(355)

(355)

கனங்குழை யாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள்

இனம்கழு வேற்றுவித்த எழில்தோள்எம் பிராமன்மலை

கனம்கொழி தெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல் ஞாலமெல்லாம்

இனம்குழு வாடும்மலை எழில்மாலிருஞ் சோலையதே

பதவுரை

கனம்

ஸ்வர்ணமயமான
குழையான் பொருட்டா

காதணியை யுடையாளான
கணை

அம்புகளை
பாரித்து

பிரயோகித்து
அரக்கர்கள் இனம்

ராஷஸ குலத்தை
கழு ஏற்றுவித்து

குலத்தின்மேல் ஏற்றினவனம்
எழில் தோள்?

அழகிய தோள்களையுடையவனுமான
இராமன்

இராமபிரான் (எழுந்தருளியிருக்கிற)
மலை

மலையான
கனம்

பொன்களை
கொழி

கொழித்துக்கொண்டு வருகின்ற
தெள் அருசி

தெளிந்த அருவிகளிலே
அறிஞர்கள் எல்லாம்

விசாலமான பூமியிலுள்ளா ரெல்லாரும்

இனக்குழு

வந்து சூழ்ந்த

வந்து சூழ்ந்து கொண்டு
ஆடும்

நீராடப்பெற்ற
எழில்

அழகிய

மாலிருஞ் சோலையிலே அதே

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இராமபிரான், பிராட்டியை லங்கையினின்றும் மீட்டுக்கொணர்கைக்காக, சரவணன் முதலிய சாக்ஷஸர்களின் மேல் அம்புகளைச் செலுத்தி, அவர்களை முடித்தமையைக் கூறுவன. முன்னடிகள். கனம்- சுநககூ. என்ற வடசொற்சிதைவு கனங்குழையாள் என்றது-  பிராட்டியின் முன்புற்ற நிலைமை பற்றி. பாரித்தல்- பரப்புதல், கழுவேற்றுவித்தல்- சூலாரோஹணஞ் செய்வித்தல்; தூக்கிலேற்றி உயிரை முடித்தல்; இதனால், கொன்றபடியைக் கூறியவாறு, அன்றி, கழு ஏற்றுவித்த- கழு என்னும் பறவைகள் ஏறி ஜீவிக்கும்படி பண்ணின என்று முரைக்கலாம்; இதனால், அரக்கர்களைப் பிணமாக்கின படியைக் கூறியவாறு; பிணங்கள் கழுகுககளுக்கு உணவாகுமன்றோ.

பின்னடிகளின் கருத்து- திருமலையிலுள்ள நீரருவிகள் பொன்களைக் கொழித்துக்கொண்டு பெருகாநிற்க, அவற்றிலே லோகமெல்லாம் திரண்டுவந்து நீராடுகிறபடியைக் கூறியவாறாம். இனம் எனினும், குழு எனினும், திரளுக்கே பெயர் …….   ……   …… (எ)

English Translation

For the sake of gold-jeweled Sita, my Lord Rama rained arrows and destroyed the Rakshasa clan. His hill abode is Malirumsolai, where pure streams flow heaping gold and where the whole world comes together in pilgrimage to take a holy dip.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top