பேர்த்துமற் றோர்களைகண் வினையாட்டியேன் நானொன்றிலேன்,
நீர்த்திரை மேலுலவி யிரைதேரும்பு தாவினங்காள்,
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன்விண்ணவர் கோனைக்கண்டு,
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர்வைகல் வந்திருந்தே.
பதவுரை
| நீர் திரை மேல் உலவி |
– |
நீரலைகளின் மேலே உலாவி |
| இரை தேரும் |
– |
உணவுப்பொருள்களை ஆராய்கின்ற |
| புதா இனங்காள் |
– |
பெருநாரைக்கூட்டங்களே! |
| வினையாட்டியேன் நான் |
– |
பாவியான நான் |
| பேர்த்து மற்று ஓர்களை கண் ஒன்று இலேன் |
– |
(உங்களையொழிய) வேறொரு தஞ்சமுடையனல்லேன் |
| (எனக்காக நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால்) | ||
| கார் திரள் மா முகில் போல் |
– |
கார்காலத்தில் திரண்ட மஹா மேகங்கள் போன்றவனான |
| கண்ணன் விண்ணவர் கோனை கண்டு |
– |
கண்ணபிரானான தேவாதி தேவனைக் கண்டு |
| வார்த்தைகள் கொண்டு |
– |
அவன் கூறும் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு |
| அருளிவந்து இருந்து |
– |
என் பக்கலில் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு |
| அருளி வந்து இருந்து |
– |
என் பக்கலில் க்ருபைபண்ணி வந்திருந்து |
| வைகல் உரையீர் |
– |
(இதுவே போதுபோக்காம்படி) நெடும்போது சொல்லிக் கொண்டிருங்கள் |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (பேர்த்துமற்றோர்) புதா வென்பது நாரையிலேயே அவந்தரஜாதிபேதம், பெருநாரை யென்பர். அப்பறவைகளைப் பிரார்த்திக்கிறாள். பயிர்கள் உலராநிற்க மேகங்கள் வீணாகக் கடலிலே வர்ஷிக்குமா போலே, தன்னுடைய கடாக்ஷமொழிய வேறொரு கதியின்றியே நான் தளர்ந்து உலர்ந்துகிடக்க, ஆனந்தமஹார்ணவத்திலே நித்ய நிமக்நராயிருக்கின்ற நித்ய ஸூரிகளுக்கே தன்னை யநுபவிக்கக் கொடுத்துக்கொண்டு அங்கேயேயிருப்பது தகுதியோவென்று ஸ்ரீ வைகுண்டநாதனிடத்தில் விண்ணப்பஞ் செய்து, பின்னை அவள் அருளிச் செய்யுமது கேட்டுவந்து அதை எனக்கு அநவரதம் சொல்லிக்கொண்டிருந்து என்னை ஆச்வஸிப்பிக்க வேணுமென்கிறாள்.
“கார்த்திரள் மாமுகில்போல் விண்ணவர்கோனை“ என்கிற சொற் சேர்த்தியழகை நோக்கி நம்பிள்ளையருளிச் செய்கிறார் – “விடாய்த்தாரிருக்க மீனுக்குத் தண்ணீர் வார்த்திருக்கிறவனை.“ என்று. வர்ஷிக்க வேண்டிய இடத்தை உபேக்ஷித்து வர்ஷிக்க வேண்டாத விடங்களிலே வர்ஷிப்பது மேகத்தின் இயல்வாகக் காணுமதொன்றாகையாலே ப்ரக்ருதத்தில் இது பொருத்தமான கருத்தாகும்.
மேகம் வர்ஷிக்க மறுத்தாலும் வாபீகூப தடாகங்களில் நின்று நீரைப்பாய்ச்சிப் பயிர்களுக்குப் பாங்கு செய்வதுண்டே, அப்படி நீதானும் முகரந்தரத்தாலே உய்யலாகாதோ வென்ன, பேர்த்து மற்றோர் களைகண் வினையாட்டியென் நானொன்றிலேன் என்கிறாள். “விழிக்குங் கண்ணிலேன் நின்கண்மற்றல்லால் வேறொருவரோடென் மனம் பற்றாது“ என்கிறாளாயிற்று.
நீர்த்திரைமேலுலவி யிரைதெரும் – எங்களைப் பரமபதத்திற்குப் போகச்சொல்லுகிறாயே ஆவரண ஜலம் விரஜை முதலானவற்றைக் கடந்து செல்லவேண்டுமே, இது ஸாத்யமோ! என்று நீங்கள் இறாய்க்கவேண்டா, நிலத்திலே உலாவுமாபோலே நீரிலே உலாவுமவர்களன்றோ நீங்கள் என்றபடி. இரைதேரும் புதாவினங்காள்! நான் உபவாஸத்தாலே மெலிந்துகிடக்க, நீங்கள் இரைதேடுவது தகுதியோ? என்னையுண்பித்தன்றோ நீங்களுண்ண வேணும் என்பது கருத்து.
இப்படிச் சொன்னவாறே அவை “நாங்கள் செய்யவேண்டுவதை அவை “நாங்கள் செய்யவேண்டுவதை நியமிக்கலாகாதோ“ வென்ன, பின்னடிகளில் நியமிக்கிறாள். வார்த்தைகள் கொண்டருளி என்று பொதுப்படச் சொல்லயிருக்கையாலே, அநுகூலமான வார்த்தையோ பிரதிகூலமான வார்த்தையோ எதுவாயிலும் அமையும், அவ்விடத்திலிருந்து கிடைத்த வார்த்தையாக இருக்கவேண்டுமத்தனையே என்பது காட்டிற்றாகும். வருகிறேன் என்றோ, வரமாட்டேன் என்றோ “இனி அவளுக்கும் நமக்கும் பணியில்லை“ என்றோ, வரமாட்டேன் என்றோ “இனி அவளுக்கும் நமக்கும் பணியில்லை“ என்றோ அவன் சொல்லும் வார்த்தை எதுவாகிலுமாம், அந்த வார்த்தையை நீங்க்ள பரமகிருபாயடு கேட்டுக்கொண்டு வந்து எப்போதும் என்னருகிலேயேயிருந்து அதைப் பன்னிப் பன்னிச் சொல்லிக்கொண்டிருப்பதே எனக்கு அபேக்ஷிதம் என்றாளாயிற்று.
அங்கிருந்து வருகிற வார்த்தை அநுகூலமாயிருக்குமாகில் இன்பமேயாகும், பிரதிகூலமாயிருக்குமாகில் அதைக் கேட்டுக்கொண்டிருக்கலாகுமோ? என்று சங்கிக்கவேணடா, ததீயத்வாகாரத்தாலே எதுவும் உத்தேச்யமே. அன்றிக்கே, “வார்த்தைகள்“ என்பதற்கு அபயப்ரதான வார்த்தைகள் என்றே பொருள் கொள்ளவுமாம்.
English Translation
O Flock of geese searching for worms in the water! Hapless me, other than him, I have no protector, Go see the monsoon-cloud Krishna, Lord of celestials, Come back to me and repeat his words incessantly.
