(3516)

(3516)

கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனை,

கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்,

கட்டெழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,

கட்டெழில் வானவர் போகமுண் பாரே.

பதவுரை

கட்டெழில் சாலை

நறுமணம் மிக்க சோலையையுடைத்தான
நல் வேங்கடம் வாணனை

திருவேங்கட மலையிலே வாழ்பவனான எம்பெருமான் விஷயமாக
கட்டெழில் தென்குருகூர் சடகோபன்சொல்

அரணழகு பொருந்திய தென்குருகூரில் அவதரித்த ஆழ்வார் அருளிச்செய்த
கட்டெழில் ஆயிரத்து

தொடையழகையுடைத்தான ஆயிரத்தினுள்ளே
இ பத்தும் வல்லவர்

இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள்
கட்டெழில் வானவர் போகம்

பரமவிலக்ஷணமான நித்யஸூரிபோகத்தை
உண்பார்

அனுபவிக்கப் பெறுவர்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கெட்டிடழில் சோலை) இப்பதிகம் கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாகமிது. முழுதுமு மிக அழகாக விளங்குகின்ற சோலைகளையுடைத்தான திருவேங்கட மலையிலே நித்யவாஸம் செய்தருளாநின்ற எம்பெரான் விஷயமாக ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரத்தினுள்ளும் இப்பதிகம் வல்லார் ஸ்வரூபாநுபமான திவ்யபோகத்தை அநுபவிக்கப்பெறுவர்களென்று பயனுரைத்ததாயிற்று.

கீழ்ப் பத்துப் பாசுரங்களிலும் திருவேங்கட முடையானுடைய ப்ரஸ்தாவமே இல்லாமலிருக்க இப்போது நிகமத்தில் “நல் வேங்கடவாணனை“ என்று கூறினவிது என்னே? எனின், கிழே மூன்றாம் பத்தில் * சொன்னால் விரோதத்தில் * தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து என்னானையென்னப்ப னெம்பெருமானுளனாக – என்னாவிலின்கவி யானொரு வர்க்குங் கொடுக்கிலேன் * என்றருளிச் செய்தவராகையாலே இங்ஙனே கூறக்குறையில்லை யென்பர்.

English Translation

This beautiful radiant decad of the thousand by beautiful radiant kurugur’s satakopan on the beautiful radiant kurugur’s Satakopan on the beautiful radiant Venkatam Lord gives beautiful radiant celestials’ joy.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top