(3508)

(3508)

நிறங்கரி யானுக்கு நீடுல குண்ட,

திறம்கிளர் வாய்ச்சிறு கள்ள னவற்கு,

கறங்கிய சக்கரக் கையவ னுக்கு,என்

பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.

பதவுரை

நிறம் கரியானுக்கு

கருநிற முடையவரும்
நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய்

(பிரளய காலத்தில்) ஸகல லோகங்களையும் அமுது செய்தபடி தோற்றுகிற திருப்ப வளத்தையுடையராய்க்கொண்டு
சிறு கள்வர் அவற்கு

சிறியவடிவிலே பெரியவுலகங்களை மறைத்துவைத்தவரும்
கறங்கிய சக்கரம் கையவனுக்கு

சுழலும் திருவாழியைக் கையிலே உடையவருமான பெருமான் விளயத்தி லீடுபட்டதினால்
என் பிறங்கு இரு கூந்தல்

விளங்குகின்ற அடர்ந்த கூந்தலை யுடையளான என்மகள்
இழந்த்து பீடு

இழந்த்து பெருமையாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நிறங் கரியானுக்கு – நான் பிரிவாற்றாமையாலே உடம்பு வெளுத்துக் கிடக்க அவர் மேனி நிறம் குறியழியாமே பசுகுபசுகென்றிருக்கிற அழகு என்னே! என்று நைகின்றாளென்கை. நீலேகுண்டு திறம கிளர்வாய் – * அண்டரண்ட பகிரண்டத்தொருமிநலமொழுமால்வரை முற்றுமுண்ட கண்டம் * என்கிறபடியே அன்று உலகமெல்லாம் பிரளயாபத்து அடையாதபடி காத்தருளின திருவாயையுடையவன் என்று கதைகளில் கேட்கிறோமத்தனை யன்றி அத்தகைய ரக்ஷகத்வம் நம்மளவில் ஒன்றுமில்லையே! என்று உருகுகின்றாளென்கை.

சிறுக்கள்வரவற்கு – “சிறு வயிற்றிலே பெரிய லோகங்களை வைத்து, பரிச்சோதிக்க வொண்ணாத சேஷ்டிதத்தையுடையவனுக்கு“ என்பது ஈடு அந்த சேஷ்டித்ததிலீடுபட்டு நைகின்றாளென்றவாறு. “சிறுகள்ளனவற்கு“ என்றும் பாடமுண்டு.

கறங்கிய சக்கரக்கையவனுக்கு – கையுந்திருவாழியுமான அழகைக்காட்டி என்னுள்ளங்கொள்ளைகொண்டபெருமான் இப்போது இங்ஙனே உபேக்ஷித்திருத்தல் தகுதியோவென்று நைகின்றாளென்கை. அன்றியே, * காசீவிப்லோக்ஷ சைத்யக்ஷபண தரணிஜத்வம்ஸ ஸூர்யாபிதாநக்ராஹ த்வேதாத்வ மாலித்ருடந * (ஸுதர்சநசதகம்) என்கிறபடியே காசீதஹனத்திலும் சிசுபால வதத்திலும் நரகாஸுர ஸம்ஹாரத்திலும் ஜயத்ரத வதத்திலும் முதலை துணித்தலிலும் மாலியை மடித்தலிலும் மற்றும் பலபல கிரிசைகளிலும் தனது விக்கிரமத்தை வலிதாகக் காட்டின திருவாழியாழ்வான் என்னுடைய விரோதிநிரஸனத்தலே வியாபரியாதிருத்தல் என்னோவென்று நைகின்றாளென்னவுமாம்.

English Translation

My well-coiffured daughter has lost her grace, -to the dark-hued Lord, the trickster who swallowed the worlds with his small mouth, to the one who bears a spinning discus in hand.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top