(3560)

(3560)

அடிக்கீ ழமர்ந்து புகுந்தடியீர். வாழ்மின் என்றென் றருள்கொடுக்கும்

படிக்கே ழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்,

முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவைபத்தும்,

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.

 

பதவுரை

அடியீர்

அடியவர்களே!

அடி கீழ் அமர்ந்து புகுந்து வாழ்மின் என்று என்று

நம்முடைய திருவடிகளின் கீழே புகுந்திருந்து உஜ்ஜீவித்துப் போருங்கள்“ என்று அநவாதமும் காட்டிக்கொடுத்து,

அருள் கொடுக்கும்

க்ருபை பண்ணுகிறவனும்

படி கேழ் இல்லா பெருமானை

சீர் நிலங்களை பெருமை வாய்ந்தவனுமான ஸர்வேச்வரனைக்குறித்து

முடிப்பான் சொன்ன

ஸம்ஸாரத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த

ஆயிரத்து

ஆயிரத்தினுள்ளும்

திருவேங்கடத்துக்கு இவைபத்தும்

திருவேங்கடமலை விஷயமான இத்திருவாய்மொழியை

பிடித்தார்பிடித்தார்

ஸாக்ஷாத்தாகவும் பரம்பரையாகவும் அவலம்பித்தவர்கள்

பெரிய வானுள்

பாமாகாசமென்கிற பரமபதத்திலே

வீற்றிருந்து நிலாவுலர்

நிலை நின்று வீற்றிருப்பர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அடிக்கீழமாந்து) இத்திருவாய்மொழியைப் பற்றினவர்கள் திருநாட்டிலே நித்யாநுபலம் பண்ணப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார். எம்பெருமானுடைய திருக்கையானது திருவடியை நோக்குமாபோலே யிருப்பதுண்டே, அதற்கொரு கருத்துக்காணலாம். “அடியவர்களே! உங்களுக்கு இந்தத் திருவடியே தஞ்சம், இதன்கீழே அமர்ந்து புகுந்துயில் காட்டியருளுகிறார். பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் * கீரிடம் ஸ்ரீரங்கே சயிது என்கிற ச்லோகத்தில் * நிஹீநாநாம் முக்க்யம் சரணமிதி பாஹுஸ் த்திதர ஸ்புடம் பரூதே பாதாம்புஜயுகளம் ஆஜாநுநிஹித என்றருளிச் செய்த்தும் இங்கே அநுஸந்தேயம்.

படிக் கேழ் இல்லாப் பெருமானை – படியென்று ஒன்பு கேழ் என்று உயர்வு ஒப்புமுயர்வு மில்லாத பெருமான் •••• பிராமாணங்கள் காண்க. அன்றிக்கே “அருள் கொடுக்கும்படிக்கு, கேழ் இல்லாப் பெருமானை“ என்றுங் கொள்ளலாம் “ஆச்ரித விஷயத்தில் அருள்கொடுக்கும் ஸ்வபாவத்துக்கு ஒப்பில்லாத ஸர்வேச்சரனை“ என்பது ஈடு.

முடிப்பான் சொன்னவாயிரம் – தம்முடைய மநோரதத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அருளிச்செய்த ஆயிரமென்று உரைத்தார்கள் சில ஆசாரியர்கள், * பல நீ காட்டிப் படுப்பாயோ என்கிற ஸம்ஸார விரோதத்தை முடிக்கையிலே திருவுள்ளத்தாலே அருளிச் செய்த வாயிரம்“ என்பர் நம்பிள்ளை.

திருவேங்கடத்துக்கு இவைபத்தும் * வான் திகழுஞ சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகளாயிரமும் * என்ற திருவாய்மொழி தனியன்படியே ஆயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமாக ஸங்கல்பிக்கப்பட்டு அதில் இத்திருவாய்மொழி திருவேங்கடத்துக்குப் பகுத்துக் கொடுக்கப்பட்டதென்பது நன்கு அறியக்கிடக்கின்றது.

இப்பாட்டின் ஈற்றடியின் சுவைக்கு ஏற்ப ஈட்டில் நம்பிள்ளை யருளிச்செய்த ஸ்ரீஸூகதிகள் காண்மின் இவர் பண்ணின ப்ரபத்தியே நம்க்கு மெல்லாம் தனித்துவேண்டா இப்பாசுரத்தை சொல்லி பலத்திலே அந்வயிக்குமத்தனை. நற்கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாபோலே இவரை நினைத்து இப்பத்தும் கற்றார் பக்கலிலும் ஈச்வன் ப்ரஸந்நனாம் ஸ்ரீ விஷ்ணாழ்வானோடு வந்த நால்வர்க்கும் அவன் பண்ணின ப்ரபத்தியே அமைந்த்திறே இவனுடையவன் என்று எதிர்த்தலைக்குத் தோற்றவிருக்கு மத்தனை வேண்டுவது.

பிடித்தார் பிடித்தார் என்ற இரட்டிப்புக்கு இரண்டு வகையாக பொருள் கூறுவர் (1) சொல்லைப் பற்றினவர்கள். (2) பொருளைப் பற்றினவர்கள் என்று ஒரு நிர்வாஹம். பிடித்தாரைப் பிடித்தவர்கள் என்றபடியாய் ஸம்பந்த ஸம்பந்த ஸம்பந்திகளைச் சொன்னதாக மற்றொரு நிர்வாஹம்.

 

English Translation

This decad of the complete thousand songs by Kurugur Satakopan on Venkatam Lord –who gives refuge to devotees of his feet, -will secure the joy of Vaikunta forever.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top