(3363)
மாசறு சோதியென் செய்ய வாய்மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை யாதி மூர்த்தியை நாடியே,
பாசற வெய்தி யறிவிழந் தெனைநா ளையம்?,
ஏசறு மூரவர் கவ்வை தோழீ. என்செய்யுமே?
பதவுரை
|
மாறு அறுசோதி |
– |
அழுக்கற்ற தேஜஸ்ஸையுடைய |
|
செய்ய வாய் |
– |
சிவந்த திருப்பவளத்தையுடைய |
|
என் மணி குன்றத்தை |
– |
மாணிக்கமலைபோல் எனக்கு யோக்யனானவனும், |
|
ஆக அது சீலனை |
– |
குற்றமற்ற சீலகுணத்தையுடையவனும் |
|
ஆதி மூர்த்தியை |
– |
முழுமுதற் கடவுளுமான எம்பெருமானை |
|
நாடி |
– |
தேடி |
|
பாக அறவு எய்தி |
– |
உடம்பில் பசுமை நிறம் அழிவடைந்து |
|
அறிவு இழந்து |
– |
அறிவும் இழக்கப்பெற்று |
|
ஏனை நானையம் |
– |
எத்தனை காலமிருப்போம்? |
|
தோழி |
– |
தோழியே! |
|
ஏசு அறும் |
– |
ஏசுவதற்கென்றே அற்றுத்தீர்ந்த |
|
ஊரவர் |
– |
ஊராருடைய |
|
கவ்வை |
– |
பழிமொழி |
|
என் செய்யும் |
– |
யாது செய்யும்? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (மாசறுசோதி.) பராங்குச நாயகி மடலூர்வதாக எண்ணினபடியை அறிந்ததோழி அதனை விலக்கப்புகுந்து ‘ஊரார் பழிசொல்வர்காண்’ என்ன; அவனுடைய அழகு முதலியவற்றிலே அகப்பட்டுக் கலங்கின நான் ஊரார் பழியை லக்ஷியம் பண்ணும் நிலைமையிலே இலேன் என்கிறாள் தலைவி.
முதலடியினால் எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற வடிவழகு பேசப்படுகிறது. “மடலெடுக்கை மாறு என்றிருக்கிறாள் தோழி; மடலெடாதொழிகை மாசு என்றிருக்கிறாளிவள். வ்யதிரேகத்தில் இப்படி. ஆற்றாமை விளையாததாகில் நாம் காண்கிற விஷயங்களேபாதியாமே- வடிவிலே யணைந்தவளாகையாலே முற்பட வடிவிலே மண்டுகிறாள்” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்க.
வெறும் வடிவழகு மாத்திரத்தைக்கண்டு துடிக்கிரேனல்லேன்; அநவாயில் சில குணங்களையுங் கண்டு துடிக்கிறேன் காண் என்கிறாள்- ஆரறு சீலணை என்பதனால், ஆக என்றாலும் மாசு என்றாலும் குற்றம் என்பதே பொருள்; குற்றமற்ற சீலமானவது, கலக்கும்போது தன்பேறாகவே கலந்தபடி.
பாசறவெய்தி = இதற்குப் பலவகையாகப் பொருள் கூறுவர். (1) பாசறவு என்று துக்கத்திற்குப் பெயர்; அதை எய்தி. (20) பாச அறவு – என்று பிரித்து, பாசு – பசுமைநிறமானது, அறவு- அழிந்துபோவது; ஸவவர்ணியமடைந்து என்றபடி. (3) பாசு என்று பாசமாய். (அதாவது பற்று) பந்துக்கள் பக்கல் பாசம் நீங்கி. (4) அற
என்பதற்கு ‘முழுவதும்’ என்றும் ‘மிகவும்’ என்றும் பொருளுண்டாகையாலே ஸ்நேஹம் முழுவதையும் அவன் பக்கலிலேயடைந்து என்னவுமாம்.
எம்பெருமான் நம்மை நாடிக்கொண்டு வரவேணுமேயன்றி நாமாக அவளை நாடுவது ஸ்வரூபஜ்ஞானத்திற்குப் போராதேயென்று சிலர் சொல்ல, அறிவிழந்து எனைநாளையும் என்கிறான். அறிவு (ஸ்வரூபஜ்ஞானம்) அடியோடே தொலைந்து எத்தனையோ நாள் ஆயிற்றே என்றபடி.
இங்கே நம்பிள்ளை யீடு:-நமயர்வறமதிகலமருளப்பெற்றவன்றே போயிற்றில்லையோ நம்முடைய அறிவு; திர்யக்கின் காலிலே விழுந்து தூதுவிட்டவன்று அது க்ஞாநகார்யம் என்றிருந்தாயோ இன்றிருந்து கற்பிக்கைக்கு, அன்றே *மதியெல்லாமுள் கலங்கிற்றில்லையோ? தன்பக்கலிலே கைவைத்தால் மற்றென்றறியாதபடி பண்ணும் விஷயமிறே. ‘பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதாரத்தோள்’ என்னக்கடவதிறே. *** என்று ப்ராப்திஸமயத்தில் இவ்வருகுள்ளவற்றை நினையாதபடி பண்ணுகையே யன்றிக்கே ஜ்ஞானம் பிறந்த மையமே பிடித்தும் இவ்வருகுள்ளவற்றை நினையாமே பண்ணவல்ல விஷயமன்றோ. தன்னையுமநுஸந்தித்து லோகயாத்ரையையு மநுஸந்திக்கும்படியோ அவன்படி.” என்பதாம்.
ஆனாலும் ஊரார் சொல்லும்படிக்கு அஞ்சவேண்டாவோ வென்ன, ஏசறு முரவர்கவ்வை தோழியென் செய்யுமே என்கிறான். ஏக அறும் ஊரவர் = ஏசுகையிலே அற்றுத் தீர்ந்திருக்கிற ஊரார் என்றபடி. ஏசுவதற்கென்றே பிறந்திருக்கிற ஊராருடைய பழிமொழிகள் நமக்கு அவத்யமோ? அதுவே நமக்குத் தாரகமன்றோ வென்கை.
மடலெடுக்கிற ப்ரஸ்தாவம் இங்கு இல்லாமற் போனாலும் மேலே “மடலூர்துமோ” என்றும் “யாமடலூர்ந்தும்” என்றும் ஸ்பஷ்டமாகச் சொல்லுகையாலே மடலூரும் நோக்கத்தையுட் கொண்டே இவையருளிச்செய்வதாகக் கொள்கை.
English Translation
Sister, I sought my ever-radiant faultless First-Lord, my red-lipped spotless mountain-gem. How long ago I-became impassioned and slipped into madness! What harm can the world’s slander do now?
