(3867)

(3867)

அந்தோவணுகப்பெறுநாள் என்றெப்போதும்

சிந்தைகலங்கித் திருமாவென்றழைப்பன்

கொந்தார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்

வந்தேயுறைகின்ற எம்மாமணிவண்ணா.

 

பதவுரை

நொந்து ஆர்

கொத்தாக நிறைந்துள்ள

மலர் சோலைகள் சூழ்

மலர்களையுடைய சோலைகளாலே சூழப்பட்ட

திருநாவாய்

திருநாவாய்ப்பதியிலே

வந்தே உறைகின்ற

(பரமபதம் முதலான விடங்களையும் விட்) வந்து நித்யவாஸம் பண்ணுகிற

எம் மா மணி வண்ணா

எமக்குப் பரமபோக்யனான நீல மணிவண்ணனே!

அந்தோ அணுக பெறும் நாள்என்று

ஐயோ!  உன்னைக்கிட்டிவாழப் பெறுவதுண்டோ வென்று

எப்போதும்

ஸர்வகாலமும்

சிந்தை கலங்கி

நெஞ்ச தளும்பி

திருமால் என்று அழைப்பன்

திருமாலே! யென்று கூப்பிடா நின்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– உன்னைக் காணப் பெறாமையாலே நெஞ்சழிந்து கூப்பிடா நின்றேன் காணென்கிறார்.  தொடங்கும்போதே அந்தோவென்கிறார்– சொல்லத் தொடங்கினது தலைக்கட்ட மாட்டாத பலஹானியாலே. “அணுகப் பெறுநாள் எவைகொல் ” என்ன வேண்டியிருக்க அவ்வளவும் சொல்லமாட்டிற்றிலான்றோ. (எப்போதும்) ஒருகால் சொல்லத் தொடங்கி இளைத்தால் பின்னைத் தவிரலாமே, ஆசை வாளாவிருக்க வொட்டுகிற தில்லை. எப்போதும் இதுவே யாத்திரையானபடி.

(சிந்தை கலங்கித் திருமாவென்றழைப்பன்)–அத்தலைக்குத் திருவுள்ள மில்லையாகில் நாம் அழைப்பதனால் என்னாகும்? என்கிற தெளிவின்றிக்கே சிந்தை கலங்கியிருக்கப் பெற்றவனாகையாலே திருமாலே யென்று கூப்பிடுகின்றேன். திருநாட்டிலே வந்து காணக் கடலவதான வடிவை இங்கே காட்டுவதாகக் கொண்டு திருநாவாயிலே வந்து நித்யவாஸம் பண்ணுமவனெ!

 

English Translation

My heart is disturbed with thought of impending union.  Alas, I call my gem-hued Lord who lives in fragrant Tirunavai

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top