

அழகிய மணி மாடங்களை யுடைத்தான

நல் நாவாய் உள்ளானை

–

விலக்ஷணமான திருநாவாயிவெழுந் தருளியிருக்கும் பெருமானைக் குறித்து

திண் அம்மதின் தென் குருகூர் சடகோபன்

–

திடமாயழகிய மதிள்களையுடைத்தான திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடையதாய்

பண் ஆர் தமிழ்

–

பண்ணிறைந்த தமிழான ஆயிரத்தில் ஆயிரத்து

இப்பத்தும் வல்லார்

–

இப்பத்தையும் ஒதவல்லவர்கள்

மண் ஆண்டு

–

இவ்விபூதியை நெடுங்காலம் ஆண்டு

மல்லிகை மணம் கமழ்வர்

–

“ஸர்வகந்த:” என்னப்படுகிற எம்பெரு மானோடே ஸாம்யாபத்தி பெறுவர்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– இத்திருவாய்மொழி வல்லார் ஐஹிக ஆமுஷ்மிக ஸகலபோகங்களையும் புஜிக்கப் பெறுவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.  மண்ணாண்டு என்பதனால் ஐஹிகபோகம் புஜிக்கப் பெறுகை சொல்விற்று.  மல்லிகை மணங்கமழ்வர் என்பதனால் ஆமுஷ்மிகபோகம் புஜிக்கப்பெறுகை எங்ஙனே சொல்லிற்றாகிறதென்னில்; மல்லிகை மணமென்று ஒரு பரிமளத்தை மாத்திரம் சொன்னபடியன்று; இது உபலக்ஷணமாய் ஸகல பரிமளங்களையும் சொன்னபடியாகி, வேதாந்தங்களிலே  ஸர்வ கந்த* என்று ஸகல பரிமளங்களும் வடிவெடுத்தவனாகக்ச சொல்லப்படுகிற எம்பெருமானாகப் பெறுவர்–எம்பெருமானோடு ஸாம்பாந்நராவர் என்றபடியாம்  *தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே யொக்க அருள் செய்வர்  * என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் இங்கே நினைக்கத் தக்கது.   “மல்லிகை மணங்கமழ்வர்” என்பதற்குப் பன்னீராயிரவுரைகாரர் “மல்லிகைபோலே பசுத்தமான யகஸ்ஸெளரப்யவிகாஸத்தை யுடையவராவர்” என்றுரைத்தார்.  அவ்வுரை ஆறாயிரப்படி முதலிய வியாக்கியானங்களுக்குப் பொருந்தியதன்று.

 

English Translation

This decad of the thousand Pann-based songs, by walled kurugur’s Satakopan on the lord Tirunavai residing amid painted mansions, -those who master it will rule Earth and exude the fragrance of Jasmine

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top