(3413)

(3413)

வந்தருளி யென்னெஞ் சிடங்கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்

முந்தைத் தாய்தந்தையே! முழுஏழுலகு முண்டாய்,

செந்தொ ழிலவர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர்,

அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.

பதவுரை

வந்தருளி

(பரமபதம் முதலியவற்றை விட்டு) எழுந்தருளி

என்நெஞ்சு

எனது நெஞ்சை

இடம் கொண்ட

இருப்பிடமாகக் கொண்ட

வானவர் கொழுந்தேத

நித்யஸூரிநாதனே!

உலகுக்கு

இவ்வுலகத்துக்கு

ஓர் முந்தை தாய் தந்தையே

அநாதிஸித்த மாதாபிதா வானவனே!

முழு ஏழ் உலகும் உண்டாய்

ஸகல லோகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனே!

செம் தொழிலவர்

சிறந்த அனுட்டானங்களையுடையவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களினுடைய

வேதம் வேள்வி அறா

வைதிகஸமாராதனம் இடையறாமல் நடக்கப் பெற்ற

கிரீவரமங்கலம் நகர்

வானமாமலைப்பதியிலே

அந்தம் இல் புகழாய்

முடிவில்லாத புகழையுடையவனாய் எழுந்தருளியிருப்பவனே!

அடியேனை அகற்றேல்

என்னைப் புறம்புபடுத்தா தொழியவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (வந்தருளி.) கீழ்ப்பாட்டில் “அடியேன் தொழவந்தருளே” என்றாரே; அர்ச்சாவதாரஸாமதியைக் குலைத்துக் கொண்டு கிரீவரமங்கலநகரிலிருந்து திருக்குருகூரிலே திருப்புளியடியிலே வந்து காட்சி தர வேணுமென்றாயிற்று. ஆழ்வாருடைய கோரிக்கை; அங்ஙனே வரக்காணாமையாலே ‘உபேக்ஷித்தான் போலும்’ என்றஞ்சி “பிரானே! என்னை உபேக்ஷியாதொழியவேணும்” என்கிறார்.

பாசுரம் தொடங்கும்போதே ‘வந்தருளி’ என்றிருக்கின்றபடியாலே உபேக்ஷித்தானென்று நினைப்பது எங்ஙனே பொருந்தும்; என்னில்; கீழ்ப்பாட்டிலே அபேக்ஷித்தபடியே வந்தருளினபடியைச் சொல்லுகிறதன்று இது, “வடதடமும் வைகுந்தமும் மதிள்நுவாரபதியும் இடவகைகளிகழ்ந்திட்ட என் பாலிடவகை கொண்டனையே” என்னுமாபோலே பரமபதம் முதலானவிடங்களைவிட்டுத் தம் ஹ்ருதயத்திலே வந்து குடிகொண்டிருக்கிறபடியைச் சொன்னவித்தனை.

“வந்தருளி யென்னஞ்சிடங்கொண்ட” என்கிறவிடத்திலே நம் பிள்ளையிட்டு ஹஸூதிபரமபோக்யமானது. அது வருமாறு:- “பட்டர்  ஸ்ரீபுஷ்பயாகம் அணிந்தானவாறே நஞ்சயரைப் பலகாலும் இயல்கேட்டருளுவர்; ஒரு கோடையிலே திருவீதியிலே நீரைவிட்டு எழுந்தருளியிருந்து இப்பாட்டை இயல் சொல்லுமென்று ஜீயரை அருளிச்செய்து தாம் இத்தை அதுஸந்திருந்து அநநிதரத்தே தாமும் இப்பாட்டை இயல்சொல்லி ‘யமநிதமாதி க்ரமத்தாலே யெவ்ய வஸ்துவை மநநம் பண்ணிப் புறம்புள்ள பராக்வகயறுத்து அநஸந்திக்கப்புக்காலும் அக்காள் பால்போலேயிருக்கக் கடவ நெஞ்சுகள் பதஞ்செய்யும்படி, தார்மிகராயிருப்பார் இவை சில ஈரச்சொற்களைப் பொகட்டுப் போவதே!” என்றருளிச் செய்தார்; நஞ்சீயர் இவ்வார்த்தையை உருத்தோறு மருளிச்செய்வர் என்றருளிச்செய்வர்.”

‘வானவர் கொழுந்தே!’ என விளித்து  வந்தருளி யென்னெஞ்சிடங்கொண்ட* என்கையாலே, ஸ்ரீவைகுண்டத்தை திவ்யாஸ்தானமாகவுடையவன் என்னெஞ்சை இடமாகப் பெறுகைக்குப் படாதபாடுகளும் படுவதே! என்ற ஈடுபாடு தோற்றும். அவனைத் தவிர்த்துவிஷயங்களை உகந்துபோந்த என்னெஞ்சு ஸ்ரீவைகுண்டநாதனுக்கு இடமாகப் பெற்றதே! என்று தலைசீய்க்கிறார். பெருமாள் தண்ணகாரணியத்திலே ஸ்ரீசாபங்கமஹர்ஷியின் ஆச்ரமத்திலே யெழுந்தருளி “***- ஆவாஸம் த்வரஹந்தருளி “***- ஆவாஸம் தவஹமிச்சாமி ப்ரதிஷ்டமிஹ காநநே” என்று ‘இந்நாட்டிலே தேவநீர் நியமிக்குமோரிடத்திலே குடியிருப்புக்கொள்ள விரும்பா நின்றேன்’ என்றாப்போலே இங்கு ஆழ்வார் பக்கலிலே வந்து குடியிருப்பு இரந்து பெற்றான் போலும்.

உலகுக்கு ஓர் முந்தைத் தாய் தந்தையே! = நாம் ஸாதாரணமாக நினைத்திருக்கிற மாதாபிதாக்கள், நம்மொருவர்க்கு மாதாபிதாக்களாயும் சிலகாலமிருந்து மறையக் கூடியவர்களாயுமிருப்பர்கள்; அங்ஙனன்றிக்கே ஒருநாளும் மழியாத மாதாபிதா எம்பெருமானேயாவன்.

முழுவேழுலகுமுண்டாய்! = மாதாவானவன் பத்துமாஸம் வயிற்றிலே வைத்துச் சுமப்பதானது ‘பிறந்து வளர்ந்து பரிபக்வனானால் நமக்கு ப்ரயோஜனப்படும்’ என்றாயிற்று; எம்பெருமானாகிற மாதாவின்படி. அப்படியல்லாமல் இவை நோவுபடாதொழியப் பார்த்திருக்கையே தம்பேறாயிருக்கும்.

செந்தொழிலவர் = செவ்விய தொழிலாவது கைங்கரியம்; அநந்யப்ரயோஜநமாகத் தொண்டுசெய்கை. அப்படித் தொண்டுபூண்ட முதமுண்ணும் ஸ்ரீவைஷ்ணவர்களினுடைய தேவகோஷமும், வைதிகக்ரியா கோலாஹலமும் இடயறானு செல்லுமிடமான கிரீவரமங்கல நகரிலே எல்லைகாணமுடியாத புகழோடே நித்யஸந்நிதி பண்ணியிருக்கும் பெருமானே! அடியேனைக் கைவிடாதருளவேணும்.

 

English Translation

O Lord of celestials, through grace, you have enteed my heart, O Lord of eternal glory, First-cause of the Universe.  Father, Mother, Swallower-of-the-seven-worlds.  O Resident of Sivaramangala-nagar, where godly men perform Vedic sacrifice endlessly, pray do not forsake me!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top