(3362)

(3362)

கலியுக மொன்றுமின் றிக்கே தன்னடி யார்க்கருள் செய்யும்,

மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பி ரான்கண்ணன் றன்னை,

கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமா றன்சட கோபன்,

ஒலிபுக ழாயிரத் திப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.

 

பதவுரை

தன் அடியார்க்கு

தன் அடியவர்களுக்கு

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே

கலியுகதோஷம் ஒன்றும் தட்டாதபடி

அருள் செய்யும்

கிருபை பண்ணுகின்ற

மலியும் சுடர் ஒளி மூர்த்தி

மிகுந்த பிரகாசம் பொருந்திய தேஜோமயு திவ்யவிரஹதிதையுடையவனும்

மாயம்  பிரான்.

வேஷ்டி தங்களையுடைய ப்ரபுவுமான

கண்ணன் தன்னை

எம்பெருமானைக் குறித்து

கலி வயல்

நிறைந்த வயல்களையுடைய

தென் திசை

தென் திசையிலுள்ள

குருகூர்

திருநகரிக்குத்தலைவரான

காரி மாறன் சடகோபன்

ஆழ்வார்

புகழ்

கீர்த்திமிக்க

ஆயிரத்து பத்து

ஆயிரத்தினுள் இத்திருவாய்மொழி

உள்ளத்தை

(கற்பாருடைய) நெஞ்சை

மாசு அருக்கும்

கல்மஷமற்றதாகச் செய்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கலியுகமொன்று மின்றிக்கே) இத்திருவாய்மொழியான தன்னைக் கற்பவர்களது நெஞ்சிலுள்ள ஸகலவிதமான அழுக்கையுமறுக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறார். தேவதாந்தரங்களிலுண்டான பரத்வஜ்ஞானமும், எம்பெருமானைப் பணிந்தும் அற்பப்பிரயோஜனங்களில் விருப்புற்றிருக்கையும் முதலியன மனமாக ஆகும்; இத்திருவாய்மொழியை ஓதவே அவை தீருமென்கிறது.

கலியுகமொன்றுமின்றிக்கெ – “***“ * என்கிற பிரமாணம் இங்கு அறியத்தக்கது. எம்பெருமானை இடைவிடாது. நெஞ்சிலே கொண்டிருக்கை க்ருத்யுகம், அப்படிக் கொண்டிருக்கமாட்டாமை கலியுகம் என்றபடி. கலியுகமொன்று மின்றிக்கே தன்னடியார்க்கு அருள்செய்கையாவது – தன்னை இடைவிடாது சிந்திக்களல்லராம்படி அநுக்ரஹித்தல்.

 

English Translation

This decad of the famous thousand songs, sung by Karimaran Satakopan of Kurugur surrounded by happy fields, addressed to the wonder-Lord, the radiant Krishna, destroyer of Kali, will cleanse devotees’ hearts.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top