(3650)
என்சொல்லி நிற்பனென் இன்னுயி ரின்றொன்றாய்,
என்சொல்லால் யான்சொன்ன இன்கவி யென்பித்து,
தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்,
என்முன்சொல்லும் மூவுரு வாம் முதல்வனே.
பதவுரை
|
என் இன் உயிர் |
– |
என்னுடைய ஹேயமான ஆத்ம வஸ்துவானது |
|
இன்று ஒன்று ஆய் |
– |
இன்று தனக்கொரு வஸ்துவாத, |
|
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து |
– |
என்னுடைய சொல்லாலே நான் கர்த்தாவாகச் சொன்ன இனிய பிரபந்த மென்று பிரபந்த மென்று நாட்டிலே பிரஸித்தமாக்கி |
|
தன் சொல்லால் |
– |
தன்னுடைய உக்திகளாலே |
|
தான் தன்னை கீர்த்தித்த |
– |
தானே தன்னைக் கவிபாடிக் கொண்டவனாய் |
|
என் முன் சொல்லும் மாயன் |
– |
எனக்குள்ளேயிருந்து முன்னுருச் சொல்கின்ற ஆச்சர்யபூதனாய் |
|
மூ உரு ஆம் முதல்வன் |
– |
த்ரிமூர்த்தியாயிருப்பவனான காரணபூதனைக் குறித்துக் |
|
என் சொல்லி நிற்பன் |
– |
எதைச் சொல்லித் தரிப்பேன்? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தானே தன்னைக் கவி பாடிவைத்து நான் தன்னைக் கவி பாடினதாக உலகில் ப்ரஸித்தமாக்குவதே! இது என்கொல்! என்று தலைசீய்க்கிறார். பாசுரம் தொடங்கும்போதே என் சொல்லி நிற்பன்! என்கிறார். நெடுங்காரமாக விமுகனாய்ப் போந்தவென்னை நிர்ஹேகுகமாக விஷயீகரித்தபடியை நினைத்தால் நான் எத்தைச் சொல்லித் தரையில் கால்பாவுவதென்கிறார். பெருளல்லாத வென்னையுமொரு பொருளாகக் கொண்டு என் சொல்லால் யான் சொன்ன் பாசுரமென்று உலகத்தார் நம்பும்படியாக்கி, எனமனைக் கருவியாகக் கொண்டு தன் சொற்களையிட்டே திருவாய்மொழி பாடியருளின் இந்த மஹாகுணத்திற்கு என்ன பாசுரமிட்டுச் சொல்வது!
என் முன் சொல்லும் – அவன், முன்னே சந்தையிட, பின்னே; சொன்னேன். உபாத்யாயர்கள் சீடர்களுக்கு வேதமோகுவிக்க, அவர்கள் ஒதுகிறாப்போலே நடந்த தாயிற்றிது.
மூவுருமாம் முதல்வனே – தான் அயனுக்கும் அரனுக்கும் அந்தர்யாமியாயிருந்து சில காரியங்களைச் செய்ய, அக்காரியங்கள் அவர்கள் தாமே செய்ததாக ப்ரஸித்தமானாப்போலே இத்திருவாய்மொழியிலும் எனக்கு தர்த்ருத்வப்ரஸித்தி யுண்டாயிற்று என்கை இந்த வாக்கியத்தின் பரம தாற்பரியம். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:-“ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்து அவனை அத்யயநம் பண்ணுவித்து தேவர்களுக்கு வெளிச் சிறப்பைப் பண்ணுவித்து ‘அதுதன்னை ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்து அவனை அத்யயநம் பண்ணுவித்து தேவர்களுக்கு வெளிச் சிறப்பைப் பண்ணுவித்து தேவர்களுக்கு வெளிச் சிறப்பைப் பண்ணுவித்து ‘அதுதன்னை ப்ரஹ்மாசெய்தான்’ என்று அவன்தலையிலே யேறிட்டும், ருத்ரனுக்கு அந்தராத்மாவாய்ப்புக்கு நின்று த்ரிபுரதஹத்தைப் பண்ணுவித்து ருத்ரன் செய்தானென்று அவன் தலையிலே யேறிட்டும் விருது பிடிக்கப் பண்ணினாப்போலே தானே ப்ரபந்தத்தைப் பண்ணி நான் பண்ணினேனென்று என்தலையிலே யேறிட்டு எனக்கொரு ப்ரஸித்தியைத் தந்தான், தானே கார்யஞ் செய்து பிறார் தலையிலே யேறிடுகை அவனுக்குப் பண்டே ஸ்வபாவங்கீடீர்.”
English Translation
Today he has rendered my sweet soul count worthy, Making it appear like I was singing with words mine, he with words his, has sung his praise, what a wonder!
