(3412)
ஏன மாய்நிலங் கீண்டவென் அப்பனே! கண்ணா! என்று மென்னை யாளுடை,
வானநா யகனே! மணிமா ணிக்கச் சுடரே,
தேன மாம்பொழில் தண்சிரீ வரமங்கலத் தவர்க்கை தொழவுறை
வான மாமலை யே!அடி யேன்தொழ வந்தருளே.
பதவுரை
|
ஏனம் ஆய் |
– |
மஹாவராஹரூபியாய் |
|
நீலம் கீண்ட |
– |
பூமியைக்குத்தியெடுத்து வந்து ஸ்வஸ்தானத்திலே சேர்த்த |
|
என் அப்பனே |
– |
எம்பெருமானே! |
|
கண்ணா |
– |
கண்ணபிரானே! |
|
என்றும் |
– |
எந்நாளும் |
|
என்னை ஆள் உடை |
– |
என்னை அடிமை கொள்ளுகிற |
|
நானம் நாயகனே |
– |
நித்யஸூரிநாதனே! |
|
மணி மாணிக்கம் சுடரே |
– |
மணி மாணிக்கம் போன்ற தேஜஸ்ஸையுடையவனே! |
|
தேவை மா பொழில் |
– |
தேனையுடைய மாந்தோப்பு சூழ்ந்த |
|
தண் |
– |
குளிர்ந்த |
|
கிரீவரமங்கலத்தவர் |
– |
கிரீவரமங்கயிலுள்ளவர்கள் |
|
கை தொழ |
– |
வணங்கும்படியாக |
|
உறை |
– |
அங்கு நித்யவாஸம் பண்ணுகிற |
|
வானமாமலையே |
– |
வானமாமலைப்பெருமானே! |
|
அடியேன் தொழ |
– |
அடியேன் தொழும்படியாக |
|
வந்தருள் |
– |
இங்கே யெழுந்தருளாய் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** (ஏனமாய் நிலங்கண்ட.) நான் ஆசைப்பட்டபடியே அடிமை செய்யலாம்படி வந்தருளவேணுமென்கிறார்.
பிரளயத்துக்குள்ளான பூமியை வராஹருக்கொண்டு எடுத்தாப்போலே ஸம்ஸார வெள்ளத்துக்குள்ளே “ஆவாரார் துணையென்று அலைநீர்கடலுளழுந்தும் நாவாய்போல், பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க” என்கிறபடியே அலைந்துழல்கின்ற என்னையும் எடுத்தருளவேணுமென்னும் கருத்துப்படி “ஏனமாய் நிலங்கீண்டவென்னப்பனே!” என்கிறார்.
கண்ணா! = “வம்ச பூமிகளை உத்தரிக்கக் கீழ்க்குலம்புக்க வராஹ கோபலரைப்போலே” என்கிற ஆசார்யஹ்ருதய திவ்யஸூக்தி இங்கே நினைக்கத்தக்கது. நிமக்கரையுயர்த்துவதற்காகவே யன்றோ நீ வராஹரூபியாயுத் கோபாலமூர்த்தியாயும் தாழவிழிந்தது; அப்படிப்பட்ட நீ என்னையும் உயரத் தூக்க வேண்டாவோ என்பது உள்ளுறை.
என்றும் என்னையாறுடை வானநாயகனே! = நீ வானநாயகனாயிருக்கும்போதும் (அதாவது, பரம பதத்திலே யெழுந்தருளியிருக்கும்போதும்) என்னை ஆட்கொள்ளும்படியையன்றோ ஆராய்ந்து போருவது! என்ற கருத்துக்காண்க.
(தேனமாம்பொழில் இத்யாதி.) தேன்மிக்க மாம்பொழில் சூழ்ந்த கிரிவரமங்கன் நகரிலுள்ளார்கள் ஸ்வரூபாதுரூபமான கைங்கர்யத்தைப் பண்ணுமாறு எழுந்தருளியிருக்கிற வானமாமலை யெம்பெருமானே! நானும் அடிமை செய்து வாழும்படியாக வந்து தோற்றவேணும் என்கிறார்.
‘வானமாமலை’ என்பது திவ்யதேசத்தின் திருநாமமாக வழங்கி வந்தாலும் இது எம்பெருமானுடைய திருநாமமேயென்பது இங்கு ஸ்பஷ்டமாகிறது. ஆநாசத்தளவும் சென்று கிட்டும்படி ஓங்கின மலைபோலே யிராகின்ற எம்பெருமானை மலையாகலே கூறுதல் லக்ஷணையென்க.
English Translation
O, Dark effulgent Vaikunta Lord who came as a boar! My Father, my Krishna, ever my Master of the great-heavenly-hill Vanamalai worshipped by the falk of Sivaramangala-nagar amid sweet mango groves! Pray come to me, that I too may worship you!
