(3394)

(3394)

கழீயமிக்கதோர் காதல ளிவளென் றன்னை காணக்கொடாள்,

வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,

குழுமித் தேவர் குழாங்கள்தொழச் சோதிவெள் ளத்தினுள்ளே,

எழுவதோ ருருவென் னெஞ்சுள்ளெழும் ஆர்க்கு மறிவரிதே.

 

பதவுரை

இவள்

இப்பெண்பிள்ளை

கழிய மிக்கது ஓர் காதலன் என்று

மிகவும் அதிசயித்த விலஷணமான காதலையுடையவள் என்று சொல்லி

அன்னை

தாயானவள்

காண கொடான்

நம்பியை ஸேவிக்க வொட்டுகிறதில்லை

ஏழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;

தேவர் குழாங்கள்

நித்ய ஸூரிகளின் திரள்கள்

குழுவி

நெருங்கி

கை தொழ

ஸேவிக்கும்படி

சோதிவெள்ளத்தின் உள்ளே

தேஜஸ்ஸமுஹத்தினிடையிலே

எழுவது

எழுகின்ற

ஓர் உரு

விலக்ஷணமான விக்ரஹமானது

என் நெஞ்சுள் எழும்

எனது நெஞ்சுக்குள்ளே பிரகாசிக்கின்றது; (அது)

ஆர்க்கும்

எப்படிப்பட்டவர்கட்கும்

அறிவு அரிது

அறியமுடியாததேயாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கழியமிக்கதோர்.) லோகத்தில் அமேத விஷயங்களைப் பிரிந்தால் நாட்செல்ல நாட்செல்ல ஸ்நேஹம் குறைந்து வருவதைக் காணாகின்றோம்; அப்படியிருக்கவும் இப்பெண்பிள்ளை தான் கலந்து பிரிந்த விஷயத்தில் மேன்மேலும் காதல்மையல் ஏறுகின்றாள். ஆதனால் இனி இவள் ஒருகாலும் திருக்குறுங்குடி அம்பியை ஸேவிக்கவொண்ணாமே செய்துவிடவேணும்’ என்று அன்னை சொல்லிக்கொண்டிருக்க அது கேட்ட தலைவி கூறுகின்றாள்.

உலகத்தாருடைய காதலின் நியாயமோ எவ்விடத்தும் பார்ப்பது? லெளகிகர்  ஈடுபடும் விஷயத்திலோ நான் ஈடுபட்டது; குறைவற்ற கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நமபி பக்கலின்றோ நாள் ஈடுபடப்பெற்றது. நித்யஸூரிகளினுடைய திரளானவை பெரு வெள்ளத்திலிழிவாரைப் போலே கை கோத்தக்கொண்டு இழியவேண்டும்படி தேஜோ ராசிமயமானதோர் திருவுருவம் என்னெஞ்சினுள்ளே திகழா நின்றது; *** = நித்யமிந்த்ரியபதாதிகம் மஹோ யோகிநாமபி ஸுதுரகம் திய: அப்யநுச்ரவ சிரஸ்ஸு துர்க்கரஹம் * என்னுமாபோலே அதுதான் யார்க்கும் நிலமல்லாதது; அன்னதோருரு என்னெஞ்சினுள்ளே எழாநிற்க, தாய்மார் காணக்கொடுத்தாலென்ன? காணக்கொடாவிடிலென்ன? என்றாளாயிற்று.

 

English Translation

My mother let no one see me, saying, “She is growing amorous day by day”. After seeing the Lord of abiding fame in Tirukkurungudi, a radiant form of flooding effulgence, appears in my heart worshipped by hordes of celestials, hard for anyone’s understanding.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top