(3649)
என்றைக்கும் என்னையுய் யக்கொண்டு போகிய,
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய்
நின்றவென் சோதியை, எஞ்சொல்லி நிற்பனோ?
பதவுரை
|
என்னை |
– |
நெடுநாளாக என்பெருமானுடையவிஷயீகாரம் பெறாதிருந்த வடியேனை |
|
என்றைக்கும் |
– |
முதலிலேயே சாச்வதமாக அங்கீகரித்து (அவ்வளவேயன்றிக்கே) |
|
போகிய அன்றைக்கு அன்று |
– |
நிகழ்கின்ற நாள்தோறும் |
|
உய்யக் கொண்டு |
– |
விசேஷ கடாஹஷம் பண்ணி |
|
என்னை தன் ஆக்கி |
– |
இப்படி விஷயீகரிக்கப் பட்டனென்னைத் தன்னைடொத்தஜ்ஞான சக்திகளுடையேனும்படியாக்கி |
|
என்னால் |
– |
என்னை உபகரணமாகக் கொண்டு |
|
தன்னை |
– |
வேதங்களுக்கு மெட்டாத பெருமை பொலிந்த தன் விஷயமாக |
|
இன் தமிழ் பாடிய |
– |
இனியதமிழ்ப் பிரந்தத்தைப் பாடுவித்துக் கொள்கின்ற |
|
ஈசனே |
– |
ஸ்வாமியாய |
|
ஆதி ஆய் நின்றஎன் சோதியை |
– |
இத்திருவாய்மொழிக்கு மூலகாரணமாயிருந்து எனக்கு வடிவழகைக் காட்டிக்கொடுத்த பெருமானைக் குறித்து |
|
என் சொல்லி நிற்பன் |
– |
எத்தைச் சொல்லித் தரிப்பேன்! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மிகவும் நீசனாயிருக்கிறவென்னை ஞானம் சக்தி முதலியன வுடையேனாம்படி பண்ணி என்னையிட்டுத் திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட வுபகாரத்தை நினைக்க நினைக்கத் தரித்திருக்ககில்லேனே! என்கிறார். என்றைக்கும், போகிய அன்றைக்கன்று என்னை உய்யக்கொண்டு என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இனதமிழ் பாடியவீசனை ஆதியாய நின்ற வென்சோதியை என் சொல்லி நிற்பன்! என்று அந்வயம். என்திறத்தில் ஒருநாள் பண்ணின விஷயீகாரமே காலமுள்ளதனையும் உஜ்ஜீவிக்கப்போரும் என்னும்படியாகவன்றோ விஷயீகரித்தது. முதல்தன்னில் விஷயீகரிக்கும்போதே தம்மை ஆத்மாந்த கிங்கரனாக விஷயீகரித்த படியை என்றைக்கும் என்றதனால் அருளிச் செய்தபடி. ஒருகால் பண்ணிவிட்ட விஷயீகாரமேயன்றிக்கே. கழிகிற நாள்தோறும் இப்படியேயன்றோ விஷயீகரித்தது! என்று வியக்கிறார் இரண்டாமடியில்.
என்னைத் தன்னாக்கி யென்பதற்கு இரண்டு படியாக நிர்வஹிப்பர்கள்; தம்மையே நாளும் வணங்கித்தொழுவார்க்குத் தர்மையேயொக்க அருள்செய்வர் என்கிற கணக்கிலே ஜ்ஞான சக்திகளால் தன்னைடொக்கும்படி பண்ணி யென்னுதல். தனக்கேயாம்படி விஷயீகரித்து என்னுதல்.
என்னால் தன்னை இன்தமிழ்பாடிய—ஐயொ? என்னிலைமையென்ன? தன்னிலைமையென்ன? ச்ருதிஸ்ம்ருதீதிஹாஸ புராணாதிகளுக்கும் எட்டாத தன்னை அல்பகக்திதனான என்னைக் கொண்டு இனிய தமிழ் நூலைக் கலிபாடுவித்துக் கொள்ளுகையாகறவிது என்னே! என்று ஈடுபடுகிறார்:
இன் தமிழ் பாடிய வீசனை-இனிமையான தமிழ்ப்பாஷையென்று பொதுவாகத் தமிழின் இனிமை சொல்லுகிறதன்று இங்கு; தமிழ் என்றது தமிழினாலாகிய இத்திருவாய்மொழிப் பிரபந்தத்தைச் சொன்னபடியாய, இன் என்கிற அடைமொழி அதிலே அந்வயிக்கும். இளையபுன்கவிதை என்றாற்போலே இழித்துச் சொல்லவேண்டியிருக்கப் புகழ்ந்து கூறலாமோவென்று சங்கிக்கவேண்டா: இது எம்பெருமானுடைய திருவாக்கேயன்றி என் வாக்கன்று என்று ஒரு தடவைக்குப் பத்து தடைவ சொல்லுகிறாராதலால் தம் வாக்கைப் புகழ்தலாகிற குற்றம் தோன்ற இடமில்லையென்க. பாடிய – என்பதற்கு பாடுவித்துக் கொண்ட என்கிற அர்த்தம் தவிர மற்றொரு இன்சுவைப் பொருளும் நம்பிள்ளை யருளிச்செய்கிறார். ஏதத்ஸாமகாயந்நாஸ்தே என்று முக்தன் ஸாமகானம் பண்ணுமாபோலே அவனும் இவரோட்டை யநுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்குவிட்டு தென்னாவென்று பாடுமாயிற்று.” என்பது ஈட்டு ஸ்ரீஸீக்தி. திருவாய்மொழியை அவதரிப்பித்து அதன் போக்யகையிலே என்பெருமான் தானே யீடுபட்டு ஆனந்தத்திற்குப் போக்கு வீடாக ஆலாபனையிட்டுப் பாடும்படியைச் சொன்னவாறு.
ஆதியாய் நின்ற என்பதற்கு – ஜகத் காரணபூதனாய் நின்ற வென்கிற பொருள் சிலர்க்குத் தோன்றும்; அதுவன்று பொருள்; தமக்கு உள்ளீடாக நின்று பாடுகையாலே திருவாய்மொழிக்கு மூலபூதனென்றபடி.
என் சோதியை—தம்முடைய கவிக்கு அவனுடைய வடிவழகே ஊற்றுவாய் என்கிறது. இங்கே ஈட்டு ஸ்ரீஸீக்தி—பிடாத்தை விழவிட்டுத் தன் வடிவழகைக் காட்டினான்; திருத்திரையெடுத்தால் கூப்பிட்டேன், அது கவியாய்த் தலைக்கட்டிற்று. வடிவழகைக் காட்டியாயிற்று கவிக்கு உள்ளுறை கொடுத்தது.” என்று (பிடாத்தை விழவிட்டு—தன் போர்வையை நீக்கி என்றபடி.)
என் சொல்லி நிற்பனோ?—பெற்ற வுபகாரத்திற்குப் பெருநன்றி பாராட்டுதலாகச் சில வார்த்தைகள் சொல்லுவதென்பது உலகவியற்கை: தாம் பெற்ற மஹோபகாரத்திற்கு ஈடுமெடுப்பு மில்லாமையாலே என்ன பேச்சுப் பேசி நன்றி பாராட்டுவ தென்று தடுமாறுகிறார்.
English Translation
Oh, How shall I sing of my radiant first-cause Lord? Day by day he makes me rise higher and higher. Each day he makes me his own, and sings through me his praise in Tamil verse
